இப்படிக்கு பாரதி...! 053

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

இப்படிக்கு பாரதி...! 053

இப்படிக்கு பாரதி

நெஞ்சம் பொறுக்க முடியவில்லை
இந்தச் சமுதாயத்தை நினைத்தால்

நான் மட்டும் இப்போது இருந்திருந்தால்
எண்ணமும் செயலும் ஒன்றெனச் செயல் படுவேன்!
குடிசைகளில் வாழும் மக்களுக்குக் கை கொடுத்திருப்பேன்!
பெண்கள் முன்னேற்றம் முயற்சியில் வெற்றி பெற பாடுபட்டு இருப்பேன்!
புதுமையில் சீரழியும் பெண்களுக்குச் சீரிய புத்திமதி சொல்லி இருப்பேன்!
கல்வியில் சாதியின் சாயத்தைக் கழிவி இருப்பேன்!
அரசியலின் அவலங்களைச் சுரண்டி இருப்பேன்!
அதிகாரம் கண்டு அஞ்சி இருக்க மாட்டேன்!
குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தும் கயவர்களை விரட்டி ஒழித்து இருப்பேன்!
கல்லாமல் ஒரு குழந்தையும் வளர விட்டிருக்க மாட்டேன்!
எண்ணமும் செயலும் ஒன்றேனச் செயல்படுவேன் !
எள்ளளவும் அதிலிருந்து மாற மாட்டேன்!
இப்படிக்கு பாரதி.

இர.உஷா நந்தினி சதீஷ்குமார். கோவை.