விடியல் ...
விடியல் கவிதை

விடியல் கற்றுக்கொடுக்கிறது
நாளை ,மாறும் என்பதை!
கடல் அலைகள் கற்றுக் கொடுக்கிறது!
விடாமுயற்சி தேவை என்பதை!!
கானப்பறவைகள் கற்றுக்கொடுகிறது!
நாளையதேவை அல்லாது!!
அன்றைய தேடல் மனநிறைவு என்பதை!
காக்கைகள் கற்
றுக்கொடுக்திறது!
கூடிவாழ்வதை!!
எலும்பு இல்லா !உயிர் எறும்புகள்!! கற்றுக்கொடுகிறது
வரிசையிலும்
சுறுசுறப்பையும்!!
நாளைய அடைமழைக்கு! உணவுக்குஏங்கா! சேமிப்பையும்!!
எல்லாபலமும்! எல்லா வளமும் !உள்ளமனிதா!
உன்னிடம் கற்றுக்கொள்ள வைக்கிறது!!
ஆசை, கோபம் ,களவு!
சாதி மதபிரிவு! என்பதையும்!!
மனம் மாறாது! ஒருவன் உழைக்காது! வாழ!
பலரை முட்டாளக்கும்
மதமாற்றத்தையும்!!
கண்கண்ட கடவுளை(மாதாபிதா) தொழாது!
கற்சிலைகு அபிஷேகம் செய்து
அழகுகூட்டி!
நம் போன்ற உயிர்களைபலிஇட்டு!
மதுகுடியில்! ஆடிப்பாடி
உறவுகளுக்குள்ளேபாக !
பிரிவினையில்! நொந்து போவதையும்!
மனம் மாறுங்கள்! மனிதநேயம் போற்றுங்கள்!
அன்பை ஆட்சி மொழியாக்குங்கள்!
அன்பு நிழல் கூட்டத்தில்! அமர்ந்து
ஆசையை வெறுப்போமா,,,,!!
அனைவரையும் அரவணைத்துவாழ்வோமா,,,!
பிரியமுடன் படைப்பு!
கவிதை மாணிக்கம்
Comments (0)