தமிழரின் விருந்தோம்பல்..! 019

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் விருந்தோம்பல்..! 019

விருந்தோம்பல்:
விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடுகள் ஒன்று. விருந்தோம்பல் வீட்டிற்கு புதிதாக வருபவரை உபசரிப்பதை விருந்தோம்பல் எனப்படும் .பண்டைக் காலத்தில் விருந்தோம்பல் சீரும் சிறப்புமாக இருந்துள்ளது.


தனி மனித ஒழுக்கம்:
 தனிமனித ஒழுக்கம் என்பதே மிகச்சிறந்த அறம் என்று இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஏனெனில் எல்லாவற்றிற்கும் காரணமாக திகழ்வது தனிமனித செயல்பாடுகள் தான். தனிமனிதன் ஒழுங்கு நெறிகளை பேணிப் பாதுகாப்பதால் பிரச்சனைகள்  முற்றிலும் தவிர்க்கப்படும். சுவாமி விவேகானந்தர் தனிமனித ஒழுக்கம் என்பது பிறருக்கு உதவி செய்வது, பொறாமை, சந்தேகம் போன்ற இல்லாதிருப்பதாகும். கற்பு நெறியில் ஆண்களும் பெண்களும் தவறாதிருப்பது சிறப்புஎன்று குறிப்பிடுகிறார். தனிமனித ஒழுக்கமானது கொல்லாமை, பொய் கூறாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், பிறர் மனை நயவாமை, சுற்றும் பேனல், பெற்றோரைப் போற்றல், கடவுள் நம்பிக்கை போன்றவற்றை குறிக்கிறது. தனிமனித ஒழுக்கம் தமிழரின் பெருமைக்கு சான்றாகும்.

ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடே பண்பாடாகும். வாழ்க்கை அமைப்பு என்பது அச் சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகள், கலைகள், இலக்கியங்கள் முதலியவற்றால் அறியப்படுவது. சுருங்கக் கூறின் பண்பாடு என்பது ஒரு தலைமுறையினர் சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். இத்தகைய பண்பாட்டு பண்பட்ட வாழ்க்கை முறையில் இருந்து மனிதனுக்கு இயல்பாக தோன்றிய உணர்வு கலை உணர்வாகும்.


 கலை மானிடத்தின் அழகிய படைப்புகளைக் கலை என்கிறோம். படிப்பு என்பது எழுத்து வடிவினதாகவோ, வரைதலாகவோ  பொருளாகவோ, செயலாகவோ இருக்கலாம். ஆனால், படிப்புக்கலை, ஓவியக்கலை ,நடுகல் சிற்பம், சிற்பக்கலை, சுடுமண் பொம்மைகள், கல் சிற்பங்கள் மர சிற்பங்கள் இவற்றில் தமிழர்கள் தலை சிறந்து விளங்கியுள்ளனர்.

வீரம்:
 புறநானூற்று காட்சி பொருளில் பெரும் வெறுப்புண் பெற்ற தலைவனை காப்பதற்கு வருமாறு தோழி அளிக்கும் தலைவி அவனை வரவேற்கச் செல்லும் பொழுது பல்வகை இசைக்கருவிகளோடு யாழ் முழங்கவும் மணிகள் இசை முழங்கவும் ஆம்பல் குழல் ஊதியம் காஞ்சிபாடியும் ஆடுவோம் என்று தோழியிடம் கூறுகிறாள். இவ்வாறு வாழ்க்கையின் ஒரு பகுதியாக இசை விளங்குவதையும் ஒருவரோ பலரோ பாடல்களை பாட பல இசை நிகழ்ச்சி இக்கால இசை அரங்கத்திற்கு ஒப்ப நிகழ்வையும் புறநானூற்று பாடல் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. 


தீங்கனி யிரவு மொடு வேம்புமனைச் செரீஇ


  இது போன்ற பண்டைத் தமிழரின் இசையோடு இணைந்த வாழ்க்கை இயற்கையின் இசை காணும் பண்பு ஆகியனவற்றை குறிப்புகள் சங்க நூல்களில் பரவலாக காணப்படுகின்றன. காற்றின் ஓசை குழலுக்கும் வண்டி ஓசை யாழுக்கும் அறிவின் ஓசை உலவிக்கும் இப்பாடலில் ஒப்பிடிருப்பது போன்று இதே பண்பினை சங்க இலக்கியம் அனைத்தையும் மட்டுமின்றி தொடர்ந்து காப்பிய நூல்களிலும் பக்தி இலக்கியங்களிலும் இடைக்கால நூல்களிலும் பிற்கால பிரதியார்,பாரதிதாசன் பாடல்களில் காணப்படுவதன் வாயிலாக தமிழரின்  பெருமையைக் காண முடியும்.தமிழர் பண்பாட்டில் இன்றியமையாதது.

இல்லறம்:
 இல்லறம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய இல்லற பண்பாடு உலகமே வியந்து போற்றக்கூடியது அதை யாராலும் மறுக்க இயலாது. ஆண் பெண் ஆற்றும் இல்லருமே நல்லறமாகும். இல்லறத்தில் இணைந்த இருவருமே ஒத்த அன்புடன் உயரிய சிந்தனையுடன் வாழ்க்கை நடத்தியதை 

செம்புலப் பெயல்நீர் போல அன்புடன் நெஞ்சம்தாம் கலந்தனவே (குறுந்தொகை 40' )என்ற குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன.


இல்லாள் என்பதற்கு இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். இல்லமாகிய அகம் இவளால் இன்புறும். இப்பூவியில் வல்லமை உடைய படைப்பு என்றால் பெண்மை தன்மை பொருந்திய பெண்தான். அத்தகு பெண்மையின் அழகே மென்மை தான் என்று கவிஞர்கள் போற்றியுள்ளனர். ஆனால் அந்த மென்மைக்குள்ளே வலிய ஆக்க சக்திகள் புதைந்து, மறைந்தும் காண்பதற்குத் தோற்றப் பொலிவுடனும் மாதவத்திற்கு உரியவளாகவும் திகழ்பவள் பெண் என்பதை கவிமணி, மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று கூறியுள்ளார்.

மூத்தோரைத் துணையாகக் கொள்ளுதல்: 
வாழ்வின் நன்மை, தீமைகளை எடுத்துக் கூற பெரியவர்கள் நமக்கு துணையாக இருத்தல் அவசியம் .ஒருவர் நல்வழியில் வாழ அவரை நெறிப்படுத்த நெறிப்படுத்த பெரியவர்களின் துணை பெரிதும் தேவை 

தக்கார் ரினத்தனாய் தானொழுக வல்லானைச்


 செற்றர் செயக் கிடந்த தில் என்ற குறளில் பெரியவர்களை துணையாக கொண்டவனை பகைவர்கள் என்ன செய்ய முடியும் என்று பெரியவர்களை துணையாக கொள்வதில் அவசியத்தை கூறியுள்ளதன் மூலம் பெரியோரை மதித்தல் தமிழரின் பெருமை என்பதனை அறியமுடிகிறது.

-முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை 641105