அறிஞர் அண்ணா தமிழர்களின் கலங்கரை விளக்கு 010.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை போட்டி

அறிஞர் அண்ணா தமிழர்களின் கலங்கரை விளக்கு 010.

அறிஞர் அண்ணா !
தமிழரின் கலங்கரை விளக்கு!

காஞ்சியில் நடராஜன் பங்காருக்கு தவப் புதல்வன்
வாஞ்சையில் தமிழருக்கு, தமிழ் நாட்டுக்கு! ‌அரும்புதல்வன்!
கல்வி பச்சையப்பன் கல்லூரியில் சிறப்பு!
களமாடவைத்தது அரசியல் ஈர்ப்பு!

ஈரோடும்காஞ்சியும் திகவில்இணைந்தது!
ஈடில்லா புகழில் தமிழ் நாட்டில் அரசியல் வளர்த்தது!
பெரியாரின் போர்படை தளபதியாய்உயர்ந்து!
பெரியாரின் கருப்புச்சட்டை கொள்கையால் பிரிந்து!

திராவிட கழகம் என்றபெரும்எரிமலையில்! தீப்பொறியாய் சிதறியது! திமுக என்ற சுடரொளியானது!!
அண்ணா துரை அறிஞர் அண்ணா வாய்!
அரும்தமிழ்பணியால் தமிழ் நாட்டில் சிறப்பாய்!!

கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் கொண்டு!
கலங்காது எதையும் தாங்கும் இதயம் கொண்டு!
ஆங்கிலேயரும் அதிரும்படி அரும் தமிழர்
ஆங்கில இணைப்புச் சொல்லை!
ஆங்கிலேயர் முன்னில் அடுக்குமொழியாய் பேசி அசத்தியவர்!

சொந்த தாய் மொழியில் அடுக்கு மொழிக்கு அண்ணா என்று சுடர் விட்டு ஒளிர்ந்தவர்!
மாதமோ !சித்திரை! மணியோ பத்திரை!! எமக்கு மறக்காதிடுவீர் முத்திரை!

என்ற மேடை பேச்சுக்கு சொந்தமாகி! தமிழ்நாட்டுக்கு முதல்வர் என்ற அங்கமாகி!

தமிழ்நாடு தமிழருக்கே!
 என முழங்கி!
திராவிடநாடு கொள்கை கைவிட்டோங்கி!
மதராஸ் மாகாணத்தை, சென்னையை! தமிழ்நாடு" என்று
இந்திய நாட்டுக்குள்ளே! இருபெரும் நாடு! "தமிழ்நாடு" என்ற பெயர் மாற்றத்திற்கு சொந்தக்காரர்!

குலக்கல்வி முறையை குறுகத் தரித்தவர்!
இந்தி ஆக்கிரமிப்பு தடுத்து!!
 இனிய சகாப்தம் படைத்தவர்!

தமிழை! இந்திய தேசிய மொழியாக்க! தலைமை டெல்லிக்கு கடிதம் எழுதியவர்!
சுருக்கமாக உள்ள தமிழர் பயன்படுத்தும் மொழியை ஆட்சி மொழியாக்க முடியாது!
என்ற டெல்லி பதிலுரைக்கு!

சுருக்கமாக உள்ள புலியினத்தை தேசிய விலங்காக வைத்திருக்கும் தலைமையே!
அதிகமாக உள்ள நாய்களை அல்லவா! தேசிய விலங்காக வைத்திருக்க வேண்டும்என்றும்!

புலிகளின் வீரத்தை! புலிகளின் தன்மையை !
உரை எழுதிய அதிகாரிக்கு !
அந்த புலி போன்ற வீரம் உள்ளது !தன்மை உள்ளது பெரும் சிறப்பானது!
 எங்கள் தமிழே!
 என்று மறு உரை எழுதிய மன்னவர்! அறிஞர் அண்ணாதுரை அல்லவா!
நாடகத்துறையில் தொடங்கி
திரைதுறை மூலமும்முழங்கி
தமிழரை ஒருங்கினத்த
காஞ்சியசூரியன்!

இன்றும் மறையாது
தமிழர் நெஞ்சவானத்தில்மறையாது! மிளிர்கிறது!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற  தாரக மந்திரத்தை தமிழ்நாட்டு திமுக கொள்கை ஆக்கியவர்!

தமிழ்நாட்டு இளைஞருக்கு எழுச்சியூட்டிய இலக்கியங்கள் படைத்தவர்!
தம்பிக்கு எழுதிய கடிதத்தில் !
தம்பி !முயன்றால் முடியாதது இல்லை! முயன்றிடு! முனைந்திடு!
என்ற முயற்சியை முழக்கமிட்டு சென்ற அண்ணா!

கடற்கரையில் எதையும் தாங்கும் இதயம்! உறங்கினாலும்! கலங்கரை விளக்கமாய்! தமிழருக்கு ஒளி வீசுகிறது! தமிழ்நாட்டுக்கு அரசியல் வழிகாட்டுகிறது! வாழ்க அண்ணா நாமம் !வளர்க அவரது புகழ்!


- ஊ ,முத்து மாணிக்கம்
சங்கு பட்டி
திருவேங்கடம் தாலுகா