மகிமை தரும் ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் சிறப்புகள்

மகிமை தரும் ஏகாதசி விரதம்

மகிமை தரும் ஏகாதசி விரதம்

கங்கையைக்  காட்டிலும் சிறந்த 
தண்ணீர் இல்லை!
விஷ்ணுவைக் காட்டிலும் சிறந்த தேவன் இல்லை! 
தாயிற் சிறந்த கோயில் இல்லை! காயத்ரியைக் காட்டிலும்  உயர்ந்த 
மந்திரம் இல்லை!
 ஏகாதசியைக் காட்டிலும் சிறந்த 
விரதம் இல்லை!

திருமாலுக்குப் பிடித்தமான 
திதியான ஏகாதசி!  
தேவதைகள் பகவானை சேவிக்க 
வைகுண்டம் செல்லும் ஏகாதசி!
தேவர்களோடு நாமும் நுழைந்து பகவானை சேவிக்கும் 
ஹரிவாஸரம் எனப்படும் ஏகாதசி!
சுக்லபக்ஷ உபவாசம் இருப்பவரை வணங்குகிறேன் என்று பரமாத்மா அறுதியிட்டு சொன்ன ஏகாதசி!
  
தேவர்களை முனிவர்களை கொடுமைப்படுத்திய *முரனோடு*
பல்லாண்டு போர் புரிந்த களைப்பால் சிம்ஹாஹி குகையில் திருமால் 
பள்ளி கொள்ள/கொல்ல வந்த முரனை திருமால் உடலிலிருந்த தர்மதேவதை கன்னிப்பெண்ணாகி,
பார்வையால் எரித்து சாம்பலாக்க,
தர்மதேவதைக்கு *ஏகாதசி* என பெயர்
சூட்டி/பாவங்கள் நீக்கும்/அஸ்வமேத
யாகம் ஒத்த பலன் தரும் 
விரத மகிமையான ஏகாதசி!

தியானம் இருந்த விஷ்ணுவின் காதுகளிலிருந்து மது/ கைடபர் எனும் இரு அசுரர்கள் வெளிப்பட்டு, தேவர்களை கொடுமைப்படுத்த,
போரிட்டு அவர்களை சரணாகதி அடைய செய்த போது,
"ஏகாதசியன்று திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தரிசிப்பவர்கள்
பாவங்கள் நீக்கி முக்தி அளிக்கும்
வேண்டுகோளே/ வைகுண்ட ஏகாதசி அன்று *சொர்க்கவாசல்* திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் 
விமரிசை நிகழ்ச்சியான ஏகாதசி!

24 ஏகாதசிகளில் இருக்கும் பலனை
ஒரே ஒரு வைகுண்ட ஏகாதசி விரதத்தால் பெறலாம் என 
*விஷ்ணு புராணம்*  கூறும் ஏகாதசி! 
திருவரங்கம் கோயிலிலே முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் ராப்பத்து என்றும் விழா நடத்தப்படும்  ஏகாதசி!
பெரும் புகழ்/ நிறைவான ஆயுள்/ நல்ல ஆரோக்கியம்/ செல்வத்துடன், மோட்சமும் கொடுக்கும் விரதமென யுதிஷ்டிரருக்கு  *சிவபெருமான்*  சொன்னதான ஏகாதசி!
உணவு/ தூக்கம் துறந்து 
பக்தியுடன் ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம்/ ஏகாதசி மகிமை/ புருஷ சுத்தம்/விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க
மூன்று கோடி ஏகாதசிகளை அனுஷ்டித்த பலன் தரும் 
என்ற தேவ உரையான ஏகாதசி!

நந்தவனப் பூக்களை பறித்து செல்பவர்களை பிடித்து வரும்
ஆணையில் **ஜாபாலி முனிவர்*  தவறுதலாக பிடிபட/*ருக்மாங்கத*  மன்னன் மன்னிப்பு கேட்க,
குமட்டி விதைத்து திருடனை பிடிக்க சொல்ல/பூ பறிக்க வந்த தேவலோக பெண்ணின் காலில் குமட்டிக் கொடி படர/ இழந்த தன் தூய்மை திரும்பப் பெற அரண்மனையில் உள்ள துணி வெளுக்கும் பெண்ணின் ஏகாதசி விரத பலனை தானமாக தர செய்து புனிதமாக்க வேண்ட/ மன்னனும்
 உதவ அவள் தேவலோகம் செல்ல,
நாட்டு மக்கள் அனைவரையும் கடைப்பிடிக்கும் படி உத்தரவிட்ட விரதமான சுபிட்சம் தரும் ஏகாதசி!
ருக்மாங்கதன் பரிபாலன ஆட்சியிலே பாப தேவதைக்கு வேலையில்லாமல் போக/பிரம்மன் அவளுக்கு ஏகாதசி அன்று *முழு அரிசியில்*  உட்கார்ந்து கொள்ள சொல்ல/ஏகாதசியில் அரிசியை அன்னமாக சாப்பிட 
பாவம் சாப்பிட்ட பலனோடு/ புழு பூச்சியை சாப்பிடுவதான பலன் 
கிட்டுமென சாஸ்திரம் கூறும் ஏகாதசி! 

