அன்புத் தந்தை அம்பேத்கர் 029

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அன்புத் தந்தை அம்பேத்கர் 029

அன்புத்தந்தை அம்பேத்கர் 


*ச* ட்டங்களை சமத்துவமாய்  இயற்றிய "சரித்திர நாயகன்"//


*சா* திக்கெதிராய் போர் தொடுத்த "சத்தியவான்"//

*சி* திலமடைந்த ஏழைகளின் வாழ்வில் சிரிப்பைத் தந்த "சித்தர்"//

*சீ* றிப்பாய்ந்த அராஜகங்களை அடக்கிய "தன்மானச் சிங்கம்"//

*சு* க்குநூறாய் உடைந்த இதயங்களையும் சுதந்திரமாய் உலா வர வைத்த "ஏழைகளின் விடிவெள்ளி"//

*சூ* ட்சமங்களையும் 
சுட்டெரித்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் சுடரொளி வீசிய  "சூரியன்"//

*செ* ந்நீர் வடித்த மக்களின் வாழ்வை செம்மையாக்கிய "செழியன்"//


*சே* ர் ஒன்று சேர்,கற்பி,புரட்சி செய் என்றுரைத்து ஒற்றுமையை வளர்த்த "புரட்சியாளர்"//


*சை* யமாய் (மலையாய்) நின்று பெண் உரிமையை மீட்டெடுத்த "பகலவன்"//


*சொ* ல்லெண்ணாத் துயரத்தை அடைந்தவர்களின் வாழ்வில் சொர்க்கத்தை ஏற்படுத்திய "தனித்துவமிக்க தந்தை"//


*சோ* தனைகளை சாதனைகளாக மாற்றிந்தந்த "சொல்லின் செல்வர்"//

சௌக்கியமாய் எழைமக்கள் வாழ வழி வகுத்த "சட்டமேதை"//


வேண்டாமல் *வரமாய்* வந்த கடவுள் "அறிவர் அம்பேத்கர்"//


கேட்காமல் *கொடையாய்* வந்த வள்ளல் எங்கள் "பீமாராவ்ராம்ஜி அம்பேத்கர்"//


-  தமிழ்கவி.அ.பாண்டி முனியம்மாள்,
இடைநிலை ஆசிரியர்,
மஞ்சணக்காரா மாநகராட்சி ஆரம்பப்பள்ளி
மதுரை.