நிமிர்த்து நில்

புதுக்கவிதை

நிமிர்த்து நில்

நிமிர்ந்து நில்

தடைகளை வீழ்த்திடு
துணி வினை வளர்த்திடு
காலம் ஒரு நாளும்
நமக்காக மாறாது
காலத்தை மாற்றிட
நிமிர்ந்து நில்
கோழை என்று எவருமில்லை
கோபம் கொண்டால்
கோழையுமில்லை
சங்கடத்திலும் நிமிர்ந்துநில்
சரிவிலும் சிரித்து
நிமிர்ந்து நில்
நிமிர்ந்த பாரதியின் புகழ்
சரித்திரத்தில் நிலை 
கொண்டுயிருக்கிறது
பௌர்ணமி அழகை பெற
கூனல்பிறை வருந்தியதில்லை
வனப்பான வலை இல்லம் பெற
சிலந்தியும்
 சோர்ந்ததில்லை
வெற்றி நடை போடு
நிற்காதே!நிமிர்ந்து நில்
உன் பின்னால் பலர்
இருப்பர்
துணிந்து நில்
நிமிர்ந்து நில்.

     முனைவர்.வெ.இந்திரா
                        ஒசூர்.