பெண்மையை போற்றுவோம் 042

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம் 042

பெண்மையை போற்றுவோம் 

குறிப்பு சட்டகம்
*முன்னுரை
*பெண்ணின் பெருமை
*சங்க கால புலவர்கள்
*இன்றைய பெண்களின் தவறான சுதந்திரம்
*ஒளி வீசும் பெண்கள்
*இன்றைய  சாதனை  பெண்கள்
*முடிவுரை


முன்னுரை
            ஆதி  காலம் தொட்டே பெண்கள் அடிமைகளாக  வாழ்ந்திருப்பதை பல  வரலாற்று  நிகழ்வுகளில் காண்கிறோம். இந்த  நூற்றாண்டில் பெண்ணடிமை  சிறுக சிறுக  மங்கி வருவதையும்  நாமே  சான்றாக  வீற்றிருந்து காண்கிறோம்..
 

பெண்ணின் பெருமை :
      " தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  சொற்காத்துச் சோர்விலாள் பெண் ".
  அதாவது  தன்னை காத்துக் கொண்டு, தன் கணவன்  குழந்தைகளையும் காத்துக் கொண்டு குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்து                  கொள்பவளே  பெண் என்கிறார் வள்ளுவர்.. ஒரு பெண்ணை பத்திரமாக பூட்டி வைத்து பாதுகாப்பாதால் பெண்மை ஓங்கி விட முடியாது.. அவர்களுக்கு கல்வியும், அறிவும், தைரியத்தையும்  கொடுத்து தங்கள் கால்களில் தாங்கள் நிற்கின்றோம் என  மன வலிமையை  அவர்கள் உணர்ந்து அதன்  பெருமையை  உலகெங்கும் உணர்த்த  வேண்டும்.. ஒரு மானிட  பிறப்பை  அழகாய் கருப்பையில் சுமந்து ஈன்று  எடுக்கும் பொறுமையானவள்.. பெண் பொறுமையில் பூமியை போல,  பூமி  எப்படி தன்  மீது  சமூகம்  போடும் அத்தனை  ஆட்டத்தையும் சகித்து கொண்டு தன்னகத்தே  புதைத்து கொள்கிறதோ, அதை  போலவே, பெண்ணும் தன்னைச் சார்ந்த குடும்பமும்,சுற்றமும், மேற்கொள்ளும் எல்லா செயல்களையும்  பொறுத்து கொள்கிறது..

* சங்க கால பெண்கள் :
    சங்க  காலத்தில் வாழ்ந்த 1446 புலவர்களில்  பெண்பாற் புலவர்கள்  32 பேர் இருந்தனர்.  இவர்களின் பெயர்களும், அவர்கள் பாடிய  பாடல்களும், அகநானுறு , புறநானுறு,  குறுந்தொகை, பதிற்றுபத்து, நற்றினை  என்கிற பிரிவில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.. இவர்களின் வாழ்க்கையை எடுத்து பார்ப்போமேயானால்   நமக்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான  தகவல்  உள்ளது.. ஔவையார், நச்சள்ளையார், காக்கைபாடினியார், போன்ற  புலவர்கள்  இக்கால தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான  பங்களிப்பை வழங்கி  உள்ளனர்.. கற்பு பெண்களின் தலையாய  நம்பிக்கையாக போற்ற பட்டது..
"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது  இல்."
  என்னும் குறள் பெண்ணிண் பெருந்தகைமை பண்பை  வியந்து  பேசுகிறது...

* இன்றைய  பெண்களின் தவறான  சுதந்திரம் :
    
    இத்தகைய 
  பாரம்பரிய   பெண்கள் இன்று எத்தகைய  வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

