சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...4

சுதந்திர தின கவிதை

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...4

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..

இமயமும் குமரியும் எழிலென இருபுறம்//
அமையவாம் அரபி வங்கமாக் கடலும்//
காவிரி பெண்ணையும் கங்கைபல் நதிகளும்//
தாவி கடல்செலா தடுக்கபல் லணைகளும்//
கோவிலும் குளங்களும் குகைகளும் மலைகளும்//
மேவிய வானுயர் கட்டிடங்கள் பலவும்//
உழவும் தொழிலும் கழனியும் காடும்//
அழகிய இயற்கையும் காணின்பம் கூடும்//
பன்மொழிக் கலாச்சா ரம்பண் பாடும்//
தன்னிறை பெற்றவிஞ் ஞானமேம் பாடும்//
சாதியும் மதங்களும் சாத்திரங்கள் யாவும்//
ஆதியில் தோன்றியும் அழிவிலா நிற்பதும்//
சமத்துவம் ஒற்றுமை சாகா குறளும்//
நமக்கென தோற்றிய நல்லிறை யாண்மையும்//
உரிமை களெல்லாம் உருவாக நமக்குமே//
வரலாறு படைப்போம் வான்புகழ் எட்டுவோம்//
உதவும் இதயமாய் உழைத்தும் நாளுமே//
சுதந்திர காற்றை சுவாசிப்போம் நாமுமே...!!

 கவிஞர் து.ரா.சங்கர்,
 கடலூர்