உலகம் போற்றும் சாவித்திரிபாய் பூலே 052

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

உலகம் போற்றும் சாவித்திரிபாய் பூலே 052

உலகம் போற்றும் சாவித்திரி பாய் புலே.

முன்னுரை: பெண்கள் நாட்டின் கண்கள்.
பெண்கள் வளர்ச்சியின் அடையாளம். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக . என்ற திருவள்ளுவர் அருளிய கல்வியின் சிறப்பை வாழ்நாள் முழுவதும் உணர்ந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே.
கற்றோர்க்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு என்பதற்கு எடுத்துக்காட்டு சாவித்திரி பாய் புலே அம்மையார்.
சாவித்திரி பாய் புலே பிறப்பு: 
ஜனவரி 3 1831 
மராட்டிய மாநிலத்தில் உள்ள நைகான் சிற்றூரில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.உலகம் போற்றும் பெண் போராளி.
திருமணம்: 
சாவித்திரி பாய் புலே கணவர் மகாத்மா ஜோதிராவ் புலே  இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது.
ஆரம்பக்கல்வி : 
சாவித்திரி பாய் புலே தனது கணவரிடம் ஆரம்பக்கால கல்வி கற்றார்.பின்பு 1848 இல் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
கல்விப்பணி:
சாவித்திரி பாய் புலே 9 மாணவிகளைக்கொண்டு பெண் கல்வி போற்றும் பள்ளி உருவாக்கினார் . சாதி கொடுமை தகர்த்து எறிந்து விட்டு பெண் கல்வி அருளிய பெண் மேதை .
தடைகள் உடைத்த சாவித்திரி பாய் புலே: 
பெண் கல்வி எதிர்த்து மக்கள் சிலர் அம்மையார் மீது சேற்றினையும் மலத்தினையும் வீசிப் பல சோதனைகளை தந்தனர்.இதனை மனதில் கொண்டு  சாவித்திரி பாய் புலே வேறு உடை கொண்டு பள்ளிக்கு செல்வார். தடைகள் வந்தாலும் மிகவும் மன உறுதி யுடன் செயல்ப்பட்டு கல்வி சேவை செய்த பெண் கடவுள். 
பிறபணிகள்:
ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு இலவச சாப்பாடு மற்றும் இருப்பிடம் தந்தவர்.விதவை பெண்களின் மறுமலர்ச்சிக்கு போராடியவர். கல்வி நாட்டின் பெருமை என்று மக்களுக்கு உணர்த்தியவர். சாதிக்கொடுமை தகர்த்து எறிந்தார்.
சமுதாய சீர்திருத்தவாதி.
விடாமுயற்சியின் அடையாளம் சாவித்திரி பாய் புலே.
பெண் கல்வி மகத்துவத்தை மக்களுக்கு கொண்டு சென்றவர்.
மக்கள் பணி : 
அனைவருக்கும் கல்வி என்ற எண்ணத்தை தந்தவர்.சமுகக்கொடுமைகளுக்கு குரல் தந்தவர்.பெண் விடுதலைக்காக ஆங்கிலேயர் காலத்தில் போராடியவர்.
சாவித்திரி பாய் புலே இறப்பு: 
பிளேக் நோய் காரணமாக மார்ச் 10 1897 ஆம் ஆண்டு உயிர் இறந்தார்.
சாவித்திரி பாய் புலே சிறப்புகள்: 
புனே பல்கலைக்கழக்கத்தின் பெயர் சாவித்திரி பாய் புலே என்று 2015 ஆம் ஆண்டு மாற்றப்பெற்றது .
இந்தியா அரசு சாவித்திரி பாய் புலே அம்மையார் நினைவுப்படுத்தும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது .
அம்மையார் பெயரில் இரு கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுரை: 
கல்வி கற்போம் நாட்டை உயர்த்துவோம். பெண்கள் நாட்டின் உயிர். பெண்களை மதிப்போம் . 

மு.விக்னேஷ்வரி தூத்துக்குடி மாவட்டம்