மோதி மிதித்திடு பாப்பா...! 047

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மோதி மிதித்திடு பாப்பா...! 047

மோதி மிதித்திடு பாப்பா...!

அகிலமதில் அதிசயம் நீதானே/
ஆட்சி செய்யப் பிறந்தவளும் நீதானே/
காட்சிப் பொருளாய் கற்பனை செய்வோரை/
கண்டிக்கும்  நீதிமையமும் நீதானே/

வன்கொடுமை செய்யும் 
வர்க்கத்தினை/
வளர விடாமல் வேரருக்க பிறந்தவளே/
வசைபாடி நகைப்போர் நடுவே நீயும்/
அசையா ஆலமரமாக
நின்றிடல் வேண்டுமம்மா/

சீண்டிப் பார்க்க நினைப்பவருக்கு நீயே/
தண்டனை வழங்க வேண்டும் பாப்பா/
பாரதியின் ரெளத்திர 
சொல்லின் அர்த்தத்தினை/
பாரெங்கும் விதைத்து விடு பாப்பா/

வான் சிறப்பினை வாரி வளங்கும்/
வளமான மாரியொப்பவே/
மண் சிறக்க பிறந்த தேவதையாம்/
கண் இமையை  ஒப்பவளாம்/  

நாளைய பாரதத்தின்
நம்பிக்கை தூணென/
நாளும் பறை சாற்றிடுவாயடி பாப்பா/
உன்மீது விழும் இடர் பாடினை/
ஊக்கமுடன் மோதி மிதித்துவிடு பாப்பா/

-கவிஞர் முனைவர்
 செ. ஆயிஷா
பல்லடம்