பெரியார்

தந்தை பெரியார் பிறந்த நாள் கவிதை

பெரியார்

ஈரோட்டில்பிறப்பு!

இளமை பதினெட்டில் சமூகசேவை தொடக்கம்!

சமூகநீதி !தீண்டாமை!
பெண்ணடிமை அகற்றவந்த சூரியன்!

 சமூகவிவசாய களைகளை அகற்றி!
பதறுகளைநீக்கி!

நெல்மணிகளை களத்தில் பிர்த்தெடுத்த சமூகநல விவசாயி!

மூடநம்பிக்கைகளில்! பச்சைவாழை மடல்களாய் கிடந்ததமிழரைகூட!

பற்றிஎரியவைத்து
பகுத்தறிவு ஊட்டிய பண்பாளர்!!

கல்லுகடைமறியல் களம்கண்டவர்!
கேரளத்தில் தீண்டாமைக்கு எதிரானமுதல் போராளி!என்றுநின்றவர்!!

  நீர் அமைத்த வழித்தடமே !அறிஞர் அண்ணா!
கலைஞர்கருணாநீதி!
எம் ஜி ஆர் பயணித்த
தமிழக அரசியல் கழகமாய் 
தொடர்கிறது!!

உம் பிறந்தநாள்
சமூகநீதிநாளாக! கொண்டாடதமிழகம்
கடமையில் உயர்ந்தது!!

வாழும்போது கையில் தூக்கிய சமூகநீதி
ஆயுதம்!
நீர் வீழும் போதும் விழவில்லையே!

உம்114வது அகவை தினவாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்