கருணை..! 010

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

கருணை..! 010

கண்ணா மாலா எந்திரிங்க... எந்திரிங்க. ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா? எந்திரிங்க... எந்திரிங்க .என்னம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் அம்மா என்றால் மாலா. என்ன அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்றான் கண்ணன். தங்கங்களா விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு தூங்கறக்கெல்லாம் நேரமில்ல எந்திரிச்சு பல்லவிளக்குக .என்றார் அம்மா. சரிங்க அம்மா என்று இருவரும் கூறிவிட்டு பல்லை துலக்கினார்கள். அம்மா தயாரித்தசுமாரான தேநீரை பாசத்துடன் இருவரும் குடித்தனர்.அம்மா, அப்பா எங்கே? என்றால் மாலா.உங்க அப்பா இன்னைக்கு நேரத்திலேயே வேலைக்கு போயிட்டாறு மா.பாத்தியா அப்பா என்கிட்ட கூட சொல்லாம போயிட்டாரு என்று சினங்கினால் மாலா. சரி சரி வேலைய பாருங்க, என்றார் அம்மா .குளித்து, உடை அணிந்து ,உணவு அருந்திவிட்டு, இருவரும் வாசலுக்கு வந்தனர். அம்மா, சைக்கிள் சாவி எங்க என்றான் கண்ணன். இதோ, இங்க இருக்கு கண்ணை முழிச்சு பாரு.அம்மா கூறியதை கேட்டு மாலா கலகலவென சிரித்தால். கண்ணன் சைக்கிளை எடுக்க போகும்போது அங்கே கீச்... கீச்.... கீச்... என  குருவிக் குஞ்சுகளின் ஓசை கேட்டது. என்னது குருவிக்குஞ்சு ஓசை கேட்குதே என்று கூறிக் கொண்டே வந்தால் மாலா. மாலாவின் அம்மா சைக்கிளுக்கு முன் புறம் வந்து நின்று பார்த்தார். சைக்கிள் கேரியரில் குருவிக்குஞ்சுகள் கத்திக் கொண்டு இருந்தன. அம்மா குஞ்சுகள், எவ்வளவு அழகா இருக்கு பாரேன் என்றால் மாலா. எப்படி வந்துச்சு என்றான் கண்ணன். அப்பொழுதுதான் அவர்கள் அம்மா கூறினார்கள், தங்கங்களா நீங்க முதல் ஆண்டு பருவத் தேர்வு எழுதி முடிச்சுட்டு லீவுல ஊருக்கு போனீங்க இல்ல அந்த சமயத்துல குருவி வந்து குஞ்சு பொறிச்சி இருக்கும். ஓ... அப்படியா அம்மா என்றால் மாலா. சரி கண்ணா, வண்டிய எடு நான் அந்த கூட்ட அப்படியே எடுத்துடறேன்என்றார் அம்மா.அதற்கு மாலாவும், கண்ணனும் வேண்டாம் அம்மா கூட்டை எடுக்க வேண்டாம் என்று கத்தினார்கள்.நீங்க ஸ்கூலுக்கு போகணும் அப்போ கூட்ட எடுத்து தானே ஆகணும், என்றார் அம்மா. இல்லம்மா நாங்க ரெண்டு பேரும் நடந்தே ஸ்கூலுக்கு போறோம் ....என்றான் கண்ணன். ஆமாம் அம்மா நாங்க நடந்தே போறோம் என்னைக்கு அந்த குருவிக் கொஞ்சுக இறக்கை முளைச்சி பறக்குதோ அதுக்கு அப்புறம் நாங்க சைக்கிளை எடுத்துட்டு ஸ்கூலுக்கு போறோம் அம்மா,என்றால் மாலா. தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கருணையை நினைத்து அம்மா மகிழ்ச்சி அடைந்தார்.நீங்கள் எப்படி இப்படி ஒரு மனநிலையை கற்றுக் கொண்டீர்கள் என்று அம்மா கேட்டார். அதற்கு மாலா எங்கள் பள்ளியில் ஆசிரியர் நிறைய கதை கூறுவார். அதில் கருணை பற்றி கதை கூறியிருக்கிறார். நாம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார் அம்மா. எங்களுடைய சைக்கிளில் குருவி குஞ்சுகள் இருப்பதற்கு எங்களுக்கு மனக்கவலை இல்லை. எங்களுக்கு மனமகிழ்ச்சி தான் எப்பொழுது குருவி குஞ்சுகள் பறந்து செல்கின்றதோ அப்பொழுதே நாங்கள் சைக்கிளை எடுத்துச் செல்கிறோம் அம்மா நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றால் மாலா. அப்பொழுது அம்மா தன்னுடைய மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டார் தன்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக வருவார்கள் என்று! ......

-கவிஞர் பொ.ச.மகாலட்சுமி
 கோவை.