கவிதையின் தலைமகன் பாரதி..! 019

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

கவிதையின் தலைமகன் பாரதி..! 019

கவிதையின் தலைமகன் பாரதி.. 

எங்கள் தமிழ் தேரின் சாரதியே
முண்டாசுக் கவியே.....
நிந்தன் கவிதைகளைப் படிக்கையிலே
எங்களுக்குள் கர்வம் 
ஓங்கி வளருதய்யா....
மொழிகளுக்குள் ஆயுதம் வைத்தவர் நீரய்யா... 
இனிய கவிதைகளையெல்லாம் 
உன்னை போல் ஏடுகள் கூட சொன்னதில்லையய்யா....
நீர் கவி பாடி வருகையிலே
நெஞ்சம் கள்வெறிக் கொள்ளுதய்யா ...

கவிதையின் தலைமகனே...
நீர் சூழ்ந்த கருவறையில் உதித்திட்ட
அனல் பறக்கும் நெருப்பு சூரியனய்யா.. 
உனக்காய் கவி படைக்க முற்பட்டு
தோற்றுதான்  போனோமய்யா....
உந்தன் கவிதைக்கு நிகர்
உனதன்றி வேறேதுமில்லையய்யா...
நிந்தன் படைப்புகள் சுடர் விளக்காய்
இன்னும் பலரது வாழ்வில்
ஒளி வீசிக் கொண்டுதானிருக்கிறதய்யா...

சுதந்திர தாகம் கொண்டு
சுற்றித் திரிந்தவனய்யா
தன் கவித்தீயால் சுதந்திர வேட்கையை
காட்டுத்தீயாய் பரவச் செய்தவனய்யா... 

சாதாரண கருவை அல்ல
கவிதையின் கருவையே
சுமந்தவள் உன் தாயய்யா...
நீர்  மண்ணைவிட்டு சென்றாலும்
நிந்தன் புகழ் என்றும்
விண்ணைத் தொட்டே செல்லுமய்யா....
வெற்றுக் கவிஞன் அல்ல
தமிழ்ப் பற்றுக் கவிஞனய்யா.. 
மரணிக்கா மரணம் பெற்றவரய்யா.. 
கவிதையின் தலைமகனே....
தலை வணங்குகிறோமய்யா உமக்கு....
வாழ்க பாரதி......

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.