நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...

பாரதியார் நினைவு தினம் கவிதை

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...

நான்  வீழ்வேனென்று   நினைத்தாயோ...


பாராளும் பாரதியே  எங்கள்  அறிவுக்கவிநீயே!!

உளியால் உருமாறும் சிலரின் வார்த்தைகூட !!

உன்னமுத மொழி கேட்டு மாறுவதுண்மையே!!

 மகத்தான மண்ணுரிமை  நயம்பட  காத்தாய்!!

பெருமை சேர்க்க  பெண்ணுரிமை காத்தாய்!!

 தமிழ் மொழியை சிறப்பித்து வைத்தாய்!!

ஆணுக்கு நிகர்  பெண்னெண  முழக்கமிட்டாய்!!

நிமிர்ந்த நன்னடையும்   நேர்கொண்ட பார்வையும்!!

 நிலையாய் வேண்டுமென உணர வைத்தாய்!!

சாதியக்  கொடுமைகள்  கண்டு் கொந்தளித்தாய்!!

அநீதிகள் நடக்குமிடத்தில் ரெளத்திரம் பழக வைத்தாய்!!

சத்தியத்தை நித்தமும்  தலைகாக்க வைத்தாய்!!

 வார்த்தையில்  அறிவு  வித்தைகளைப் புகுத்தினாய்!!

அநீதிகண்டு அமைதி காக்க  தேவையில்லையே!!

என்றுணர்த்திய என் பாட்டன்  பாரதி(தீ)யின் வரிகளே!!

 பெண்களின்  வாழ்வின் மகத்துவ ஏணிப்படியே!!

வாழ்க பாரதி..!
 
சாதனைப் பெண்மணி

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.