முயற்சியும் முழு பலனும்...001

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

முயற்சியும் முழு பலனும்...001

முயற்சியும்  
       முழுப்பலனும்.

வெளியூர் சென்று சிலகாலம் கழித்து சொந்தகாட்டிற்குத்திரும்பிய ஒரு பாப்பாபறவைக்கு பெரிய அதிர்ச்சி காரணம் தான் வாழ்ந்து வந்த மரத்தோடு சேர்த்து காட்டையே அழித்துவிட்டனர் மரவெட்டிகள்.
    
        பாப்பா பறவையோ கதறிக்கதறி அழுதது. காட்டையே சுற்றிச்சுற்றி பறந்து வந்தது. 

    ஒரேஒரு இடத்தில் சரியாக வெட்டப்படாத மரம் லேசாகக்த்துளிர்த்திருந்தது. பாப்பாபறவை அந்த மரத்தை எப்படியாவது காப்பாற்றி பெரியமரமாக்க நினைத்தது. கீழே கிடந்த காய்ந்த இலைகளைக்கொண்டு ஒரு தொன்னை செய்தது. 

     தூரத்தில் எங்கோ இருந்த ஒரு குளத்தில் இருந்து தொன்னையில் தண்ணீர் கொண்டுவந்து தினமும் அந்த சரியாக வெட்டுப்படாத மரத்திற்கு ஊற்றியது. குளத்திற்குப் பக்கத்தில்  இருந்த புதர்ச்செடியின் கீழ் உள்ள பொந்தில் ஒரு முயல் வாழ்ந்து வந்தது. இருவரும் நண்பர்களாயினர். தண்ணீர் எடுக்கவும் புதிய தொன்னை செய்யவும் முயல் பாப்பா பறவைக்கு உதவியது. 

          கொஞ்சநாள் கழித்து பறவை முயல் மரம் எல்லாம் வளர்ந்து விட்டது.  முயலும் பறவையும் பெரியமத்தில் சென்று வாழத்தொடங்கின. மரத்தில் வாசனைப்பூக்களும் சுவையான பழங்களும் நிறைய இருந்தன. பழங்களைத்தேடி உண்ண நிறைய பறவைகள் அங்கு வந்தன.   பறவைகள் எல்லாம் பழங்களைத்தின்றுவிட்டு எச்சங்கள் மூலம் விதைகளைக் காடு முழுவதும் பரப்பின. 

          அப்போது வழிப்போக்கன் ஒருவன் அந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தான். பழங்களைச் சுவைத்து மகிழ்ந்தான். தினந்தோறும் அங்குவந்து பழங்களைப்பறித்து வியாபாரம் செய்யலாமா என யோசித்து நண்பர்களை அழைத்துவந்தான். பறவைகள் எல்லாம் ஒன்று கூடி அ ம்மனிதர்களைத்தடுத்து
நன்றாக இருந்த காட்டை நீங்கள் விறகுக்காகவும் சாலையை அகலப்படுத்துவதற்காகவும் அழித்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள் கஷ்டப்பட்டு மீண்டும் இந்த மரத்தை உருவாக்கியுள்ளோம். 

      ஆனால் நீங்கள் இன்று பலனைமட்டும் அனுபவிக்க வந்துவிட்டீர்கள். இது என்ன நியாயம்? மேலும் சிலகாலம் கழித்து இந்த மரம் பழம் தராமல் போனால் இதையும் வெட்டிவிடுவீர்கள். எனவே தயவு செய்து நீங்கள் போய்விடுங்கள் என்று கூறி. 

       உடனே அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டதோடல்லாமல் நாங்கள் மரத்தை வெட்டமாட்டோம் என்று உறுதிகூறினர்.மேலும் 
  நாம் அனைவரும் சேர்ந்து புதிய காடு உருவாக்குவோம் என்று கூறி அவ்வாறே செய்தனர். காடு உருவாகியதால் மழை நன்றாகப் பெய்து ஆறுகள் உருவாகி நிலம் செழித்தது. இதனால் காட்டின் அருகே விவசாயம் பெருகியது. மக்களும் அங்கே குடியேற யாபாரம் வளர்ந்து ஒரு வளமான நகரமே உருவாகியது. மக்கள் அனைவரும் பாப்பா பறவையைப் பாராட்டி அதனை தெய்வமாகப் போற்றினர். பின்னாளில் அப்பறவைக்காக "பறவைக்கோயில்" ஒன்றையும் கட்டி வழிபட்டனர்.

  நீதி: மரமிருந்தால் மனிதருண்டு.

- பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை.
நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.6266125.