அன்பும் அகிம்சையும்..

காந்தி ஜெயந்தி கவிதை

அன்பும் அகிம்சையும்..

அன்பும் அஹிம்சையும்...

போரைவெறுத்து அன்பை பந்தலாய்த்தொடுத்த போர்பந்தல் தலைமகனே //

வீட்டின் கடைக்குட்டியானாலும் நாட்டின் முதன்மை  தனயன் //

தென்னாப்பிரிக்கா பயணம் அரசியலுக்கு வித்திட்ட தருணம் //

 மக்கள்பட்ட இன்னல்களாலும் அவமானத்திலும் துளிர்விட்ட விதையாய் //

அவ்விதையின் வழியில் முளைத்த மலரே காங்கிரஸ் //

சுதந்திர இந்தியாவை உருவாக்க பாடுபட்ட உன்னதன் //

அன்பையும் அஹிம்சையும் தாரகமந்திரமாய் கொண்ட தாளாளன் //

சத்தியாகிரகத்தால் நாட்டின் அந்நியசக்திகளை அச்சத்தில் தள்ளியவர் //

பணம்பகட்டில் வளர்ந்தாலும் கதர்ஆடையை அணிந்து எளிமையானார் //

வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தின் முச்சானார் //

நடைபயணத்தால்  ஆங்கிலேயர்களை நடுங்கவைத்து உப்புவரியை  உதிர்த்தவர் //

தீண்டாமையை எதிர்த்து அழிக்க போராடிய போராளி //

அந்நியர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த ஒத்துழையாமை இயக்கியன் //

வெள்ளையை உடையில் மற்றுமல்ல மனதிலும் கொண்டவர் //

சுதந்திரக்குழந்தையை அனைவரின் கைகளிலும் தவழவிட்ட
தேசியத்தந்தை //

ஏற்றதாழ்வற்று சமமாய் பாவித்த தன்னிகரற்ற தலைவன் //

நீதிமன்றத்தில் மட்டுமல்ல ஆங்கிலேயர்களிடமும் வாதிட்ட அறிஞர் //

அறவழியில் போரட்டங்கள் நடத்தி அறத்தை போதித்தவர் //

அஹிம்சையின் நாயகன் உயிர் பிரிந்தது ஹிம்சையால் //

அன்னலின் பிறந்தநாள் அன்பின், அறத்தின் அடையாளதினம் //

அன்பையும் அஹிம்சையும்  சுவாசமாக கொண்ட கொடையாளன் //

மகான் என்றதும் மனதில் நினைப்பது காந்தியடிகள் //

ஆம் அவர் என்றும் என்றென்றும் காந்திமகான்.

இவண்.
பி.பத்ரிநாராயணன்
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை
இராஜபாளையம்.