தீபாவளி பண்டிகை

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை

*தீபாவளி*

வாழ்வின் இருள் நீக்கி வண்ணமய
ஒளி தரும் தொன்மையான பண்டிகை!
இந்து/சீக்கியம்/ஜைனம்/பௌத்தம்
என பல்மதத்தவரும் கொண்டாடும்
பாரத நாட்டின் மிகப் பெரும் திருவிழா!
இந்தியா/சிங்கப்பூர்/மலேசியா, நேபாளம்/மியான்மர் நாடுகளின் 
அரசு விடுமுறையான  பொதுவிழா!

 #வடநாட்டில் *லட்சுமி பூஜை* யான
புதுக்கணக்கு துவக்கும் விழா!
லட்சுமி கடாட்சம் பெற தீபமேற்றல்
*விஷ்ணுபுராணம்* பதிவிலானது!

#திருமாலின் *வராக*  அவதாரத்தில்
நிலமகளுடன் இணைந்து/ பிறந்த பவுமன்/தாயால் மட்டுமே மரணமென
வரம் பிரம்மனிடம் பெற்று/நரனவன்
அசுரனாக/கிருஷ்ண லீலையாக
சத்யபாமா நாண் தொடுத்து 
நரகாசுரனை அழித்து/வதம் செய்து,
இந்திரன் தாய் அதிதி காது வளையம்
வர்ண பகவானின் அரசவைக்
கொடியையும் மீட்டுக் கொடுத்து,
இந்துக்கள் தலையில் எண்ணையிட்டு
கங்காதேவி குடியுள்ள வெந்நீரில்
குளித்து/சீயக்காய் தேய்க்கவென,
கிருஷ்ணன் எண்ணையிட்டு குளித்து,
நரகாசுரன் மகிழ்வுற மக்கள்
இத்தினம் கொண்டாட வரமாகப்
 பெற்ற வைபவத் திருவிழாவென
"லீலாவதி மராத்தி* நூலில் பதிவான
 தீபாவளி இன்பத் திருவிழா!

# *தலைதீபாவளி* காணும்
தம்பதியரை கோலமிட்ட மனையில்
அமர்த்தி/நலங்கிட்டு/எண்ணைய் 
தேய்த்து/மோதிரம் அணிவித்து,
மஞ்சள் தடவிய புத்தாடையுடன்
இனிப்பூட்டி/பெரியோர் ஆசி
பெற வைத்திடும் விசேஷ தினவிழா!
உணவில் மோர்க்குழம்பும்/தீபாவளி
 லேகியமும் பந்தியான விழா!
மொகலாயர் பேரரசு கால வழக்க
பட்டாசு கொளுத்தி மகிழும் விழா!

#*ஸ்ரீராமன்*  14 வருட வனவாசம் 
முடித்து/சீதையுடன் இலக்குமணன்
பவனியோடு அயோத்தி திரும்ப,
வீடுதோறும் விளக்கேற்றி அலங்கரித்து/ஆரவாரமாக/வரவேற்ற
மகிழ்ச்சி கோலாகல திருவிழா!

#சக்தியின் 21 நாள் தியான
*கேதார கௌரி விரதம்*  நிறைவுற,
தன்னில் ஒரு பாதியாக்கி,
*கந்தபுராணம்* நூலில் பதிவாகி,
சிவன் *அர்த்தநாரீஸ்வரராக*
உருவெடுத்த மங்கல தினவிழா!

#1577ல் *சீக்கியர்கள்* முன்னெடுத்த
பொற்கோவில் கட்டுமானப் பணி
துவக்கிய புண்ணிய பெருவிழா!
#போதி மரத்தடியில் மெய்ஞ்ஞானம்
பெற்ற *புத்தர்* /தந்தை விருப்பமுற,
மந்திரி காலோதயனுடன்/சீடர்கள்
புடைசூழ கபிலவஸ்துவில் விஜயமாக,
ஏழை/எளியவர்களுக்கு தீபமளித்து
*தீபதானம்  உற்சவமாகி*
பௌத்த மதம் கொண்டாடி,
*ஸ்தவிரத காதை* நூலில் 
பதிவு கண்ட தீபவரிசை திருவிழா!

