முதிர் கண்ணன்

புதுக்கவிதை

முதிர் கண்ணன்

"முதிர் கண்ணன்கள் வேதனை!

எங்கள் வீட்டு தோட்டத்தில்நாங்கள் எஜமான்கள்!

  எங்களை எங்கே மணக்க துடிக்கிறார்கள் 
பெண்கள்:!!

படிப்பிலும், பணபலத்திலும் உயர்வுதான்!
வர்ணத்திலும்! வண்ணத்திலும் ஒஸ்த்திதான்!!

பாக்க்கிறவேலையோ! விவசாயம்தான்,,!

ஒத்தபெண்ணை வச்சிறுக்காங்க!
ஒஸ்த்தியா படிக்கவச்சிறுக்காங்க!!

போனவீட்டிலே ஒக்கார்ந்து சாப்பிடனுமா ஒருகஷ்டம்இல்லாம!!

மாமான் மாமியா வேண்டாமா! நங்கைநாத்துனார்வேண்டாமா!
கூட்டம்பெருசா வேண்டாமா!

புதுமாப்பிளையா இருக்கணுமா!
வயசோ! இருபத்திஐந்தை தாண்டாமா பாக்கணுமா!

புரோக்கர்மாமா சொன்னாரே!!
புதுசு புதுசா பெண்ணுகபடத்தை
காட்டிபணம்வாங்கி திண்ணாரே!!

ஏழு ஐந்து வயசாச்சா!
எங்கசாதகம் செட்டாச்சா!!
சாதி மதம் பாக்காமா
சம்பந்தம்பண்ண பாத்தாலும்!
மாலைபொருத்தம் வரலையாம்!!
ஜாதகம் சொல்லியாச்சாம்!

மாலையோடே காத்திருக்கோம்!
மணமகளை தேடி!
மனம் நித்தம்வாடி! பலவருடமா காத்திருக்கோம்! தெருகோடி!!

முதிர் கண்ணன் களாய்,,!

முகவரிசொல்லாத எங்கள் வீட்டு ராஜாக்களாய்!!

படைப்பு கவிதை மாணிக்கம்!!