காதல் படைவெளி..! 038

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் படைவெளி..! 038

காதல் படைவெளி!

பார்வைகள் கூர் வேலாக 

மௌனங்கள் பெரும் கேடயமாக 

காதல் படைவெளியில் தள்ளிவிட்டு 

மொழியற்றுத்  தவிக்கச் செய்தாயே!

கற்களால் செய்த இதயத்தை

நுண் துகள்களாக்கி 

சர்வமும் அடங்கி 

கர்வம் உதிர்த்து 

உயிர் விரித்துக் காத்திருக்கிறேன்!

இதழ் முத்தங்கள் முடிந்து விடாது 

நெஞ்சத்துச் சத்தங்கள் தீர்ந்து போகாது 

காதல் தாகங்கள் தீர்க்கப் படாது 

இனிய மோகங்கள் முற்றுப் பெறாது!

இருந்தால் தான் என்ன? 

என்றென்றும் தொடரட்டுமே...

காற்றில் நீ நிரப்பிய சொற்கள் 

மனவெளியில் வாசம் பரப்பி 

என் சுவாசத்தை நீளச் செய்கின்றதே!

அப்படியே காத்திருக்கிறேன்... 

காதல் படைவெளியில்!

- எழுத்தாளர்  லாவண்யா பெருமாள்சாமி, 

கலிபோர்னியா.