பெண்மையை போற்றுவோம் 025

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம் 025

 முன்னுரை  :பெண்கள் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்று பழங்கால வரலாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அன்றைய பெண்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, விடுதலைக்கு, பெண்ணுரிமைக்கு, குரல்  கொடுத்துள்ளார்கள்.                      

பெண்மையை   போற்றுவோம்  : மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா, ஆணோ ,பெண்ணோ கருவில் சுமந்து அதற்காக பல தியாகம் செய்யும் பெண்கள் அனைவரும் போற்றுதற்குரியவரே,      
    
  வரலாற்றில்      பெண்கள்   : ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ஜான்சி ராணி, வேலுநாச்சியார், குயிலி ,தில்லையாடி வள்ளியம்மை, அன்னிபெசன்ட் அம்மையார் ,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ,நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்.

இலக்கியத்தில் பெண்கள்,: அவ்வையார், மாசாத்தியார், காக்கைபாடினியார், அந்திமந்தியார், வெண்ணிகுயத்தியார் ,பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கை பாடினியார், வெள்ளிவீதியார், நப்பசையார் , காவற்பெண்டு, மாதவி ,மணிமேகலை கண்ணகி இவர்கள் இலக்கியம் படைத்தவர்கள்.

உலகம் போற்றும் பெண்கள்:         அன்னை தெரசா, ராணி எலிசபெத் அம்மையார், பாகிஸ்தானில் பெண்கள்கல்வி  வேண்டும் என்று 12 வயதில் போராடிய மலாலா,
 
 மாண்புமிகு மகளிர்: காரைக்கால் அம்மையார்
 ஆண்டாள் பக்தி மார்க்கம். தமிழகத்தின் முதல்பெண் மருத்துவர் முத்துலட்சுமிஅம்மையார் பெண்மை புரட்சியாளர். பெண்மை உயர்வு பண்டித ரமாபாய்  முதன் முதலில் தடையை மீறி கல்வி கற்று பண்டிதனானவர். 

புதுமை பெண்கள்: ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் பெண்கள் மருத்துவராவது மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவராகிய இலவச மருத்துவம் பார்த்தவர்.
ஜோதிராவ் பூலே   சாவித்திரிபாய் பூலே  இருவரும் முதல் முதலாக பெண்களுக்காக பள்ளியை தொடங்கியவர்கள்.

தனித்தமிழ் சிறந்த நீலாம்பிகை அம்மையார்.
ஈ.வே.ரா .நாகம்மை இலவச கல்வி திட்டம்.
பெண்கள் மகப்பேரிண்மையை நீக்கி தாய்மையை வரமாக்கும் மருத்துவர்கள்.

சிங்கப்பெண்கள்:
ஜான்சிராணி, வேலுநாச்சியார், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி,  பலபெண் MlAக்கள், MPக்கள், பெண் அரசியல் தலைவர்கள், அனைவரும் சிங்கப்பெண்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் தான்.
வீர மங்கைகள்: வளர்மதி அவர்கள் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர். செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் தமிழகத்தைச் சேர்ந்த பெருமைக்குரியவர். கல்பனா சாவ்லா விண்வெளிக்காக தன் இன்னுயிரை ஈந்தவர்.
தங்கத் தாரகைகள்:
பி.டி. உஷா, பி .வி. சிந்து,  சானியா மிஸ்ரா மேலும் இந்தியாவுக்காக விளையாடிய பல பெண் விளையாட்டு வீராங்கனைகள் அவர்களும் தங்கத்தாரகைகளே.

வாழ்க்கை பயணத்தை ஓட்ட கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு பெண்களும், குழந்தை காப்பாற்ற துடிக்கும் ஒவ்வொரு பெண்ணும்
  வீர மங்கைகள் தான்.
முடிவுரை: அனைத்து பெண்களும் போற்று தற்குரியவர்களே இன்றைய மகளிர் தினத்தில் அனைவரையும் வாழ்த்துவோம்.நன்றி,வணக்கம்.
மை. மதலை மேரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், கோயம்புத்தூர் -31