ஞான ஒளி...! 017

சிந்தனை சிற்பி விருது சிறுகதை போட்டி

ஞான ஒளி...! 017

ஒளிக்கீற்று காலதர் ஓட்டை வழியே ஊடுருவியது.
தம்பி மணி என்ன ஆகுது?
 நீ இப்படியே படுத்து கிட்டே கிடந்தா வேலைக்கு காலந்காத்தால போறதில்லையா... 
தம்பி...எந்திரி எம்புட்டு நேரமா எழுப்பி கிட்டே இருக்கிறது சொல்லு
அம்மா குட்மார்னிக்
 இன்னும் அஞ்சு நிமிசம் தான் ப்ளீஸ் 
இப்ப எந்திரிச்சி பல்ல விளக்க போறீயா இல்லையா?
 ம்ம்ம் 
இறைவா என்ன மட்டும் காப்பாத்து!
சரி சரி சீக்கிரமா கிளம்பு.
 துண்டு எங்க?
கொடியில கிடக்குது பாரு.
 சரிம்மா கொஞ்ச நேரத்துல கிளம்பிறேன்
இப்படி சொல்லிக்கிட்டே இரு சீக்கிரம் சீக்கிரம்...
வந்துட்டேன் 
சரி  இந்தா இதை சாப்பிடு அதற்குள்ள டீ சூடாயிடும். 
 பரவாயில்ல! சூடு கம்மியா இருந்தாலும் ஒகே தான்.
டீ குடிச்சிட்டேன் சரி நான் கிளம்புறேன்
அலுவலகத்தில்  நுழைந்ததும் வணக்கம் சார்  சொல்லிக் கொண்டே நடந்தான்
சிலவணக்கம் பதிலாகவும் சிலவணக்கம் சைகளாகவும் வந்தன
கல்லூரி முதல்வரின் பரிவாரங்களுள் இவனும் ஒருத்தன்
 அலுவலக உதவியாளர் பணி
அப்படி என்ன வேலை
கோப்புகளை எடுத்து தருதல். தட்டச்சு செய்து தருதல்
அழைப்புகளை எடுத்து தகவல் வழங்குதல்
தேவைப்படும் நேரமெல்லாம் நடைப்பயணம் மேற்க்கொண்டு யாரை அழைத்து வரச் சொன்னார்களோ அவர்களை எல்லாம் அழைத்து வருதல்.
சிறப்பு விருந்தனர் யாரேனும் வந்தால் தேநீர் இவடை அளித்து உபசரிக்கும் ஒயாத பணி 
ஞான உதயம்
ஓய்வில்லா பணி...
மணி அடிக்கும் ஒசை நேரம் காலை 9.30 மணி
வகுப்பறைகளில் பாடம் மும்மரம் எங்கும்  உரத்த குரலில்  சொற்பொழிவுகள் அடடா 
முதல்வர் உலா வரும் நேரம் காலை 10.00 மணி
மாணவர்கள் பேராசிரியர்கள் விழிப்புடன் இருந்தனர்
 முதல்வர் வெளியில் நின்று கவனிக்க தொடங்கினார்
அலுவலக உதவியாளர் அவசரமாக முதல்வரை தேடிக்கொண்டிருந்தார்
இரண்டாம் தளத்தில் மூச்சு வாங்க ஏறிக்கொண்டிருந்தார் உதவியாளர்
முதல்வர் உதவியாளர் வருவதைக் கண்டு கொண்டார்
வணக்கம் சார்! பல்கலைக்கழக பேராசிரியர் தங்கள் அறையில் காத்திருப்பதாக கூறினார் உதவியாளர்
சரி !நான் வருகிறேன் நி போய் மத்த வேலைய பாரு...
தலையசைத்த படி விரைவு காட்டினார் உதவியாளர்
மாணவர்கள் பேராசிரியர்கள் தங்கள்வகுப்பறையை விட்டு வேறு வகுப்பறைக்கு மாறிய தருணங்கள் புது காட்சியாய் கொண்டிருந்தன
முதல்வரை கண்டதும் வணக்கம் பவ்வியமாய் இருந்தது.
மறு பாடவேளை தொடங்கியது.
வந்த வேளை முடிந்தது
 முன்னேற தொடங்கினார் முதல்வர் தம் அலுவல் அறையை நோக்கி..
பேராசிரியரை கண்வுடன் வாங்க சார் எப்படி இருக்கீங்க....
நல்லா இருக்கேன் சார்
 நீங்க எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கோம்.
யூனிவர்சிட்டி அலுவலகத்தில் வேலை எப்படி போகுது 
பரவாயில்லை சார்
உதவியாளர் தேனீர் வடையின் ஐயா உள்ளே வரலாமா 
வாங்க ..
காலை 11.20 இடைவெளி
கேண்டீன் நோக்கி யாவரும் படையெடுப்பு
கூட்டநெரிசல் அதிலும் ஒரு சுகம் தான்
முன்னேறுவதில் எவ்வளவு சிரமம்
நேரம் முடிந்தது
மணியோசை காதில் கேட்டு பலரும் இகாதில் கேளாத சிலருமாய் இருந்ததனர்
நூலகத்திற்கு ஒரு சாரார் சென்றுக்கொண்டிருந்தனர்
அவ்விடம் அமைதியோ அமைதி!
