தொட்டா சிணுங்கி...! 034

சிந்தனைச் சிற்பி சிறுகதை ப் போட்டி

தொட்டா சிணுங்கி...! 034

தொட்டாச்சிணுங்கி
        கங்காகுளம் என்ற ஊரில் மாதவன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி மங்களம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனாள். மகள்  மணிமேகலை இரண்டு வயதாக இருக்கும் பொழுதே இறந்துவிட்டாள். மனைவி இறந்தவுடன் அவனை மறுமணம் செய்யச் சொல்லி உறவுகள் வற்புறுத்தினர். ஆனால் மாதவன் மறுத்துவிட்டான். எனக்கு என் மகள் உருவில் மங்களம் வாழ்கிறாள் . மகளை வளர்த்து ஆளாக்கி நல்லவழி காட்டி முன்னேற வைக்க வேண்டும்என்ற கடமை எனக்குள்ளது. எனவே இனி எனக்கு தனி வாழ்க்கை இல்லை என் மகள் தான் எல்லாம் என்று கூறிவிட்டான். எனவே அவனை யாரும்ஒன்றும் சொல்லவில்லை.  நல்ல அறிவோடு வளர்ந்துவந்தாள். அன்பும் பண்பும் கொண்டு பாசமும் பணிவும் கொண்டு வாழ்ந்து வந்தாள். எல்லோரிடமும் நன்கு அன்பாகப் பழகினாள். யாருக்கும் உதஙி செய்வாள். வகுப்பில் முதல் மாணவியாக வருவாள். ஆசிரியர்களிடம் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள்வாள். எல்லோரிடமும் அவளைப் பிடிக்கும் இத்தனை சிறந்த குணங்கள் இருக்க அவளிடம் ஒரு வேண்டாத குணமும் இருந்தது. அது தான் தொட்டாச்சிணுங்கி குணம் . யாராவது கடிந்து பேசிவிட்டால் முகம் வாடி விடுவாள். அந்தக் கணமே முகம் மாறி கண்ணில் நீர் ததும்பி உதடுகள் துடிக்க எப்போதடா கண்ணீரை வெளிவிடுவோம் என்று கண்கள் ஏங்கும் நிலைக்கு வந்துவிடுவாள். இதிலிருந்து சரியாக ஒரு வாரமாகும் . அதுவரை சாப்பிடமாட்டடாள், தூங்க மாட்டாள். முகமெல்லாம் வாடி எதையோ பறி கொடுத்தது போல இருப்பாள். மாதவன் எவ்வளவோ மகளுக்கு சொல்லிப் பார்த்தான் . ஆனால் கேட்கவில்லை. மாற்றவில்லை மாறவில்லை. எனவே இதை அப்படியே அவள் போக்கில் விட்டுப் பிடிப்போம் என்று பேசாமல் இருந்துவிட்டான். மனைவிக்கு பிறகு மகள் தான் எல்லாம் என்று வாழ்ந்தான் .எனவே மகளுக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டான்.
மகளை பார்த்து பார்த்து வளர்த்தான். மகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தாள் .மணி மேகலை பெரியபிள்ளையாக வயதுக்கு வந்துவிட்டாள் . இதனை எடுத்து செய்ய ஆளில்லாமல் அவனும்பக்கத்து வீட்டுகாரர்களின் உதவியோடு இந்த விசேசத்தை நடத்தி முடித்தான் .பத்து பேரை அழைத்து சாப்பாடு போட்டு ஒரளவுக்கு சிறப்பாகச் செய்தான் .மகள் முகம் வாடினால் பொறுக்கமாட்டான். மகளைத்தன் உயிரினும் மேலாக மதித்தான். இந்த நிலையில் பள்ளியில் பாட்டுப் போட்டி நடந்தது. அதில் மணிமேகலை
இரண்டாவதாக வந்தாள் . இதனை அவளால் தாங்க இயலவில்லை . தொட்டாச்சிணுங்கியாக முகம் வாடி வீட்டுக்கு வந்தாள். மகள் வாடியதைக் கண்ட மாதவன் என்னம்மா என்று பதறினான். பள்ளியில் நடந்தவற்றைக் கூறினாள் .உடனே மாதவன் சரி விட்டுத் தள்ளு மகளே
உன் அருமை அவர்களுக்குத்
தெரியவில்லை என்று தேற்றினான். மகள் கவலையோடு இருப்பதைக் காணக் சகிக்காமல் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடமும் சண்டையிட்டான் . இந்த நிலை இவ்வாறு சென்று கொண்டுஇருக்க மணிமேகலை பனிரெண்டாம் வகுப்பில் முதல் மாணவியாய் தேறினாள். அவளை பள்ளியும் ஊரும் கொண்டாடியது. கல்லூரியில் மகளை சேர்க்க ஏற்பாடுகளைச் செய்தான் . 
