தித்திக்கும் தீபாவளி

தீபாவளி கவிதை

தித்திக்கும் தீபாவளி

தித்திக்கும் தீபாவளி

 சாதிமத வேறுபாட்டை வேரோடு அழித்து//


 சொந்த பந்தங்களின் இனிமையான அன்பு  உரையாடல்களுடன்//

 கங்கா ஸ்நானம் ஆயிற்றா என//


 ஒருவருக்கொருவர் பண்போடும் பழமையோடும் கேட்டு//


 தீபங்கள் ஏற்றி இருளினை நீக்கி//


 சமூகவலைத்தளத்திலும் அலைபேசியிலும் வாழ்த்து பரிமாற்றங்களுடன்//

 இனிப்புக்களுடன்   இனிதே தொடங்கும் தீபாவளி//


 மழலைகளில் இருந்து பெரியோர் வரை//

 புத்தாடையணிந்து குதூகலத்துடன் தொடங்கும் தீபாவளி//


நம் விரல்கள் தீண்டி
 சரவெடியும் //


அழகாய் பாடும் சப்த ஸ்வரங்களுடன்//


 ஈர்க்கும் லக்க லக்க லக்ஷ்மி வெடியுடன்//


 பூத்துக் குலுங்கும் பூந்தோட்ட புஸ்வானதுடனும்//


 புன்னகை பூத்துச் சிரிக்கும் 
கம்பிமத்தாப்புகளுடனும்//

 ராரா  பாட்டு பாடு/
ராக்கெட் களுடனும்//


 மகிழ்ச்சி மத்தாப்போடு சங்கீத சரவெடிகளுடன்//


 ராத்திரியில் பூத்திரியேற்றி பகலாக்கி//


 வானில் சிதறும் வண்ண வெடிகளுடன்//


 இல்லாதவர்களுக்கு ஈன்று இன்பத்தோடு தொடங்கி//


 வேற்றுமையில் ஒற்றுமையாய் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையுமிணைத்து //


 அனைத்து இந்தியரும் ஒன்றாய் இணைந்து//

ராம் , ரஹீம்  , சைமன் கைக்கோர்த்து


தொடர்ந்துக் கொண்டாடும் தீபாவளி திருநாளாம்//


 லதா சங்கரன்
 சென்னை