குழந்தைகளை கொண்டாடுவோம்...! 011

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

குழந்தைகளை கொண்டாடுவோம்...! 011

 "குழந்தைகளை கொண்டாடுவோம்"...

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர். 

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர். இக்குறளுக்கு  ஏற்ப ஒரு சிறுகதை.

              நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்று இருந்தேன். அது ஒரு அழகிய கிராமம், எங்கு பார்த்தாலும் வயல்வெளி பச்சை பசேல் என்று கண்ணிற்கு இனிமையாக காட்சி அளித்தது. இரு புறமும் வயல்வெளி ,வீட்டைச் சுற்றியும் தென்னை மரங்கள், தென்றல் காற்று தவழ்ந்து வர, கிளிகளின் சத்தம் குயில்களின் கூவல், இப்படி அனைத்தையும் ரசித்துக் கொண்டு என் தோழியின் வீட்டிற்குள் நுழைந்தேன். வாங்க! வாங்க! என்று அன்புடன் அழைத்தார் என் தோழியின் தாய். பிறகு உள்ளே நுழைந்ததும் அமருங்கள் என்றார்  தோழியின் தந்தை. நான் அமர்ந்ததும் அங்கே கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது!
                     வீட்டிற்குள் ஒரு புது வசந்தம்! எப்படி நான்    வழியெங்கும் இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்து வந்தேனோ! அதுபோல வீட்டிற்குள் இரண்டு கால் முளைத்தப் பட்டாம்பூச்சிகள்! பூ போட்ட பாவாடை போட்டுச் சுற்றித்திரிந்தனர். அந்த வண்ணத்துப்பூச்சியின் பெயர்களோ கயலினி, மகிழினி அதில் மகிழ் மிகவும் சுட்டி கயல் கேள்வி கேட்பதில் படு கில்லாடி . அப்போது என்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் தாத்தாவிடம் வந்து அமைதியாக அமர்ந்தாள் மகிழினி. அவரின் மூக்குக் கண்ணாடியை அழகான தனது பூங்கையின் சிறு விரல்களால் பற்ற முயன்றால் ஒருமுறை அல்ல பலமுறை அந்த மூக்கு கண்ணாடியை பிடுங்கினார் நான் நினைத்தேன் இந்த அழகு மிக்க இளம் பிஞ்சு கைவிரல் மூக்கு கண்ணாடியின் புதுமையை ஆராய்ந்து அதில் உள்ள கண்டுபிடிப்புகளை அறிய தன் தாத்தாவிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தது. கயல் தன் அன்னையிடம் சமையல் வேலைக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் அவளும் சளைத்தவள் அல்ல தன் அம்மாவிடம் பல கேள்விகள் எப்படி சமைக்கிறாய்? எதற்கு? ஏன்? எப்படி? என்று கேட்டு தெரிந்து கொண்டாள். எப்படியும் ஒரு வழியாக அம்மா செய்த சமையல்களை அறிந்து கொண்டாள். ஆம் குழந்தைகள் கேள்வி கேட்கும் ஆற்றல் அவர்களின் சிந்தனைகளை பெருக செய்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் புதிய படைப்புகள் எனவே அவர்களின் வருகை நமக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது அங்கு இருந்த ஒவ்வொரு நொடியும் பல புதிய செய்திகளை நான் அறிந்து கொண்டேன். சமையல் முடிந்ததும் அன்போடு என்னை வாங்க அம்மா உணவு சாப்பிடலாம் என அந்த இரண்டு பிஞ்சு கைகள் என்னை அழைத்து பரிமாறிய அழகு பேரானந்தம்.
                குழந்தைகள் கடவுளின் வரங்கள் எனவே அவர்களை போற்றுங்கள் நான் அங்கு கண்ட காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஆம் குழந்தையை நேசிக்கும் பெற்றோர்கள் அரவணைக்கும் தாத்தா பாட்டி அழகிய இயற்கை எழில் கொண்ட சூழல் என குழந்தைகளை மேலும் நல்ல சூழலில் வளர ஏதுவாக இருந்து. குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு அவர்களின் சூழ்நிலையும் ஒரு காரணமாகும்.
      ஆனால் தற்போது தனித்து விடப்பட்ட குழந்தைகளின் கையில் செல்போன் கொடுத்து குழந்தையின் சிந்தனையை செல்லரிக்க செய்கிறார்கள். எல்லா குழந்தைகளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
               அப்துல்கலாம் ஐயா கூறியது போல இன்றைய குழந்தைகள் நாளைய விஞ்ஞானிகள் எனவே குழந்தைகளை கொண்டாடுங்கள்.
      குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளின் மனம் அறிந்து செயல்படுங்கள். நன்றி !வணக்கம்!
    
- இர.உஷாநந்தினி சதீஷ் குமார் 
9/798-5 ஆபீஸஸ் காலனி
பச்சாபாளையம் , பேரூர்,
கோவை-641010

வாய்ப்புகள் ஒவ்வொன்றும் வரமே! வாய்ப்பு அளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ..!