*இன்றைய   பெண்களின் தவறான சுதந்திரம் :
    இத்தகைய  பாரம்பரிய  பெண்கள் இன்று எத்தகைய வாழ்க்கை  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது  தான் மிகவும் வேதனை  ஆக  இருக்கிறது.... ஆன்றோர்களும், சான்றோர்களும், கொண்டாடிய பெண் சமூகம்  தற்போது  மிகவும் மோசமான சூழ்நிலையை  சந்தித்து கொண்டிருக்கிறது...
" குரங்கின் கையில் ஏந்திய கோல் போல, "
பெண் சுதந்திரம் தடம்  மாறி அலைந்து  கொண்டு இருக்கிறது.. தற்போது பெருகி வரும் தகவல் தொடர்பு  கருவிகளும் அறிவியல் முன்னேற்ற                       சாதனங்களும்  உலகின் எல்லையை சுருக்கிவிட்டது... அங்கேங்கே நடக்கும் பாலியல் கொடுமைகள் பெண்ணின் பாதுகாப்பு உணர்வை  சீர்க்குலைக்க செய்கிறது.. சிறு வயது  முதலே  பெண்களுக்கு தொடுதல்  குறித்த சீரிய  தெளிவு  வேண்டும். தினமும்  பிள்ளைகளோடு  உட்கார்ந்து மனம் விட்டு பேசும் பெற்றோர்கள்  எத்தனை பேர் உள்ளனர்?...
 பணமும்  சமுதாயத்தில்  பகட்டுக்கும் பழக்கமாக்கி விட்டனர்.. ஒரே  வீட்டில் உள்ள சொந்தங்கள் கூட  ஏக  இடைவெளிகள் . இவை  எல்லாம் களைய  வேண்டும். கல்வியும், உத்தியோகமும் அறிவு கண்ணை திறக்க  வேண்டும்...
 * இன்று ஒளி வீசும் பெண்கள் :
   எங்கள் பெண்கள் சாதாரணம்  ஆனவர்கள் அல்ல. ஏர் பிடித்த கைகள்  இன்று ஏவுகணை  ஆழ்கின்றது.. இரவு  நேரத்தில் வெளியில் செல்பவர்கள் கூட இன்று பணி  காரணமாக  அதிகாலை  வீடு  திரும்புகின்றனர். நாடளும்  பதவி  முதல் விண்வெளியில் பயணம்  வரை  என  வளர்ந்து  ஆணுக்கு சமமாக அனைத்து துறைகளிலும்  ஒளி வீசி  வருபவள்  பெண்..


  இன்றைய  சில  சாதனை பெண்கள் :
      சகுந்தலா  தேவி என்ற  இந்திய பெண்மணி 1980 ம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த  கணித சோதனையில் எண்களின் பெருக்குதொகையை  மனதிற்குள்  கணக்கீடு  செய்து பதில்  கூறினார்.. இவர் மனித  கணினி  என்ற  சிறப்பு பெயர் பெற்றவர்.. இந்திய வம்சாவளி  சார்ந்த அமெரிக்க வீராங்கனை  சுனிதா  வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு பணியை  மேற்கொண்ட இவர் 188 நாட்கள் தங்கியிருந்து  புதிய  உலக  சாதனை  படைத்தார்.. விண்வெளியில்      மாரத்தான்  ஓட்டம், அதிக முறை  நடந்த  வீராங்கனை  என  பல சாதனை புரிந்தார்..
 முதல்  பெண் பொறியாளர் சுதா மூர்த்தி டெல்கோ இன்னும் நிறுவனம்  இவரை தேர்ந்தெடுத்தது.. இவர் தான் இன்போசிஸ் நிறுவனம் சொந்தக்காரர் ஆன  நாராயண் மூர்த்தியின் மனைவி ...
 இன்னும் பட்டியலிட்டு கொண்டே  போகலாம்.. நம் பெண்களின் சாதனைகளை, இவர்களை  முன் மாதிரியாக  கொண்டு பள்ளி பருவம் முதலே  பெண்களை  சரியான பாதையில் கொண்டு செல்லுதல் வேண்டும்.. மனதில் தெளிவும்,செயலில் தைரியமும்,கொண்டு பெண்ணியத்தை  பாதுகாப்பது  வரும் பெண் தலைமுறைகளின் தலையயாய  கடமையாகும்...

முடிவுரை :
  பெண்களை பூ, மான், நிலவு, என  ஒப்பிட்டு பேசிய  கவிஞர்கள் அவர்களின் அழகால் உடல் வடிவமைப்பால் கொண்ட பலவீனத்தை  பற்றி அதிகம்  எழுதுகின்றனர்.. பெண்ணாக பிறந்திட  என்ன மாதவம்  செய்தேனம்மா  என்ற  கூற்று மெய்பிக்கும் வகையில்  பெண் ஒரு உன்னதமே.......


"பெண்மையை போற்றுவோம்" 
பெ.ராமலதா, ஸ்ரீவில்லிபுத்தூர்.