பிரியா விடை...

காதல் கவிதை

பிரியா விடை...

பிரியாவிடை...

பிரிவென்ற சொல்லிற்கு
அர்த்தம் தேடி அலைகின்றேன்
அது ஏனோ தெரியவில்லை
அகராதியிலுள்ள பொருளெல்லாம்
பொருந்தவேயில்லை எனக்கு...
எங்ஙனம் பொருந்தும்?...
யாக்கை மட்டுமே தனித்து தவித்திருக்கிறது
மனமோ நின் நினைவுகளை
மனனம் செய்துக் கொண்டிருக்கிறது....

அதீதமென்பது வெறும் சொல்லல்லவே
ஆழ்மனதை ஆக்கிரமித்து
துளையிட்டுச் செல்லும்
ஆலகால விடம்...
அதீதத்தின் ஆதியும் அந்தமும்
முடிவில்லா பிரிவில் தான்
நிறைவடையுமோ என்னவோ?...
பிரிய மனமின்றி பிரியாவிடையளித்து
முட்களின் படுக்கையில் முகம் புதைக்கிறேன்
உனை மறக்கவியலா தருணங்களில்....

சசிகலா திருமால்
கும்பகோணம்