காந்தி

காந்தி ஜெயந்தி கவிதை

காந்தி

காந்தி கவிதை


உன்னை பிதாவாக்கி 
தேசம் முழுவதும் சிலை வைத்தோம்
காக்கை எச்சமிட்டு காலத்தின் முகம் வழிந்திடும் நிலை வைத்தோம்
தந்தை என்கிற தகுதியில் வைத்து
நீ சொல்லி சென்ற
கருத்துகள் அத்தனையும் புறம் வைத்தோம்
ஆயுதம் சூழ் உலகில்
அண்ணலே நீ தாங்கி நின்ற குச்சியை காணவில்லை நாடே வன்முறை களமாய்
இன்று உன் ராட்டை சக்கரங்கள்
சிலந்திகள் நூல் நூற்றுக்கொண்டிருக்கின்றன
பீட்டர் இண்லெண்ட் சட்டைக்காரனனுக்கு
விடுதலையின் வலி தெரியவில்லை
கதரென்பது  ஏளனப்பொருளாகி
ஏனோ முடிவில் அரசியல் வியாதியின் ஆடையானது
காந்தி உன் முகம்
அழுக்கடைந்த ரூபாய் நோட்டின் மதிப்பானது
எல்லாம் இருக்கட்டும்
மீண்டும் எப்போது நீ பிறக்கப்போகிறாய்
ஊழல் தேசத்தில்  உன் பெயரில் எவனோ ஒருவன் ஆதார் கார்டாடோடு அலைந்துக்கொண்டிருக்கிறான்
 வா என் தேசத்தந்தையே
அப்பனற்ற பிள்ளையாய்
என் அன்னை தேசம்...


   கவிதா விலாசம் பாபு-

19/3. கெஜலட்சுமி காலனி 
2 வது தெரு 
செனாய் நகர்
சென்னை-600030.