பாவாணர் சுவடுகளைப் பற்றுவோம்...

மொழி தேவநேய பாவணர் பிறந்த தினம் பிப்ரவரி 7

பாவாணர் சுவடுகளைப் பற்றுவோம்...

பாவாணர் சுவடுகளைப் பற்றுவோம்....

தமிழினைத்
தத்தெடுத்தே
தமிழின் தலைமகனானவரே எங்கள் பாவானரே
முத்தாய் எமக்கு கிடைத்த
பெரிய சொத்தானவரே
உலகமே வியந்து போற்றிடும் உத்தமரே

ஆராய்ச்சியின் அரசே பன்மொழிச்
சிறப்பே 
பைந்தமிழ்ப்
பொழிலே
எல்லைகள் வகுத்தே ஏற்றங்கண்டவரே

மாணவர்களை உருவாக்கவே
பலவிதிலும் தூண்டுகோலாய் இருந்தவரே
எல்லாருக்கும் விருது கொடுத்தே மகிழ்ந்தவரே
தமிழை தனது உயிராக எண்ணியே
தேவநேயபலபாவாணர் விருது வழங்கி ஊக்குவித்தவர்
தமிழுக்காக இரவு பகல் பாராது
பசி நோக்காது
கண்துஞ்சாது உழைத்தவரே
இலக்கண இலக்கியத்தை கற்றுத்தே்ந்தவரே
தன்னை வறுமை அரக்கன் அழைத்தபோதும்
தமிழை செல்வத்தால் தாலாட்டியவரே
மொழியைக் காக்கவே
முழுமூச்சாய் உழைத்தவரே
உத்தமரே

எட்டுத்திக்கும் தமிழைப் பரப்பிய பண்பாளரே
மொழிகளின் தனியானது தாயே என்றே கூறியவரே
அனைத்திலும. தமிழை எடுத்து முழங்கிய முழக்கமே
தமிழைத் தழைத்தோங்கச்செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரே

-முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.