தென்றல் காற்றே மெல்ல பேசு...010

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

தென்றல் காற்றே மெல்ல பேசு...010


தென்றல் காற்றே மெல்லப்பேசு...


வாழ்கை கசப்பினை மாற்றும் அருமருந்து காதலே//

காதலியே நீ பேசுவது கசக்க வில்லை//

கரும்பு போல் தித்திப்பாய் இனிக்கிறது//

உன் உதட்டின் சுவை தரும் மதுரத்தினை//

மிஞ்சியதில்லை
*எப்போதும் வேறெந்த இனிப்பும்//

வார்த்தைகள் தேடுகிறேன் கவி  படைக்க//

என்னவளின் பார்வையினைத் தேடுகிறேன் வாழ்வு சுவைத்திட//

நெஞ்சம் நிறைந்த புனிதமான உன்னத உறவே//

நீயில்லா துன்ப வாழ்வு  எனக்கில்லையே //

இனிமையாய் வாழ்வினைத் துவங்கிட  வேண்டுமே

எப்போதும்நின் நினைவலைகள் தானேயென் சுகமே//

உயிர்ப்பிக்கும் காதலான உன்னத உறவே//

துடிப்புடன் இருக்கும் என்
இருதயத்தினை//

படிப்படியாய் ஆற்றல் பெறச் செய்தவளே//*

நொடிப் பொழுதும்
நின் நினைவே//

சட்டென சந்தித்த சந்திப்பும் நம்மை//

சாகா வரமாய் மாற்றியதே காதலை//*

விஞ்ஞான  முன்னேற்றப் பாதையில் நாமும்//

மெய்ஞான தீபமாய்

ஒளிதர வேண்டுமே//

தென்றல் காற்றென மெல்லப் பேசியவளே//*

சரித்திரம் பேசட்டும்*
*நம்புனித வாழ்வினையே//

-படைப்பு
கவிஞர் முனைவர்,
செ.ஆயிஷா,
காருண்யம் அறக்கட்டளை,
நிறுவனர்*
பல்லடம்