புரட்சிக் கவிஞர் பாரதியார் 035

தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி

புரட்சிக் கவிஞர் பாரதியார் 035

புரட்சிக்கவிஞர் பாரதியார்


புரட்சிகளும் செய்திட்டார் தமிழால் நாளும்
...பூமாலை தொடுத்திட்டார் இளைஞர் தோளும்
திரளான கற்பனைகள் கவியில் சூழ
...திடமான பெண்ணடிமை சற்றே வீழ
நரகத்தின் சாதிவெறி எதிர்த்து நின்று
...நாடெங்கும் குரலோசை எழுப்பி வென்று
மரமாக வித்திட்டார் மனிதர் பாசம்
...மானுடர்கள் காத்திடனும் நமது தேசம்

 தமிழ் மொழியை வளர்த்த பாரதியே எங்கள் சாரதியே
... கம்பன் வள்ளுவன் இளங்கோ தமிழை...!! 
அழகாய் கற்று, தமிழ் புரட்சிக்கவிஞராக, சூரனாக அவதரித்தார் மொழியைக் காக்க
...சுதந்திரநாட்டின் கொடுமை தாகம் போக்க
தோரணையாய் கவிகடிக்கும் சொந்த மெட்டு
...தேன்தமிழின் புகழுரைக்கும் சந்தப் பாட்டு
வீரனாக உலாவந்தார் சுவாசம் எங்கும்
...வீறுகொண்டு எழுதிட்டார் தமிழில் இங்கும்

புவியெங்கும் கொந்தளிக்கும் இவரின் பாக்கள்
...புன்னகையே வீசிடுமே நூலின் பூக்கள்
தவித்திட்ட நெஞ்சத்தின் புரட்சி மைந்தன்
...தடுப்பணையை உடைத்திட்ட நேச காந்தன்
குவிந்திட்ட பாராட்டை வெறுத்த ஆசான்
...கூடியிடும் கூட்டத்தை வணங்கும் தீசன்
கவியெழுதி புரட்சியினை எழுப்பும் காலன்
...கன்னிகைக்கு விடுதலையும் கேட்ட வேலன்.

 வி.கணேஷ்பாபு,ஆரணி, திருவண்ணாமலை,மாவட்டம்