தேவர்களும் முனிவர்களும் கடைப்பிடித்து /திருமாலின் 
அருளைப் பெற்ற ஏகாதசி! 
பசுக்களுக்கு அகத்திக்கீரை 
தருகின்ற புண்ணியமான ஏகாதசி!
ஸ்ரீ ராமன் பங்குனி மாத ஏகாதசி விரதம் இருந்து/ கடல் கடந்து,
 தசக்ரீவனை அழித்து இலங்கை வென்ற புராணமான  ஏகாதசி!
துர்வாச முனிவராலும் வெல்ல முடியாத/ ஒரு வருட ஏகாதசி விரதம் இருந்த *அம்பரீஷ* மகாராஜாவை 
திருமாலின் சுதர்சன சக்கரம் காத்ததென *பாகவத புராணம்*  
விளக்கிக் கூறும் ஏகாதசி!

திருகுருங்குடி தலத்தில்
பாணர்குலம் சார்ந்த *நம்பாடுவான்* ஏகாதசியில் எம்பெருமானை பாடி, தானும் உயர்வு பெற்று/ தன்னை அழிக்க வந்த பிரம்ம ராட்சசருக்கும் சாப விமோசனம் அளித்ததாக
*கைசிக புராணம்*  கூறும் ஏகாதசி!

பீமன் ஆண்டு முழுவதும் விரதம் செய்ய முடியாத நிலையில்,
 ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசியில்.  விரதம் நிறைவேற்றி/ ஓராண்டு முழுபயனை பெற்றதாக 
*பத்ம புராணம்* கூறும் ஏகாதசி!

பாற்கடலில் மந்தாரமலை மத்தாக, வாசுகியை கயிறாகக் கொண்டு, எம்பெருமான் *அமுதத்தை*  கடைந்தெடுத்த ஒப்பற்ற 
தினமான  வைகுண்ட ஏகாதசி!
குருஷேத்திர போரில் பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசித்த
நல்தினமான ஏகாதசி! 
வாசல்/ கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து /வேதங்களைக் கேட்டுக் கொண்டே ரங்கநாதன் 
பக்தி வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள, பரமபத வாசல் மணிகள் ஒலிக்க, கதவுகள் திறந்து கொள்ள
ரங்கா! ரங்கா! என்ற கோஷங்கள் 
எண்திசையும் அதிர வைக்க, ரங்கநாதன் பக்தர்களோடு 
பரம பாத வாசல் வழியே 
பிரவேசித்து/அரையர் சேவையோடு ஆயிரம் கால் மண்டபம் வந்து, ஆஸ்தான மண்டபம் சேர்ந்து,
 நள்ளிரவு வரை அங்கிருந்து
தரிசனம் தருகின்ற ஏகாதசி!

காலையில் எழுந்து நீராடி,
திருமால் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி, வணங்கி/ விரதம் இருந்து, 
துவாதசியில் பாரணை விடும்
வீட்டு வழிபாடான ஏகாதசி!

திருநீர் மலையில் பெருமாள் 
நின்றான்/கிடந்தான்/இருந்தான் நடந்தான் என்ற நான்கு ரூபத்தில் காட்சி தருவதால்/தரிசனம் செய்ய நான்கு ஏகாதசிகள் வணங்கிய பலன் தருகின்ற பெருமைமிகு ஏகாதசி!
ஏகாதேசி விரதம் இருப்பவரை பலவந்தப்படுத்தி உண்ண செய்பவன் நரகத்துக்குச் செல்வது உறுதி 
என மனிதனுக்கு சொல்லும் ஏகாதசி!

துவாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி/இறைவனை வணங்கி/துளசி தீர்த்தம் அருந்தி/சூரிய உதயத்திற்கு முன் அகத்தி/நெல்லி/சுண்டை
சேர்த்த உணவுடன் விரதத்தை
 முடித்து/ உறங்காமல் மேற்கொள்ள
வேண்டிய வைகுண்ட ஏகாதசி!

நரகத்தில் இருக்கும் பெற்றோர்கள் தன்னை விடுவிக்குமாறு அழுது முறையிடுவதான கனவு கண்ட *வைகானசன்*  அரசனுக்கு
பரிகாரமாக/மனைவி குழந்தைகளுடன் ஏகாதசி விரதம் இருந்து மூதாதையருக்கு அர்ப்பணம் செய்ய சொல்லி *முனிபுங்கர்*
முனிவர் கூற/விரதம் இருந்து பெற்றோரை நரகத்திலிருந்து விடுவித்து/சொர்க்கம் போக வைத்து,
பெற்றோரை இழந்தவர்கள் 
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 
விரதமான ஏகாதசி! 

திதிகளில் பதினொன்றாவதாக வருவதால்/அந்நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் 5 /மனம் ஒன்றாக 11 சேர்த்து ஒன்றுதலாகி/சரணாகதி மனோபாவத்தோடு கடைப்பிடிக்க, பிறவிப்பிணி அறுத்து/ பெருமான் முக்தி தந்து/ சொர்க்கத்திற்கு வழிகாட்டுவான் என்று சொல்லும்  உட்பொருளான ஏகாதசி!

பக்தியோடு பகவானை தியானித்து
நெறிப்படி விரதமிருந்து
அருள் பெற முனைவோம்!

- முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை.