காதலர் தினம் 001

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதலர் தினம் 001

காதலர் தினக் கவிதை 

கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் தானே!
எனக்கும் பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு!
வயதுக்கு வந்தவுடன் ஜாதகம் பார்த்தார் என்தாய்!
மனம்போல் மாங்கல்யம் அமையும் என்றார் ஒரு பெரியவர்!
வண்ண வண்ணக் கனவுகளோடு காத்திருந்தேன்!
மணாளன் திசை அறிய ஆவலோடு இருந்தேன்!
வரனைப் பற்றி வீட்டில் பேசும்போதெல்லாம் கவனமாய் ஒளிந்திருந்து கேட்டேன்!
என் காதலை கொட்டிவிடக் அவனுக்காகக் காத்திருந்தேன்!
பெண் பார்க்கும் படலமும் வந்தது!
கூடை மல்லிகைப் பூவை தலையில் சூடியிருந்தேன்!
ரோஜா நிறப் பட்டுப்புடவை அணிந்து ராஜாவை சந்தித்தேன்!
ஓரக்கண்ணால் என்னவனைப் பார்த்தபடியே தேநீர் தந்தேன்!
ஒரே பரபரப்பு! ஒரே குறுகுறுப்பு!
எனக்குப் பொருத்தமாய் வந்தார் குணமகன்!
மணமகன் என்கின்ற மனமகன்!
அவர் கைகளைப் பற்றும்போது என் முகத்தில் தன்னம்பிக்கை மிளிர்ந்தது!
என்னவன் தந்த மாங்கல்யம் எனக்கு பெரும்வரம்!
நான் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன்!
என்னவனைக் காதலிக்கும் அன்புக் காதலியாய்!
எங்கள் காதல் 
அப்பிறவியிலும் புனிதமாக!
என் மன்னவனின் அன்பை முழுமையாய்  உணர வேண்டும்!
ஆம்! மீண்டும் நான் பிறக்க வேண்டும்!
சேரனைக் கரம் பிடிக்கும் தேவியாய்!

- முனைவர். கோ. சுதாதேவி, கரூர்.