உலகம் போற்றும் பெண்கள்...! 020

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

உலகம் போற்றும் பெண்கள்...! 020

உலகம் போற்றும் பெண்கள்


முன்னுரை:-

அகிலத்தின் ஆணிவேராய் அனைத்துயிர்களையும் ஆளும் சக்தி. உயிருக்குள் உயிர் சுமந்து உருவம் கொடுத்து உருப்பெற வைப்பவள். பூவாக மலர்ந்து புயலாகவும் வீசுவாள். அசூரர்களை அழிக்கவும் அஞ்சாத வேங்கையாய்ப் பாய்வாள். இறைவனின் படைப்பிலான வரம். ஐம்பூதங்கள் அனைத்தும் பெண்ணின் வடிவில் பெயர் கொண்டு அழைத்து பெருமைப் படுகிறோம் .
பெண்ணும் இல்லையெனில் அகிலம் இயங்காது இனங்களும் உருவாகாது பட்ட நிலமாகும

  வளரும் சமுதாயத்தில் இன்றும் பெண்பிள்ளைகளை    கருவியாகவே பார்க்கின்றனர்.இந்த நிலை மாறி புது யுகம் பிறக்க வேண்டும்.தனக்கு வரும் சவால்களையும் எதிர்ப்பையும் சீண்டல்களையும் எதிர்த்தும் தட்டியும் கேட்குமாறு அவர்களை வாழக் கற்றுக் கொடுங்கள் பெண்ணிற்கான சுதந்திரத்தைக் கொடுத்து வாழ்வின் வலிகளையும் வழிகளையும் கடந்திட ஊக்கத்தையும் உறுதியையும் கொடுங்கள். பெண் பிள்ளைகளுக்கான கல்வி ஆளுமை ஆற்றல் துணிவு வீரம்  என்பவற்றை சிறுவயது முதல் கொடுத்து வளர்த்திடுங்கள். இக்கால கட்டத்தில் பெண்பிள்ளைகள் எண்ணற்ற இன்னல்களைக் கடக்கின்றனர். அதை எதிர்த்துப் போராடும் வல்லமை அவர்களுக்கு வேண்டும். பெற்றோரும்   ஆசிரியர்களும் நற்பணி மன்றங்களும் அவர்களுக்கு நல் வழி நடத்திட வேண்டும் சுதந்திர கால வரலாற்றைப் புரட்டினால் பெண்களின் தியாகம் வீரம் கடமை நாட்டுப்பற்று ஆண்களுக்கு நிகராக சுந்திர வேள்வியில் பங்கேற்றவர்கள். ஆட்சி ஆண்ட வீரப் பெண்மணிகளும் உண்டு.  வீரமங்கை வேலு நாச்சியார் ஜான்சி ராணி இலட்சுமி பாய். தில்லையாடி வள்ளியம்மை. கிட்டூர் ராணி.சென்னம்மா லட்சுமி சேகல் என எத்தனையோ பெண்களும் வாளேந்தி ஆணுக்குப் பெண் சலைத்தரில்லை என நிருபித்தனர். சங்க இலக்கியங்களிலும் பெண்கள் அச்சமின்றி அவையில் கூட நீதி கேட்ட முதல் பெண் கண்ணாகி இன்னும் எத்தனையோ பெண்கள் சாதனை மகுடம் சூட்டியவர்களும் உண்டு கல்பனாச் சாவ்லா இந்திராகாந்தி அன்னை தெரேசா எத்தனையோ பெண்கள் தாங்களாலும் எதையும் சாதிக்க முடியும் என்றே வென்றவர்கள்

மூடிமறைத்து  அடுப்பூதிய காலம் மாறி  மண்ணிலும்  விண்ணில் திறமையோடும் ஆற்றலோடும் விவேகத்தோடும் சரித்திரத்தைப் புரட்டிப் போடும் நிலையிலும் இன்று பெண்கள் வளர்ச்சி கண்டுள்ளனர்
கற்பனைகள்  கனவுகள் காலத்தை மாற்றும் சக்தியாய்  தன்னையும் உருக்கி தளராது சுடர்விட்டு அண்டிய துன்பங்கள் கவலைகளைக் கூட புதைத்து தினம் தினம் புதிய தாய் உதயமாகும் ஆதவனாக உதயமாகிறாள். பெண்களைப் புழுவாய்ப் பார்க்கும் அட்பர்கள் முன்னிலையில்  புழுவும் புலியாகும் என்ற கோணத்தில் இன்று பரிணாம மாற்றங்களில் வளர்ச்சி அடைந்துவிட்டனர்.

அன்றே பாரதி ஊட்டிய துணிவெனும் அன்னத்தைப் உண்டு அச்சம் கலைந்தோம் அவணியில் .அடிமை படுத்தி அடக்கியதை உடைத்துச் சீறும் சிங்கமாய் குவலயத்தில் குன்று போல் உயர்ந்த மனதோடு குறுகாது நிற்கின்றாள். இல்லம் என்றால் இனிப்பு அதுவும் பெண் இல்லை என்றால் வாழ்வே கசப்பு. குடும்பங்களை கட்டிக் காத்து வழி நடத்தும் தேவதைகளும் இவர்களே. ஏதோ ஒரு வகையில் பெண் என்பவள் தாயாக தாரமாக தங்கையாக அக்காவாக என்று தொடரும் வீட்டில் தெய்வமாய் பவணி வருகின்றாள்.

முடிவுரை:-  உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருப்பார்கள் அவளை உற்சாகம் கொடுத்து ஊக்கப்படுத்தி ஆற்றலோடும் ஆளுமையோடும் அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஊன்று கோலாக இருந்து ஆதரவை அளியுங்கள்.சிந்தித்துப் பாருங்கள் பெண் இன்றி குடும்ப வண்டி ஓட்டவே முடியாது அவளே சிறந்த ஓட்டுனர். அவளின்றி ஆண்களால் வாழ்வது கடிணமே. அன்பிலும் அறத்திலும் தேனாகவும் தித்திப்பாள்.  தேவையற்று சீண்டும் போது பூகம்பமாகவும் உருவெடுப்பாள்  பூவான பெண்மையை பூப்போன்று பாவியுங்கள்


- கிருஷ் அபி