விவசாயிகள் தினம்

விவசாயிகள் தினம் கவிதை

விவசாயிகள் தினம்

விவசாயம்

விண்ணிற்கு ஆராய்ச்சி  செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்....
மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே......

உலக வாழ்வின் அடிப்படை  ஆதாரம் விவசாயமே.....
 தாய் இன்றி சேய் இல்லை என்பது போல 
விவசாயம் இன்றி அன்னம் இல்லையே....

நாம் இஷ்டப் பட்டு உணவு உண்ண கஷ்டப் பட்டு  உழைப்பவர்கள் விவசாயிகள்.....

எத்தனை நஷ்டத்தை எதிர் கொண்டாலும் அதே விவசாயத்தை தான் விரும்புபவர்கள் விவசாயிகள்........

உழவன் இல்லையேல் ஒரு நாடு  வறட்சி நாடாகிவிடும் என்பதை மறக்காதீர்கள்....

அன்று ஒரு பருக்கை சோறு சிந்தினால் அதை எடுத்து போட்டு சாப்பிட்ட காலம் மாறி  அதன் மதிப்பு தெரியாத காலத்தில் வாழுகின்றனர் வளரும் சந்ததியினர்......

படைப்பது கடவுளின் தொழில் என்றால்
பயிரிடுவது விவசாயிகளின் தொழில்........

விவசாயிகள் சேற்றில் கால் வைக்காவிடில் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை எப்போதும் மறவாதே......

 விதைகள் விதைப்பதில் விடா முயற்ச்சி உள்ள சாதனையாளன் விவசாயிகளே.......

வருங்கால சந்ததியினர் உழவின் மகத்துவம் அறிய வேண்டுமே

அன்னம் இல்லையேல் உண்ண உணவில்லை என்பதனை எல்லோரும் உணர  வேண்டுமே....

எத்தனை இன்னல்கள் வந்தாலும்  விவசாயத்தை கை விடாத திறமை சாலிகள்......

 தினமும் சோறு சாப்பிட்டாலும் நம்மில் எத்தனை பேர் விவசாயி  ஆக நினைக்கின்றோம்...
  
உழவுத் தொழில் நம் அனைவரின் உணவுத் தொழில் என்பதை 
மற வோம்...........

உழவுத் தொழிலை உலகுக்கு எடுத்துறைப்போம்

விவசாயிகள் வாழ விவசாயம் வாழ்க.......

கிருஷ் அபி இலங்கை