அம்மா

அம்மா கவிதை

அம்மா

அம்மா !!

பத்து மாதம் பதட்டமுடன் சுமந்தாள்! 
 பல துன்பம் அடைந்து பெற்றாள்!
பல நாள் தவத்தில், நம் அழுகையில் அவள் சிரித்தாள்!!

 பாரினில் மேன்மை பட வளர்த்தாள்! பருவம் அடைந்த பின்பும் பாதுகாத்தாள்!

உடல் இழைத்தாள் உள்ளம் நொந்தாள் உரு குலைந்து, உதிரம் குறைந்தாள்!!

 நமக்காய் ஓடி! ஓடி! உழைத்து ஓடாய் தேய்ந்தவள்!!
 நம் பிள்ளைகளை வளர்ப்பதிலும் துணையானவள்!

இன்னல் பல ஏற்று! இன்பமுற! ஏற்றம் பெற !வளர்த்தவளை!!
 இன்னல் பட வைத்து விடாதீர் !அந்த இனியவளை!

 அன்னையைபோல் ஒரு தெய்வமில்லை! அவள் பாதம் பணிய மறந்தவன், மறுத்தவன் !!
பாரில் மனிதரே இல்லை!!

கவிதை மாணிக்கம்