தேடல்

தேடல் கவிதை

தேடல்

தோல்வியுற்ற வாழ்க்கை,

தன் பக்கங்களை கிழித்து
காற்றில் எறிந்து விட்டு 
தேடிப் போ  என்றது

தேடிப் போனேன்
புத்தனாலும் கண்டுபிடிக்க முடியாத
வாழ்வின் பக்கங்களை

களங்கமற்ற முகங்கள்
 கைகளை பிசைந்து கொண்டு
நம்மிடம்
 யாசிக்கையில்
உங்களுக்கு என்ன தோன்றும் ?

நான் 
இந்தப் பிரபஞ்சத்தை
 நான்கைந்தாய் கிழித்து
எறிந்து விட்டு
திரும்பாமல் நடந்தேன் 

தங்கேஸ்