காத்திருப்பது அழகுதான்..!

காதல் கவிதை

காத்திருப்பது அழகுதான்..!

காத்திருப்பு அழகுதான்!!
அன்று தொலைத்த
அன்பின் உறவுகளை!

ஆழ்கடலில் நினைத்து தேடிதவிக்கிறாயோ!
கடல் அலைகளை!!

வெளிப்படுத்த்தாதவானம் நீ!
நிலவாய் ஒளிர்ந்திருக்கும்
வெளிர் நினைவுகளை!

வெட்கப்பட்டு! புன்னகைத்து
உனக்குள் ரசித்து புதைத்துகொண்டாயோ!

 உன்னை ,கவிதை எழுத ஏடுகள் போறா!!
உன்னை வர்ணித்துவார்தை எழுத, இந்த மையும்போறா!

வானத்தைஏடாக்கி!
கடல் பரப்பு நீரையே மையாக்கி!
உன்னை கவிதை படைக்க! வானத்திடமும்!
கடலிடமும்
கடன் உதவிகேட்டேன்!

நிலவுமுகத்தை! தாமரைமுகத்தை! பார்த்து 
வருடம் பலகடந்தன!
வாலிப
 இளமையும் கடந்தன!

நேரில் பார்த்துவிட்டு
நிறைந்த மனமோடு
வருகிறேன்

பொறுங்கள்!
என்னவள் இனியவள் வரும் காலம் நாளையாகுமாம்!!

தன்னை மறந்து 
உன்னை நினைந்து
தேனில் விழுந்த வண்டானேன்
தேவதைசுகமே!

என்றும் அவளே!
என் இனியவள் என்றானாளே!

எம்ஆர்தி!!

கவிதை மாணிக்கம்.