பொறுமையின் சிகரம் 024

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பொறுமையின் சிகரம் 024

பொறுமையின்  சிகரம் பெண்கள்

 *குறிப்பு சட்டகம்* 

முன்னுரை
சமூகத்தின் பார்வை
சமூகபட்டங்கள்
பொருளாதார நிலைமை
அரசியல் நிலைமை
வலி தாங்கி
அவல நிலை
முடிவுரை


 *முன்னுரை:* ‌
            _"வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்_" என்ற வரிகளுக்கு ஏற்ப 
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட தங்களுக்கான உரிமைகளை இன்னும் ஒவ்வொரு இடத்திலும் போராடிக் கொண்டுதான் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போராட்ட குணம் மட்டும் மிக்கவர்கள் அல்ல பொறுமை குணமும் மிக்கவர்கள் தான் தனக்கு நிகழும் அவலத்தையும், பொறுமையோடு எதிர்கொண்டு கடந்து போகிறாள். அவள் கடக்கும் ஒவ்வொரு இடங்களிலும் அவளின் பொறுமையை உலகம் அறியும். இந்த சமுதாயத்தில் வலியோடு பொறுமையாக அவள் கடந்து செல்லும் இடங்கள் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்!

 *சமூகத்தின் பார்வை:* 
   " _நிமிர்ந்து நன் நடையும், மேற்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், இருப்பதால் செம்மை மாதர் திரும்புவதில்லை"_ என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அவனது வரிகளாய் பெண்கள் நிமிர்ந்து நன் நடையில் நடந்தால் சமூகம் சொல்கிறது போரா பாரு திமிர் பிடித்தவள் என்று, பார்வையில் நடந்தால் பொன் என்றால் ஒரு அடக்கம் ஒடுக்கம் வேண்டாமா என்று கேட்கிறது, இத்தனையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் பெண்கள் வலிகளோடு,
பொறுமையின் சின்னமாக!

 *சமூகப் பட்டங்கள்:* 
   " _பட்டங்கள் ஆல்பம் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வேண்டும்"_ என்றான் பாரதி. இன்று பெண்கள் படித்து பட்டம் பெற்று விட்டார்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், 'பெண் சிரித்தால் சிங்காரி, சிரிக்காவிட்டால் சிடுமூஞ்சி; அழுதால் அழுமூஞ்சி; அழாவிட்டால் அழுத்தக்காரி, பேசினால் வாயாடி; பேசாவிட்டால் ஊமை கொட்டான், வாழ்ந்தால் சீமாட்டி; வாழாவிட்டால் வாழாவெட்டி, கணவனை இழந்தால் விதவை, மழலை இல்லையேல் மலடி, விரும்பியவனோடு சென்றால் ஓடுகாளி' என படிக்காமலே இன்றளவும் கூட எத்தனை பட்டங்களை சுமந்து கொண்டு இருக்கிறார்கள் இத்தனை வலிகளோடு அவர்கள் பொறுமையின் சின்னமாக வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்!

 *அரசியல் நிலைமை:* 
  ஆளுமை மிக்க எத்தனையோ பெண் ஆளுமைகள் அரசியலில் இருந்தாலும் கூட சட்டம் இயற்ற வேண்டும் எனில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் .அதை 51% பேர் அங்கீகரிக்க வேண்டும், வெறும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு பெண்களால் சட்டம் இயற்ற முடியுமா? ஆனால் பாருங்கள் பேச்சில் மட்டும் 'ஆணும் பெண்ணும் சமம்' என்கிறார்கள் இதனையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் பொறுமையாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
    _ஜான்சிராணி ,வேலு நாச்சியார்_ போன்ற எண்ணற்ற ஆளுமை மிக்க பெண்கள் நாட்டை ஆளும் திறன் பெற்றிருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால், இன்று ஒரு பெண் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் கூட அவளுக்கு வரும் மனுக்களை வாங்குவதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதும், பெரும்பாலும் அந்த பெண்ணைச் சார்ந்த ஆண்களாக தான் இருக்கிறார்கள். அத்தனையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் பொறுமையோடு வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 *வலி தாங்கி:* 

   உலகத்தில் உள்ள உச்சபட்ச வலியெல்லாம் தாங்கி ஒரு குழந்தையை பெறுவது பெண்ணாக இருந்தாலும் கூட அவளுக்கு முதல் எழுத்தாக சேர்க்கப்படுவது என்னவோ ஒரு ஆணின் எழுத்தாக தானே இன்றும் பெரும்பாலும் இருக்கிறது! இருந்தாலும் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பெண்கள் வலி தாங்கிகளாக தங்களுக்கான உரிமையை கேட்காமல் பொறுமையின் சின்னமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

 *அவல நிலை:* 

    புணர்ச்சி விதியிலே கீழாக கருதப்படும் நாயின் இனத்தில் கூட ஐந்து அல்லது ஆறு நாய்கள் சேர்ந்து ஒரு குட்டி நாயை துரத்தியதாக சரித்திரம் இல்லை அந்த நாய் குட்டிக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இன்று நம் நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இல்லை என்பதுதான் நிதர்சனமான கசப்பான உண்மை. இருந்தாலும், கூட தனக்கு  நேரும் கொடுமைகளை பெண்கள் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 *பெண்களின் மாற்று வடிவங்கள்:* 

      ' _கல்வியின் வடிவம் சரஸ்வதி, செல்வத்தின் வடிவம் லட்சுமி, வீரத்தின் வடிவம்தங்களுக்கான உரிமையை கேட்காமல்.துர்கா, பொறுமையின் வடிவம் பூமாதேவி, நதியின் வடிவம் பெண்கள், இயற்கையின் வடிவம் பெண்கள்'._ இத்தனை வடிவங்கள் இருந்தாலும் கூட பெண் பெண்ணாக பார்க்கப்படவில்லை, இந்த சமூகத்தில் என்பதுதான் உண்மை. வலிகளைத் தாங்கும் சுமை தாங்கிகள் ஆக பெண்கள் பொறுமையோடு வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 *முடிவுரை* :                                                    இடைவிடாமல் இந்த சமுதாயத்தில் பெண்கள் கேட்பது எல்லாம் _சம உரிமையை_ தான் கொடுப்பதாய் சொன்னவர்கள் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். கேட்கவும் உரிமை அல்லாமல் போலிச் சம உரிமைகளோடு அவளும் பொறுமையாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் இன்னும் எத்தனை காலம் இவள் வாழ்வாளோ? பொறுமையின் சிகரமாய்! இமயமலையில் உள்ள சிகரத்தின் உயரத்தைக் கூட நம்மால் அளந்து விட முடியும்.ஆனால், பொறுமையின் சிகரமாக இருக்கும் பெண்களின்  உயரத்தை அளக்க இந்த உலகத்தில் கருவிகள் இல்லை.
 
 - து. திவ்யா, பரமனந்தல்,

திருவண்ணாமலை மாவட்டம்.