உலக இளைஞர் தினம்

உலக இளைஞர் தினம் கவிதை

உலக இளைஞர் தினம்

இளையோர் எனும் எழுச்சிப்படை

சோதனைகளை சாதனைகளாக நீ மாற்றி!

வெறுமையை முழுமையாக்கி
முடியாததை முடித்துக்காட்டி!

கனவு என்றாலும்
 உயர்வானதைக் கண்டு!

எளிமையை வலிமையோடு உயர்த்தி நாட்டி!

உன்னால் முடியாதது ஒன்று இல்லை 
என்ற உயர்ந்த சிந்தனையை  ஊட்டி!

பல் துறைக்கு வித்தகர் ஆக்கி!

ஆழ்ந்த
சிந்தனையோடு உயர்ந்தயெண்ணத்தை போற்றி!

பரந்த மனதோடு
பிறர் உன்னை 
பிரம்மிப்போடு
நோக்கும் வகையை தேடி!

உலகில் உள்ள நல்லதை நாடி!

உதவி செய்யும் கரங்களாக மாறி!

புகழின் உச்சியை கண்டு ஓடி!

படைத்திடு பல சாதனைகளை
வெற்றியை 
என்னும் பூ மாலையை பெற்றிடு!

சீரி கொண்டு நீ எழுந்திடு!

எழுச்சி மிக்க சமுதாயத்தை உருவாக்கிடு!

எல்லோருடைய உள்ளத்திலும்
குன்றென  நின்றிடு!

இளைஞனே சீர்மிக்க இந்தியாவை உருவாக்கிடு!

முனைவர் 
ந. கல்யாணி
உதவிபேராசிரியர்
எஸ் .ஆர். எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

***********************************************

இளமையின் வலிமை
***********************
அறிவு வளர
ஆற்றல் பிறக்கும்
முறிவு இல்லாத
முன்னேற்றம் கொடுக்கும்

விழுந்து தெறிக்கும்
நீர்த்துளியாய் விவேகம்
அழுத்தமில்லா ஆர்வத்தில் அனைத்தும்    நடத்தும்

உதிரத்தில் துடிப்பு
உரத்தோடு உருவாகும்
நதியாக ஓடியே
நம்பிக்கை வளர்க்கும்

கனவை நோக்கி
கடமை இருக்கும்
மனதை பலமாக்கி
மகத்துவம் படைக்கும்

துணிச்சல் ஊறும்
துவளா மனதோடு
ஏணியில் ஏறிட
ஏற்றத்தைத் தேடும்

திறமைக்கான அடித்தளத்தை
திறட்டிட எண்ணும்
மறத்தோடு  எழுந்திட
மனக்கதவு திறக்கும்

இலக்கு ஒன்றே
இலட்சியத்தின் குறிக்கோல்
பலமுறை தோற்றாலும்
பலத்தோடு சாதிக்கும்

புத்துயிர் பெற்றவிதையாய்
புதுவுலகம் காணும்
மரமாய் முளைத்து
விருட்சமாய் காட்சியளிக்கும்

தமிழ்நதி கிருஷ் அபி