காற்றே சாட்சி ... !011

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காற்றே சாட்சி ... !011

காற்றே சாட்சி..

பாதம் பார்த்து 
மயங்கிய சிந்தை
காதல் நீர் தெளித்து
கண் விழிக்க வைத்ததடி

எல்லைக் கோட்டில்
உடல் போர்த்திய  
உன் இதயம்
தொட்டு விட 
போட்டி போட்டதே 
என் இதயமும் உடலும்

தொட்டது எனது இதயம்
உனது இதயத்தை
பெற்றது அது காதல் பரிசை

மங்கலாய்ப் போனதே 
கோடையில் சூரியன் 
என் விழிகளுக்கு
ஜோதியாய் தெறிந்ததே 
உன் கண்கள் 
என் கண்களுக்கு 
மார்கழியின் அடர்ந்த பனியில்

கண்களால் கண்டு 
பிடிக்கப்பட்ட காதல் 
இதயத்து அருங்காட்சியகத்தில்
பத்திரமாய் பாதுகாக்கப்படுகிறதே
மரணம் எனும் 
கள்வன் வந்தாலும் 
களவாடிச் செல்லாதபடி

முகம் பார்க்க முந்தியடித்த
காதல் பிறந்த காலங்கள்
செவியோரம் உரசிச்சென்ற காற்றில் உன் பெயரின் ஒலி கேட்டு 
திரும்பிய பொழுதுகள் 
காதல் எனக்கு 
வசியம் செய்த காலம்

காற்று ஊடகத்தில்
காதல் சொல் அனுப்பி
கண் ஊடகத்தால் 
பதில் வரக் காத்து நின்ற
நாட்கள் இனிமையானது
காற்றே சாட்சி அதற்கு.

-ஹஸன் எம் பஜீத்
இலங்கை