பெரியார் என்ற பெருந்தகை...

பெரியார் கவிதை

பெரியார் என்ற பெருந்தகை...
தந்தை பெரியார்

பெரியார் என்ற பெருந்தகை! 

பெரியவர் முதல் சிறியவர் வரை தந்தை
பெரியார் என்று போற்றப்பட்டவர்! 
முடைநாற்றம் வீசி வந்த சமூகத்தில்
மடை மாற்றம் செய்த மகாவீரர்! 

வெண்தாடி விரும்பி வளர்த்தவர்!
பெண்கல்வி பேணிக் காத்தவர்! 
சமத்துவசகோதரத்துவம் பேணியவர்! 
சாதி மதங்கள் கண்டு நாணியவர்! 

கோவில்கள் பெயரில் கொள்ளையர்
கூடாரமாகக்கூடாது என்று போதித்தவர்! 
இந்திய தேசிய எல்லை வரை இவர்
இந்தியை எதிர்த்துப் போராடி சாதித்தவர்! 

மனித மூளையை முடமாக்கும் தீய
மூடநம்பிக்கை ஒழிக்கப் பாடுபட்டவர்! 
சுய மரியாதையுடன் நடந்து கொள்ளவே
சுடரொளியாக மக்களுக்கு விளங்கியவர்


கலப்புத் திருமணம் விதவை மறுவாழ்வு
சமூகநீதி மலர்ந்திட விதைவிதைத்தவர்! 
பெண் ஏன் அடிமையானாள்!? 
என்ற நூல் எழுதி பதைபதைத்தவர்! 

ஆணும் பெண்ணும் சமமென்று
ஆணிவேராய் உறுதியாக நின்றவர்! 
பகுத்தறிவுப் பாதையில் பயணித்து
பட்டறிவு மூலம் மக்களை வென்றவர்!   
சுத்தமல்லி உமாஹரிஹரன்       திருநெல்வேலி

வ. ஹரிஹரன்
348 ஐந்தாம் நடுத்தெரு
தியாகராஜநகர்
திருநெல்வேலி