அறிவர் அம்பேத்கர் 052

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவர் அம்பேத்கர் 052

அறிவர் அம்பேத்கர்.

சுயமாரியாதை மனிதனுக்கு அடையாளமென்ற சுடரொளியே//
விடுதலை வேட்கையை ஊட்டிய வீரமே//
காவடி  தூக்கியோ உண்ணாவிரதமோ சுதந்திரமளிக்காது//
உன்னுடைய உரிமை அரசியல் அதிகாரத்தில்//
கடினமாக போராடி வெற்றிக்கொள்ளென்ற போராளியே//
ஆண்டவனுக்கு செய்யும் நேர்த்தி கடனை//
ஏழையின் கல்விக்கு செய்வது சிறப்பென்று//
மூடத்தனத்தை சுட்டிகாட்டிய சிந்தனை சிற்பியே//
அரசியலமைப்பு சட்டத்தை வழிவகுத்த மேதையே//
ஆடுகளாக இருக்காதீர் சிங்கங்களாக வீறுகொள்ளுங்கள்//
அறிவு சுயமரியாதை நன்னடத்தையே தெய்வாமாகுமென்ற//
சிந்தனையை தட்டி எழுப்பிய பெருந்தகையே//
சாதிதான் சமூகமெனில் வீசும் காற்றில்//
விசம் பரவட்டுமென்ற அக்னி பிழம்பே//
பொது விமர்சனத்திற்கு பயப்படாதவன் சுதந்திரமானவன்//
ஐந்தறிவு ஜீவன்களை தொடுவது புனிதமாகவும்//
ஆறறிவு மானிடரை தொடுவது தீட்டாயினும்//
மதமல்ல அது ஒரு கேலிக்கூத்து//
என்று தீண்டாமையை அகற்றிய கதிரவனே// 
சாதிக்க வேண்டுமெனில் உன்மேல்
நம்பிக்கைவை//
அறிவை தேடி நீங்கள் ஒடுங்கள்//
வரலாறு நாளை உங்களை தேடிவரும்//
எழுச்சியை ஊட்டிய அண்ணல் மாமேதையே//
நீர் கண்ட கனவை நனவாக்குவோம்//

                  - பால. உமா முருகானந்தம்
                  கோவை.