#மேற்கு நாடுகளில் பல்லினப்
பண்பாட்டின் வெளிப்பாட்டு விழா!
#பாவாபுரி நகரில் *மகாவீரர்*
அரண்மனையில் தங்கியிருந்து,
மக்களுக்கு விடியற்காலை வரை 
அறவுரை அளித்து/ தங்கி விட,
இருக்கையிலேயே மாகாவீரர்
 *முக்தி* அடைந்த சேதியறிந்து,
மன்னன் /வீடுதோறும் விளக்கேற்றி,
உயிர்வதை செய்யாமல்,
பட்டாசு வெடிக்காமல்/அமைதியான
அதிகாலை வழிபாடாக்கிய தினவிழா!

#மூவடி மண் கேட்டு திரிவிக்ரமனாகி,
வாமன அவதாரத்தில் /மாபலி 
சக்கரவர்த்தி திருமாலிடம் பெற்ற
வரத்தினால்/பூவுலகில் விஜயமாக
போற்றிப் புகழ்ந்து மகிழும் தினம்!

#அகால மரணம் சம்பவிக்காமல் 
யமராஜனை *யமதீபம்* ஏற்றி
பிரார்த்தித்து போற்ற வேண்டுமென
*சனாதன முனிவர்* பகன்ற தினம்!

#பிதிர்க்கடன் தீர்க்கவென
புழக்கடையில் விளக்கேற்றி,
படையலிட்டு/வேட்டி, புடவை தானமிட
முன்னோர்களின் ஆசி கிட்டும் தினம்!

#பரம்பொருளே ஆதாரமென
இரவு முழுதும் அணையாது எரியும்படி  
விளக்கேற்றும் *மாணிக்க தீபம்* விழா!
காலை புலர்வதற்குள் நீராட,
கங்கையில் நீராடிய பலன் கிட்டுமென
"தைலே லட்சுமி/ஜல கங்கா!"
 *துலாபுராண வாசகம்* 
பதிவான தீபாவளி திருவிழா!
எண்ணையில் லட்சுமி,
சீயக்காய் பொடியில் சரஸ்வதி,
சந்தனத்தில் பூமாதேவி,
குங்குமத்தில் கௌரி தேவி,
புஷ்பத்தில் யோகினி தேவி,
புத்தாடையில் விஷ்ணுபகவான்,
இனிப்பில் தேவாமிர்தம்,
தீபத்தில் பரமாத்மாவெனும்
அனைவரும் ஆவாஹனமாகி
மரபின் பண்டிகையான  திருவிழா!

# லட்சுமியுள்ள நல்லெண்ணெயில்
குருபகவானுள்ள விரலி மஞ்சள்
துண்டு/புதன் பகவானுள்ள ஓமம் போட்டுக் காய்ச்சி/செவ்வாயுள்ள
மிளகாயிட்டு தலைக்குத் தேய்த்து,
ராகு உள்ள சாம்பிராணி காட்டி
தலைமுடி உலர்த்த நவகிரகங்களின்
ப்ரீதி அளித்த மகிழ்வு கிட்டும் விழா!
ஜீவசேனாவில் *ஹரிஹம்சபுராணம்*
நூலில் தீபாவளிகயா வரியான விழா!

#கி.பி.16ஆம் நூற்றாண்டில்
கோயில்களில் தீபாவளி விழாவானது
*திருப்பதி திருமலை*  வேங்கடவன்
கோயில் தமிழ் கல்வெட்டிலும்,
*திருவாரூர்* மாவட்ட செப்பேட்டிலும்
குறித்த சான்றுகளான விழா!

