நான்காவது கனி

உலகத் தேங்காய் தினம் கவிதை

நான்காவது கனி


நான்காவது கனி...

*தத்தெடுத்த*  பிள்ளை...
*தாகம் தணிக்க*
வந்த பிள்ளை...

*உண்டு கழிக்க*
சுவை உணவாகவும்...
*இறைவனுக்கு*
படைக்க உகந்த அமுதாகவும்...

*படுத்து உறங்க*
பாயாகவும்...
*தொகுத்து வேய்ந்தால்*
வீட்டு கூரையாகவும்...
*கொட்டில்*
கூடாரமாகவும்...
*முறைமாமனின்*
பாதுகாப்பு அரணாகவும்...

*சுத்தம் செய்ய*
துடைப்பானாகவும்...
*மட்டை* உரமாகவும்...
*உதிரிகள்*
கயிராகவும்...

*முற்றினகாய்*
கொப்பரை யாகவும்...
*ஆட்டிஎடுத்தால்*
மணக்கும் எண்ணெயாகவும்...
*சக்கை*
புண்ணாக்காகவும்...

நம் துன்பம் அகல தண்டனை பெறும் 
*முதல் பொருளாகவும்...*

*இல்லற* வாழ்விற்கும்...
*இறுதி*
சடங்கிற்கும்...
*உன்னத பொருளாகவும்...*

நீங்கள் 
பறிப்பதால்
 நான்  *காய்...*
நானாகவே
விழுந்தால்
நானும் *கனியே...*

இவ்வளவு
பயன்பாட்டில்
இருக்கும் என்னை ஏன் 
*முக்கனிகளில்* இருந்து 
*விலக்கு அளித்தார்கள்..???*
மேலும்
*மறுபரிசீலனை*
செய்ய வேண்டுகிறேன்...

இப்படிக்கு
தேங்கனி...


கவிஞர்
ப.சூர்யசந்திரன்