       வெளியூரில் மகள் சென்று படிக்கப் போகிறாளே என்று மகளுக்கு எல்லாவகையான புத்திமதிகளும் கூறிக் கொண்டே இருந்தான் . சரி அப்பா  நான் நீங்கள் சொன்னபடி நடந்து கொள்கிறேனப்பா கவலை வேண்டாம் அப்பா என்று மகள் ஆறுதல் கூறினாள். சரி என்று சமாதானமாகி கல்லூரியில் சென்று விட்டு வந்தான். அதிலிருந்து மகள் இல்லாத வீடு வெறிச்சோடிப் போயிருக்க சரியாக உண்ணாமல் உறங்காமல் உடல் நலத்தை தொலைத்தான் மாதவன் .அது அவனது இதயத்தை பாதித்தது. அடிக்கடி நெஞ்சுவலி வந்து கொண்டு இருந்தது . டாக்டரிடம் சென்று காட்டி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தான். இந்த விசயத்தை மகளிடம் சொல்லவில்லை அவள் தாங்க மாட்டாள் கவலைப்படுவாள். படிப்பில் கவனம் சிதறிவிடும் என்று மறைத்துவிட்டான். மகள் நன்கு படித்தாள் இப்பொழுது மணி மேகலை மிகவும் அழகாக இருந்தாள். அவளது குணத்தில் மாற்றமில்லை உருவத்தில் கல்வியில் மாற்றம் இருந்தது. இந்த நிலையில் மகள் பரிச்சைக்கு கட்ட பணம் வேண்டும் என்று கேட்டு இருந்ததால் பணத்தை கொடுத்துவிட்டு பார்த்து வரலாம் என்று கிளம்பினான் மாதவன்.
      மகளைப் பார்த்து பேசி பாசத்தைக் கொடுத்து நன்கு படிக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். தலை சுற்றியது எனவே தானே சுடுநீர் சுடவைத்து குடித்தான் . சோர்வாக இருந்ததால்  ,வேர்த்துக் கொட்டியது .உடனே காற்றாடியை போட எழுந்தான் . தலை சுற்றி கீழே விழுந்துவிட்டான். உடனே நெஞ்சுவலி அதிகமாக வலி பொறுக்காமல் பக்கத்து வீட்டு பழனியை சத்தமிட்டு அழைத்தான். பழனி வந்து பார்த்தான் . அதற்குள்  மாதவன் தன் மூச்சை நிறுத்திவிட்டான். பழனி மாதவா மாதவா என்று அழைத்து நோளைத்தட்டிப் பார்த்தான். உயிர் பிரிந்ததை உணர்ந்தான் .
      ஊரில் உள்ள பெரிய மனிதர்களிடம் சொல்லிவிட்டு மகள் மணிமேகலைக்கும் தகவல் சொல்லப்பட்டது. தந்தை இறந்த்து கேட்டு மணிமேகலை ஓ வென்று கதறி அழுதாள் அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாள். பின்னர் தோழிகள் துணையோடு தந்தையை காண வந்தாள் அப்பா அப்பா என்னைவிட்டுச் சென்று விட்டீர்களா எனகென்று யாருமில்லையே நீங்கள் இருந்தால் நான் உலகை வெல்வேனே. அப்பா நான் அனாதை யாகிட்டேனே அப்பா. எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று வருந்தி அழுதுகொண்டே இருந்தாள் . அதன் பின் அப்பாவின் இறுதிச்சடங்கு முடிந்த்தும்  ஊர்மக்கள் சென்றுவிட தனியானாள் . நிலைத்த பார்வையோடு அமர்ந்தவள் நிலையில்லா தைரியம் பெற்றாள் .இனி நான் வானைத் தொட்டுசாதிப்பேன்  நான் தொட்டாச்சிணுங்கியல்ல . 
        தொடுவானம் தொடும் வானவில்  வானில் வலம் வரும் நிலவு நான் என்னை கவலை தீண்டாது என் தந்தையின் விருப்பம் நிறைவேற்றி நல்லவழியில் வாழ்வேன் என்று மன உறுதி கொண்டாள். மாதவன் மகளைப் பார்த்து ஊரே வியக்கும் படி வாழ்வேன் அப்பா இது உங்கள் மேல் சத்தியம் அப்பா என்று உறுதி எடுத்து புதுப் பொலிவுடன புது மணிமேகலை யானாள் .இனி அவள் தொட்டாச்சிணுங்கி அல்ல தொடமுடியாத வானம்.


-மா.மகேஸ்வரி,

நகர்மன்ற பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி,ஶ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்