# தீபாவளி *பகவத்கீதையின் தம்பி*
என ஆசார்ய சுவாமிகள் பகன்ற விழா!
#வடநாட்டில் முதல்நாள் குபேரபூஜை
செய்யும் *சோட்டா(சிலு)  தீபாவளி* ,
2ஆம் நாள் நரகசதுர்த்தியெனும்
*படா (பெரிய) தீபாவளி*
3ஆம் நாள் இந்திரனின் கோபம் தவிர்க்க/மலையைக் குடையாகப்
பிடித்து /மழையிலிருந்து மக்களை
காத்த/கோவர்த்தன பூஜை செய்து
கண்ணனை தீபமேற்றி வழிபாடு,
4ஆம் நாள் பீடை ஒழிய எண்ணெய்
தலைமுழுக்கு வழிபாடு,
5ஆம் நாள் தங்கை யமுனை வீடு
சென்று பரிசு தந்து/உணவுண்டு/தங்கையின் நன்றியோடு யமன்
திரும்பிட /பூவுலக சகோதர்களும் சகோதரி வீடுகளுக்கு இனிப்புடன் சென்று பாசம்/பந்தம்  பகிரும் 
விதவை கோலம் வராமல்
தவிர்க்கும் யமவழிபாடு!
பாரம்பரிய உடையணிந்து,
*ஸ்கந்த புராணம்* உரைத்த
மண்ணாலான அகல்விளக்கெடுத்து
ஆற்றிலே பெண்கள் நினைத்தது
நடந்தேற/ தீபமேற்றி/நீரோடு
விளக்கனுப்பும் மகத்துவ திருவிழா!

# *வாத்ஸ்யாயனரின்* 
யட்ச ராத்திரி நூலில் *சுகராத்திரி*
என இரவில் கொண்டாடும்
விழாவென பதிவான தீபாவளி!
#கி.பி.1117 ல் சாளுக்கிய 
*திருபுவன மன்னன்* ஆண்டுதோறும்
அறிஞர் சாத்யாயருக்கு தீபாவளி
பரிசு அளித்த செய்தி *கிருஷ்ண
லீலை* நூலில் பதிவான தீபாவளி!

# மாடு/எருது/கன்றுகளை
குளிப்பாட்டி/திலகமிட்டு/அலங்கரித்து
ஆராதனை செய்யும் விழாவாக
வடநாட்டினரின் வைபவ தீபாவளி!

# *விக்கிரமாதித்தன்* நினைவாக
வியாபாரிகள் கொண்டாடும் விழா!
#"வருடம்தோறும் சகலகுடிகளும்
எள்ளின் நெய்யாற் செய்து,
தீபவதி நதியில் மூழ்கி எழும்
பௌத்த பண்டிகை" யென
 *அயோத்திதாசர்* பதிவில்
வாய்மொழியான தீபாவளி விழா!

# "சமணர்களிடமிருந்து இந்துக்கள்
பெற்ற பண்டிகை!" என *மயிலை
சீனி வேங்கடசாமி* பதிவான விழா!

# ஐப்பசி தேய்பிறை சதுர்த்தியில்
கொண்டாடும் தீபாவளி,
"குளிர் நீக்க/ஒளி பெருக்கி/ உஷ்ணம்
வீட்டில் வரவழைக்கும் விழா!"
என கரிசல் இலக்கிய எழுத்தாளர்
*கி.ராஜநாராயணன்* 
கருத்தான தீபாவளி பெருவிழா!

# ஜப்பானில் நுகர்வோர் தினமாக,
நேபாளத்தில் பழம்/பணம் தானமாக,
மலேசியாவில் ஹரி தீபாவளியாக,
சிவகாசியில் பட்டாசு விற்பனையாளர்
வாழ்வாதார தினமாகி,
அமிர்தசரஸில் ஜஹாங்கீர் ஆட்சியில்
கைதான சீக்கிய குரு விடுதலை
அடைந்த கொண்டாட்ட தினமாக,
புராணத்தில் எள் விதையிலிந்து 
நெய் கண்டறிந்த தினமாக,
அரசு பணியாளர்களுக்கு 
முதலாளித்துவம் தரும் போனஸ்
பண பட்டுவாடு மகிழ்வு தினமாக,
வாரணாசியில் கங்கை ஆரத்தியாக,
வங்காளத்தில் துர்கா பூஜையாக,
முல்லைத் திணையில் கண்ணன்
வழிபாட்டு தினமாக,
ராஜஸ்தானில் முன்னோர்களை
வழிபடும் பிரார்த்தனை தினமாக,
புத்தருக்கு"ஆத்ம தீபோ பவ!"வரியாக,
செழிப்பு/அமைதி/வெற்றி/மகிழ்ச்சி
தரும் சுகந்த தினமான தீபாவளி!

