மனித நேயம்

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

மனித நேயம்

மனிதநேயம்

அந்த அழகான குருவிக்கூடான குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை...
ஆதவனும் மனைவியும் பத்து வயதே ஆன இரு பெண் குழந்தைகளுமே உள்ளன.அன்பு பண்பு பாசம் நேசம் நிறைத்து
வறுமையில் இருந்தாலும் வசந்தமாய் வாழ்ந்தனர்

ஒருநாள் கோயிலுக்குச் சென்றனர்.  போகும் பாதை நெடுக பிச்சைக் காரர் அமர்திருந்தனர்.
அதில் ஒரு ஆறு வயதே ஆன சிறுவனும் அமர்ந்திருந்தான் அழுக்கான உடல் தலையில் வெட்டாத மூடி. கிழிந்து தொங்கிய ஆடையென பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

கீதாவும் சீதாவும் பார்த்துக் கொண்டே கோயிலுக்குள் சென்றனர் சாமிகும்பிட்டு முடிந்ததும்  கொஞ்ச நேரம் கோயிலில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெளியில் இருந்த சிறுவன் கையில்  ஒரு பர்சினைக் கொண்டு வந்து ஆதவனிடம் நீட்டினான். அப்போது தான் ஆதவன் பாக்கெட்டில் கைவைத்துப் பார்த்தான் பர்ஸ் இல்லை. எங்கு கிடைத்தது எனக் கேட்டான். சிறுவனும் நீங்கள் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கும் இடத்தில் தவறி விழுந்து விட்டது நான் கண்டு எடுத்து வந்தேன் என்றான். 

ஆதவனும் வியந்தான் சிறுவனின் செயல் சிறப்பு துன்பத்திலும் அவன் நேர்மையைப் பாராட்டினான்.
தாய் தந்தை இல்லையா எனக் கேட்டான்.  அவனும் இல்லை என்றதும் கீதாவும் சீதாவும் அப்பா.. அப்பா... அந்தத் தம்பிய நம்ம வீட்டுக்குப் கூட்டிட்டுப் போகலாமே என்றார்கள்.
ஆதவன் மனைவியும் ஆமாம் என்றே அந்தச் சிறுவனை மனிதநேயத்துடன் அழைத்துச் சென்று வறுமையிலும் தன் பிள்ளைகளைப் போல பெற்ற பிள்ளையாய் வளர்த்தனர். அன்பான மனங்கள் எப்போதும் ஆறுதலைத்தான் தரும் என்பற்கு உதாரணம்

கிருஷ் அபி இலங்கை.