சில மாணவர்கள் புத்தகத்தை வேவு பார்த்துக் கொண்டிருந்தனர்
தினசரி நாளேடு பலரது கைக்கு வர காத்திருப்பு பட்டியலில் இருந்தது
கணினி ஆய்வகம் நிரம்பி வழிந்திருந்தது
கரும்பலகை முன் கணித பேராசிரியர் நின்று கொண்டு கவனிக்காத மாணவரை கடிந்து கொண்டிருந்தார்
கதை கேட்க ஆர்வமாய்மாணவர்கள் தமிழ் வகுப்பறையில் கன்னத்துல கை வைத்து காத்திருந்தனர்.
தன்னை யாருமே வாசிக்க சொல்ல கூடாது என உசாரானசிலர் தலை வணங்கியபடி ஆங்கில வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்
பல பாடங்கள் ஆங்காங்கே வகுப்பறையில் அரங்கேற்றம் செய்து கொண்டிருந்தன.
மதியம் 1.00 உணவு உண்ணும் போட்டி தொடங்கியது. 
சாப்பாடு வேளைதான்
 அது பண்டமாற்று முறையை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தது.
வகுப்பு செல்வதற்கு முன்னரே கழிவறை அறையில்  சில மாணவர்கள் அங்கு சில சிறிய காகிதங்களை மறைத்து   வைத்துள்ளனர்.
துப்புரவாளர் கைகளில் சில நேரங்களில் அந்த பொக்கிசம் சிக்குவதுண்டு.
அதுவா ...
புகையிலை வகையை சேர்ந்த  ஏதோ ஒரு போதை தூள் மாறி  இருக்கிறது.
காலக்கொடுமை படிக்குற வயசில இதெல்லாம் தேவையா.. என முணுமுணுத்தப்படியே தலையில் தட்டிக்கொண்டார் அறுபத்தெட்டு வயதான அந்த தூயவர்
வகுப்பில் மாணவர்கள் சிலர் கவனிக்கல தூங்குறாங்க
 தியான தூக்கமா?
அசதி தூக்கமா? 
மருந்தை உட்கொண்ட தூக்கமா?  உண்ட மயக்கமா? அவரவருக்கே வெளிச்சம்.
நல்லவேளை  வேளை நேரம் 4.00. மணிக்கு முடிவுக்கு வந்தது .
கல்லூரிப்பேருந்து தயாராக இருந்த நேரம்
  ஒரு மாணவன் மட்டும் நடத்துநர் கிட்ட வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்
ஓட்டுநர் இதை உதவியாளரிடம் சொல்ல ...அருகில் இருந்த பேராசிரியர்  முதல்வர் காதுக்கு எட்டும்படி செய்துவிட்டார்
அவ்வளவுதான்
 உதவியாளரை சற்று கோபமாக பார்த்து அந்த பையனை இங்க கூட்டிட்டு வாங்க போங்க 
சரிங்க அய்யா..
தம்பி உன்னை முதல்வர்   வரச்சொன்னாங்க வா போகலாம்
முகத்தை கையால் துடைக்க ஆரம்பித்தான் பிறகு நடந்தான்.
விசாரணை ஒரு மணிநேரத்தை கடந்தது.
நாளைக்கு நீ உன் பெற்றோருடன் வர வேண்டும் என கல்லூரி முதல்வர் உத்தரவுப்போட்டார்
பேருந்தில் நடந்தது என்ன? என ஆராய்ச்சியில் சில மாணவ மாணவியர் பேசிக்கொண்டிருந்தனர்.
கல்லூரிப் பேருந்து சாலையை கடக்க இதுவும் கடந்து போகும் என்றாயிற்று.
உதவியாளர் முதல்வரை காரில் அனுப்பி வைக்கும் வரை கை கட்டி நின்றுக்கொண்டிருந்தார்.
பிறகு ஒருவழியா  உதவியாளர் மிதிவண்டியை மிதிக்க புறப்பட தயாரானார் ..
காலம் கனவை புரட்டிப்போட்டிருந்தது.

காலச்சக்கரம் சைக்கிள் சுழல்வதை படம் பிடித்துக்கொண்டிருந்தது
 நாமும் அந்த காலத்துல ஒழுங்கா படிச்சு இருந்தா இன்னைக்கு இப்படி திருந்தி இந்த வேலைய பார்க்காமஇதை விட நல்லா இருந்திருக்கலாம்.
ச்சே...கூடா சேர்க்கை கேடா முடியும்
நல்ல பழக்கம்கொண்ட பலர் தொடர்ந்து படிக்கவும் நல்ல பணியில் சேர்ந்தும் இருக்கிறார்கள்
இன்று இதை  தாமதமாக உணர்த்த உதவியாளர் உதட்டில் சிறு புன்னகையை மட்டுமே  வரவழைத்தது
பிறகு என்ன. பெல் ஒலி அடித்து கொண்டே சென்றான்.

படைப்பாக்கம்
கவிஞர் ச.குமார் 
சிவகங்கை