அறிஞர் அண்ணா ..! 051

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா ..!  051

அறிஞர் அண்ணா...

பல்லவ பேரரசின் 
தலைநகரில் உதித்தோனே..
வல்லமை யாவுமே 
தன்னுள் நிறைத்தோனே..
சொல்லாலே மக்களின் 
உள்ளம் கவர்ந்தோனே..
பொல்லாத உலகின் 
போக்கை மாற்றியோனே..

வெல்லும் பேச்சாலே 
வேற்றுமை கலைந்தோனே..
கல்விதனைக் கொண்டு 
காலத்தை வென்றோனே..
ஏழையின் சிரிப்பிலே 
இறைவனைக் கண்டாயே..
ஏழ்மை அகற்றிட 
ஏடெடுத்து நின்றாயே..
சாமானியர்களைப் பற்றிய கவலைகளோடு 
சமூகப் பாகுபாடுகளை 
அகற்றப் பாடுபட
'உளமாற' உறுதி ஏற்றோனே 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு 
மணமுண்டு என்றாயே..
தமிழரின்  நிலப்பரப்புக்கு  
 'தமிழ்நாடு' முகவரியாக்கினாயே.. 
பகுத்தறிவு கொண்டே 
பாரினை அளந்தாயே..
வாதிட்டு வென்றோர் உண்டோ 
வான் புகழ் எய்தியோனே..

சீரான சிந்தையாலே 
நாட்டை சிதையாமல் காத்தாயே..
வேறான எண்ணங்கொண்டோரையும் 
தம்பியென அழைத்தாயே..
நேரத்தை நூலகங்களில் செலவிட்டு
பேச்சில் நூதனம் வளர்த்தாயே..
அடுக்கான மொழியிலே 
துடுக்கான உன் பேச்சு தூண்டிலாய்..
மாட்டாத மனங்கள் உண்டோ.. 

தார்மீக உள்ளத்தால் 
உள்ளவரை பண்பாட்டின் குறியீடாக
வரலாறாக, அடையாளமாக.. 
துடிப்பும், பரபரப்பும், விவாதங்களும் நிரம்பிய
வாழ்க்கையின் சுருக்கமாக
அறிஞர் அண்ணா..!

#ஆ_முருகேசுவரி 
சவூதி அரேபியா