வடிவழகி

காதல் கவிதை

வடிவழகி

வடிவழகியே
நீ தொட்டுவிட! 
பட்டமரமும் பூ பூத்தது! 
பாலை நிலமும் பூத்துக் குலுங்குது!

வற்றி போன நதியும் வழிந்து ஓடுகிறது!
வயதான இதயமும்
வயதை இளமையாக்கி! 
துடிப்பை எண்பதிலிருந்து 
எண்ணூறாக்குகிறது!

பள்ளிக் கனவுகள் சொல்லிக் கொடுக்கிறது!
பசுமை நினைவுகள் உன்னால் உயிர் பெறுகிறது!!

பள்ளிக்கு நடந்து வந்த காலத்தை! நினைக்க வைக்கிறது!
 பாதி வழி தூரம் சென்ற பின்பும்,, திரும்பத் ,திரும்ப! 
பார்த்து தவித்ததை நினைக்க வைக்கிறது!

ஓ !அது ஒரு நிலாக்காலம்!
ஓ !அது ஒரு தேய்பிறை இல்லாத முழு !நிலவு காலம்!

வருஷமெல்லாம் வளர்பிறையாய்,,! 
வலம் வருகிறது!!
வாடாத உந்தன் இளமை காலம்!!

கொள்ளை அழகு கொண்ட பேரழகியே! 
என்னை கொள்ளை கொண்டு போனது உந்தன் விழி அழகியே!

உன் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்!!

என் இதயம் ஏனோ! உண்மை எனவே! நினைத்து துடிக்கும் அது ஒரு நிலாக்காலம் !!

கோடை காணாத வசந்த காலம்! வெப்பம் தழுவாத வெண்பனிகுளிர் காலம்!

உந்தன் நினைவுகள் எந்தன் இதய வீணையையை மீட்க! ஆனந்த ராகம்!! ஆலோலம் பாடும்!!
 அவள் அழகியலை நினைத்தே வாடும்!!

தொடுதிரையில் அவள் அழகியலை நாளும் தேடும்!!

கவிதை மாணிக்கம்