சாதனைப் பெண்கள் 026

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

சாதனைப் பெண்கள் 026

சாதனைப் பெண்கள்

*முன்னுரை:*

மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தர வேண்டும் என்று பாடினர் கவிஞர் பெருமக்கள். மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என்றார் கவிமணி. வீட்டுக்குள்ளே இருந்த பெண் சமுதாயம் இப்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது. அன்பு, ஆதரவு, அடக்கம் இந்த மூன்று பொருளுக்கும் அர்த்தமாக மனித குலத்தில் வாழும் இறைவனின் உன்னதமான படைப்பிடம் பெண்கள்.
உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நாட்டின் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசா போன்றோரின் பெருமையை இந்த உலகம் இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றது. இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் சிவனுக்கு சக்தி போல தன் கணவனுக்கு பக்கபலமா இருந்து வருகின்றனர்.

இந்த உலகத்தில் பலவிதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள்.  ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக, காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் எத்தனை.  நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல் பெண்ணின்றி உலகமே இல்லை. உடல் உறுதி கொண்டு இருக்கும் ஆண்களை விட மன உறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான். புதியதொரு உலகத்தையே படைக்க பிறந்தவர்கள் பெண்கள்தான்.  சவால்களை தகர்த்து சாதனைகள் பல படைத்து உறுதியான மனமும் உயர்வான எண்ணம் கொண்டிருக்கும் இந்த உலகத்தின் பூ மலர்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒரு சில சாதனைப் பெண்களின் வீரத்தை கட்டுரை வடிவில் பார்க்கலாம்.

*வேலு நாச்சியார்:*

 ஆண்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்த போது பெண்களின் சார்பில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீராங்கனை வேலு நாச்சியார் அவர்கள். அவர்களின் தைரியத்தை இப்போது உள்ள பெண்களுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கும் அளவிற்கு சாதனை படைத்துள்ளார்.

*அன்னை தெரசா:*

உணவு, உடை, இருப்பிடம், இல்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சமூகத்திற்கு பெரும் பாரம் என்று ஒதுக்கப்பட்டவர்களையும், கவனித்தே தன் வாழ்க்கையின் தலையாய கடமையாக எண்ணி வாழ்ந்த தியாக செம்மல் தான் உலக மக்களின் அன்னை தெரசா அவர்கள்.

*ஜெயலலிதா:*

அரசியல் சாசனத்தில் அமர பல ஆண்டுகள் இருக்கும் போது எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்கள். அரசியலில் இருந்த போது நாட்டுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.

*கமலா தேவி:*

தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் கமலாதேவி. ஆண்களைப் போல் பெண்களுக்கும் அரசியலில் பங்கு உண்டு என்பதை நிலை நிறுத்தியவர். தேசப்பிதா காந்தி துவங்கிய சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்ற அறப்போர்களில் பங்கேற்று சிறை சென்றார். பெண்கள் முன்னேற்றத்தில், அக்கறையும், பற்றும் கொண்டு உழைத்தார் கமலாதேவி. 

*விளையாட்டுத் துறையிலும் பெண்கள்:* 

அரசியல், வீரம், கருணை போன்றவற்றில் மட்டும் பெண்கள் கால் தடம் பதிக்காமல் விளையாட்டு துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.

*சானியா மிர்சா :*

 கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண் டென்னிஸ் வீரர்களில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன்   பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார். சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றுள்ளார். மாடலிங் மற்றும் விளம்பர துறைகளிலும் நடித்து வந்தார்.

*சாய்னா நேவால் :*

 இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆவார். லண்டன் 2012 விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.  ஹரியானா ஷட்லர் 2008 இல் BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஆவார்.

*சுனிதா ராவ் :*

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான இவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதி நிதித்துவப்படுத்தினார். அவர் தனது வாழ்க்கையில் ITF சர்க்யூட்டில் எட்டு இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். 2008 இல் அவர் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் உலக அளவில் 144ஆவது இடத்தை பிடித்தார்.

*அஸ்வினி பொன்னப்பா :*

 இந்தியாவின் மிகவும் பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனைகளில் அஸ்வினி பொன்னப்பாவும் ஒருவர். 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவரது சின்னமான தங்கப் பதக்கம், உலக பூப்பந்து விளையாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.

*தீபிகா பல்லிகல் :*

 சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லீகல் ஸ்குவாஷ் வீராங்கனை. தனது 20 வயதில், அவர் இந்திய ஸ்குவாஷின் முக்கிய வீராங்கனையாக மாறினார். தீபிகா 2018 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற சாதனையாளர் ஆவார். இது தவிர பல்வேறு பட்டங்களையும அவர் வென்றுள்ளார். 2014 காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் தட்டியவர் தீபிகா. உலக ஓபன் ஸ்குவாஷின் கடைசி எட்டாவது இடத்து வந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

*முடிவுரை:*

இவ்வாறு பெண்கள் விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுத் துறை, அறிவியல், நகை வடிவமைப்பு, சமூக வலைத்தளம், விமானம், விளையாட்டு, சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல் துறை, போன்றவற்றில் பல சாதனைகளை செய்து வருகின்றனர்.
       உலக அளவில் நாடுகளுடைய அரசியல் தலைவராகவும், நிர்வாக தலைவராகவும் பெண்கள் மாறி இருக்கின்றனர். இவ்வாறான வளர்ச்சி ஆண்களின் சுமையை வெகுவாக குறைத்து ஒரு ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தி தரும்.
        இவற்றை எமது தேசமும் உள்வாங்கி பெண்களை பாதுகாக்கவும், வளர்ச்சி அடைய செய்யவும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஒன்றாகும். 
       இன்னும் உலக வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணிகள் எத்தனையோ பேர் உள்ளார்கள் அவர்களின் தியாகத்தையும், சாதனையும், போற்றும் விதமாக தான் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


இரா. ரம்யா
சென்னை.