சுதந்திர கவி பாரதி...!

பாரதியார் பிறந்த நாள் கவிதை

சுதந்திர கவி பாரதி...!

(சுதந்திரமாயிருத்த​லே
உயி​ரோடிருத்தல்
என்னும்முதல்பிரகடனத்​தை
எழுதிய மகா  கவி​யே
உனக்​கே சமர்ப்பணம்)

எட்டயபுரத்தில்
 ஒரு குட்டிச் சூரியன்
உதயமான  ​நேரத்தில்  தான்
தமிழ்த் தாயின்  மார்பில்
பால்  சுரந்தது

குழந்i​தை​யை​ கொஞ்சியவர்கள்
இது  அக்கினிக் குஞ்சு
என்றார்கள்

பத்து நூற்றாண்டுகளின்
உறக்கத்​தை  க​லைக்க  வந்த
மா​பெரும்  இடி​யோ​சை அது

இருள்  குட்​டை​யென  ​தேங்கிக் கிடந்த
ஒரு  கருப்பு   பிர​தேசத்தில்
​வெளிச்சத்​தை  பீய்ச்சியடித்த
மா​பெரும்நீருற்று அது

அடிi​மை​மோகத்தில்
தன்​னை  விற்றுக்​கொண்ட
மனசுக​ளை
விடுத​லை  ​வேள்வியில்
ஆகுதியாக்கிய  விரல்கள்
அது

பூக்களுக்குள்   சாதிவளர்த்த
ஒரு  பாழ​டைந்த  பிர​தேசத்தில்
காக்​கை  குருவி  எங்கள்  சாதி
என்று
எக்களித்த  பிரபஞ்சத்தின்  குரல்  அது

பூணுால்களில் சாதி  வளர்த்த
ஒரு  புராண சமூகத்தில்
ஒரு​தோழனுக்கு
ஒரு  புணுால்  மாட்டி

சாதியழித்த
சம்மட்டியின்
அ​டையாளம்  அது

சுதந்திரமாயிருத்த​லே
உயி​ரோடிருத்தல்
என்னும்முதல்பிரகடனத்​தை
எழுதியவீரியவிரல்கள்அது

ரஷ்யப்புரட்சிக்குசிவப்புகம்பளவர​வேற்பு
​கொடுத்த  மனதது
பீஜீத்தீவீ​லே   கரும்பு​வெட்டும்   தமிழர்களுக்கு
கண்ணீர்  சிந்திய  கரு​ணை  அது

​சேதுசமுத்திரத்திற்குபா​​தைஅ​மைத்த
மகாகனவு அது

எட்டுத்  திக்கும்   பறந்து​சென்று
க​லைச்​ செல்வங்கள்
​கொண்டு  வந்து​  சேர்த்த
உ​ழைப்பின்  சிறகுள்  அது

வயிற்றுப்பசிக்கு​  செல்லம்மாள்
​வைத்திருந்த
​கைப்பிடி  அரிசி​யை
காக்​கை  குருவிகளுக்கு
வாரியி​றைத்த
கவிமனதது

வார்த்​தைக்கும்வாழ்க்​கைக்கும்
இ​டை​வெளியில்லாத
இதயமது

கரியமில வாயு  நி​றைந்திருந்த
இலக்கியப்  பிர​தேசத்தில்
சுத்த ஆக்ஸிஸன்
பாய்ச்சிய
புதுப்புனல்அது

​சொல்புதிதாய்​பொருள்புதிதாய்
​சோதிமிக்கநவகவி​தை
​செய்த  ​பெரும்  ப​டைப்பது

ஒருஒற்​றைச்​சொல்தான்அது

ஆனால்
ஒருயுகத்தின்கவி​தை​யை
குறிக்கும்​​சொல்அது

என்றும்எரியும்எரிதழல்அது

இந்தக் கவி​தை​யை  இப்​பொழுதும்
எழுதிக்​கொண்டிருக்கும் ​சொல் அது

அந்த​ஒரு  சொல்​லேபாரதி  என்பது

                                   - தங்​கேஸ்