#குஜராத்தில் 
முதல் நாள் பழையன கழிந்து
புதியன வரவாகும் *வாக் பரஸ்* ,
2ஆம் நாள் *தன்தோஸ்* எனும்
திருமகள் வழிபாடு,
3ஆம் நாள் *காலி சௌதஸ்*
என நாணயம்/தயிர்/தண்ணீர்,
குங்குமம் அபிஷேக வழிபாடு,
4ஆம் நாள் *சௌபாடா பூஜை*
எனும் புது கணக்கு துவங்குதல்,
5இம் நாள் வறியவர்/எளியவர்,
முதியவருக்கு இனிப்பு பகிர்தல்,
6ஆம் நாள் *பஹூ பீஜ்* எனும்
உடன்பிறப்பு தின வழிபாடு
எனும் தீயவை அழிந்து/ நன்மைகள்
பெருகும் தின வழிபாடான தீபாவளி!

#மராட்டியர்கள் கோவிந்தா துதி
பாடி/சிராட்டி கசப்பு பழம் நசுக்கி,
வெற்றிலை மென்று துப்பி,
அரக்கன் இரத்தம் வெளிப்படுத்தும்
ஐதீக வைபவ கொண்டாட்ட தினம்!

#உத்தரப் பிரதேசம்/பீஹாரில்
தன்வந்திரி பூஜை தினமாக,
கோவர்த்தன பூஜையாக தீபாவளி!
#ராஜஸ்தானில் முன்னோர்களை
வழிபடும் *சிரார்த்த தினமான* விழா!

# மகாளயபட்சத்தில் பூவுலகு வரும்
முன்னோர்கள் திதி பெற்று 
மேலுலகம் திரும்பி செல்லும் 
வழியினை ஒளிமயமாக்க 
உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தம்,
வானவேடிக்கை வெளிச்சமுடன்
செல்வதாக *வெடிக்கம்ப விதி*
செய்தியான தீபாவளி திருவிழா!
ராஜஸ்தானில் 4 நாள் பட்டாசு
கொளுத்தி விழா எடுப்பது 
18 ஆம் நூற்றாண்டில் நீலகண்டன்
எழுதிய பதிவான தீபாவளி விழா!
"அக்னியின் ஜாலம்" நிகழ்வதாக
பி.கே. அறிஞர் கோடே
கலாச்சார பொக்கிஷ தீபாவளியை
புகழ்வது சிறப்பான தினவிழா!

# உடல் ஆரோக்கியம் பெற
கங்கா ஸ்நானம்,
தீபத்தில் பரமாத்மாவும்
நெருப்பில் ஜீவாத்மாவும் வசிக்க
அகல்விளக்கில் நெய்தீபமிட்டு
இன்ப வழி தேடுதல்,
தமிழர்களின் தேசிய உணவான
அரிசி மாவு/வெல்லம்/ஏலமிட்ட
கம்பிபாகு கண்ட *அதிரசத்துடன்*
படையலாகும் கௌரி நோன்பு,
கர்நாடக தேசிய இனிப்பான
வாயிலிட கரையும் மைசூர்பாகு,
வங்கத்து ரசகுல்லா,
ஒரிசாவின் கேரட் அல்வா,
ஜெய்ப்பூரின் அஞ்சீர் கட்லெட்,
ராஜஸ்தானில் குஜியா இனிப்பு
என தித்திப்புகளைப் படைத்து
நட்பு/உறவு வட்டங்களுக்கு 
பகிர்தல் காணும் தீபாவளி திருவிழா!

#குலதெய்வ வழிபாடு செய்தல்,
இறந்த பெண் தெய்வங்களுக்கு
உடை/பட்சணம் வைத்து படைத்தல்,
தன்வந்திரி பூஜைக்கான
தனியா/அரிசி திப்பிலி/கண்டந்
திப்பிலி/சுக்கு/சீரகம் கலந்தரைத்த
 தீபாவளி லேகியம் படைத்தல்
எனும் அத்தனை வைபவங்களும்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க
மத்தாப்பு போல் குடும்பம் சிரிக்க
கலாச்சார பண்பாடு மரபு பூத்தூவி
வரவேற்போம் தீபாவளியை!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை.