அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் ..! 040

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் ..! 040


அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் மனிதநேயமே கடவுளை அடையும் வழி என்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியாருடன் இணைந்து மக்களுக்காக சேவை எண்ணம் கொண்டவர்

 அண்ணாவின் பல கவிதைகள் வெள்ளை யாதிக்கத்திற்கு எதிராகவும் நம்மவரின் கொள்ளை யாதிக்கத்திற்கு எதிராகவும் முழங்குகின்றன

 ஏழ்மை வறுமை ஒழிந்து சமத்துவம் மலர வேண்டும் என்பது இவரது பேரெண்ணமாக  இருப்பதை பல
 கவிதைகள் மெய்ப்பிக்கின்றன

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று உரைத்து

 அதனில் அண்ணா அண்ணாவாகவே திகழ்ந்தார்

 அண்ணாவின் பேச்சிலே இனிமே உரைநடையிலே கம்பீரம் எழுத்தாற்றலிலே படைப்புகள் ஏராளம்

 சமூகப் புரட்சி பணியில் ஈடுபட்டு 

தம் வாழ்க்கை சிறந்த பாதையை அடைந்து அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது

 ஆங்கில மொழியில் புலமை பெற்று ஆங்கிலேயரை வியக்கும் வண்ணம் ஆற்றல் பெற்று
 யேல் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சம்பவமாகும். 

அறிஞர் அண்ணாவின் செயலும் சொல்லும் 
ஆகாயம் போல் பரந்து விரிந்தது. 

த. சித்ரா இராஜபாளையம்.