மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைகள்

அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைகள்

மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைகள்

மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைகள்

001. அண்ணாவிற்கு ஒரு மடல்

அன்புள்ளம் கொண்ட அண்ணாவுக்குக் கடிதம்/
தமிழ்நாடு என்று பெயர் தந்தாயே/
தித்திக்கும் தமிழால் என்றும் இனிக்க/
உவமை இல்லா உத்தமன் நீயே/
மீண்டும் இங்கு வந்தால் நல்வாழ்வு/
வரும் ஏற்றம் தரும் நாடாகும்/
மூடப்பழக்கம் எல்லாம் அழிந்து போயிருக்கும்/
புது வாழ்வு இங்கே பிறந்திருக்கும்/
தனி மனித மானத்தைக் காத்தாயே/
தலைவா பேரொளி வீசினாயே என்றும்/
அண்ணா என்பவர் அறியாதவர் இலர்/
எத்தனை பக்கங்கள் வேண்டுமானலும் அண்ணாவைப்/
பற்றி எழுதலாம் புதுக் கவிதை படிக்கலாம்/
தனியாகப் பிறந்த எனக்கு அண்ணா/
என சொல்ல நீங்கள் இருக்கின்றீர்கள்/
என்றும் அன்புடன் மக்களுக்காகச் சிந்திப்பிர்/
வானைப்போன்ற அறிவாற்றல் கொண்டவர் நீரே/
தேனை பாய்ச்சும் உன் சொல்லால்/
இருளைப் போக்க எழுந்த சூரியனே/
உழைத்து வாழ்பவன் வணங்கத்தக்கவன் என்றாயே/
தன்னை வென்றவன் தரணியை வெல்வான்/
என வெற்றிப் பாதையில் சென்றவரே/
அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியமே/
இல்லை என்று‌ என்னை ஊக்கப்படுத்தினார்/
உங்கள் வருகை நினைத்து வாடுகிறேன்/
நீங்கள் எப்போது வருவாய் என்று/

இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
கோவை

 

002.

அண்ணாவிற்கு ஒரு மடல்

பெறுநர்
அண்ணா,

 அன்பு அண்ணா
 உனக்கு மடல் எழுத
 முகவரி தேடினேன்
 நம் நாட்டிற்கே தமிழ்நாடு என முகவரி தந்தவன் அல்லவா நீ

 ஏழைகளின் வீட்டில் அடுப்பெறியும் படி
 தந்தாயே படி அரிசி

 அடுப்படியில் இருந்த பெண்களுக்கு
அரசவையில் அமர
 இடம் தந்தவனே

 வள்ளுவனும் கம்பனும்
 தமிழை நிலை நாட்டினர்
 நீயோ அவர்களுக்கு
 சிலை நாட்டினாய்

சோழன் பல்லவ பேருந்துகளெல்லாம்
அரசு கழகம் ஆனது உன்னால் தானே

 ஆகாஷ்வாணியை மாற்றியவனே ஆகாசத்திலும் மாற்றம் வேண்டி சென்றாயோ

இதோ அனுப்புகிறேன்
இந்த நன்றி மடலை உனக்காக

அனுப்புநர்
கவிஞர் கோ.சௌந்தி
ஜெர்மனி

இந்திய முகவரி:
மேச்சேரி
சேலம்.

 

003.

தம்பிகளின் மனங்கவர்ந்து தலைசிறந்த அண்ணா,

ஒன்றே குலமென ஒருவனே தேவனென
அன்றே உரைத்த ஆன்றோர் மதத்தினை
நன்றே ஏற்றவரே நடராசரின் எழில்மகவே
நின்றே நானிலத்தில் நீடூழி வாழ்பவரே

படிப்பின் இடையினிலே பகுதிநேர வேலைதனைத்
துடிப்போடு அந்நாளிலே தோளினிலே சுமந்தவரே
குடிகொண்ட மொழிபல குறைபடக் கற்றாலும்
முடிசூடிய தமிழ்த்தாய்க்கு முத்தமிழணி புனைந்தவரே

பனுவல்கள் புடைசூழ பகுத்தறிவுப் படைசூழ
அனுதினமும் தம்பிகட்கு அன்புகூட்டும் திருமடல்கள்
பெரியாரின் நிழலினிலே பாசமிகு உடன்பிறப்பு
புரிசைகளாய் நிமிர்த்திடவே புகழ்மாலை தொடுத்தவரே

அண்ணாவெனும் பெயர்கொண்டு அந்நியமொழி திணித்தோரைத்
திண்டாடிடச் செய்தவரே தமிழ்நாடு கொணர்ந்தவரே
வண்ணமிகு சொல்தொடுத்து வாசம்வீசும் மன்னவரே
மண்ணிலே மறைந்தாலும் மனங்களிலே வாழ்வீரே

என்றும் உம் நினைவுகளுடன்
உம் அன்புத் தம்பி

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

004.

அண்ணாவிற்கு ஒரு மடல்...


அண்ணா இந்த சொல்லுக்கு மயங்கிய தம்பி நான்...

நீங்கள் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று..பொடி வைத்து பேசியே எதிரிகளுக்கு பொடி வைப்பீர் என கேட்டதுண்டு.. நீங்கள் பொடி போடுவது அப்படி தானே...

உங்கள் தம்பிகள் உங்கள் பாசமழையில் வளர்ந்தார்கள் எழுதிட பேசிட நடையுடையில் நடந்த அழகே அழகு... அண்ணா நீங்கள் பாராளுமன்றம் சென்றது தமிழகத்தின் பரிணாம வளர்ச்சி...  

மாற்றத்தின் திறவுகோல்... திராவிட சிந்தனை தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி பேசி பேச்சு...!
மாற்றாரையும்  மயங்க வைக்கும் பேச்சாமே...!

அண்ணா நீங்கள் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயரிட்ட பெருமகன் என்றே என்தலைமுறை பேசுது கேட்க மகிழ்ச்சி.. வரலாறு உன்னை வழிதடமாக தொடரும் ..!

நீங்கள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் இதுவரை வேற்றுக் கொள்கை ஆளுமைக்கு வரமுடியவில்லை அது நீங்கள் கட்டிய அடித்தளம் அண்ணா..! எங்கள் சமூகத்தில் கல்வி முதன்மையாக வேண்டும் என்றீர்கள் ...!

எனது பிள்ளைகள் கல்வியில் சிறந்து உலக அரங்கில் வென்று தமிழை இணைமொழியாக ஆங்கிலம் கொண்டு சிறந்தது விளங்கியதால் உலகம் உன்னையே வியந்து போற்றுதே...

அண்ணா எங்கள் ஆசிரியர் நீ.. உங்கள் வழியே எங்கள் சந்ததி...நீங்காது நினைவில் வாழும் தமிழ்வேந்தனே...உன்னை மறந்தா எங்கள் வாழ்வு..!?

நீங்கள் எங்கள் ஆளுமையின் அதிகாரம் அது திருக்குறள் போல நீளும் அண்ணா என்று உன்புகழ் வாழ்க..!

அண்ணா .. நீங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றீர்கள் ...இன்றோ ஆளுக்கு ஒரு கடவுள் ஒரு மதம் ஒரு சாதி சீர்கெட்டு சிந்தையை மழுங்கிட செய்யுது..

விந்தை மனிதன் நீ விடியலை தமிழகத்தின் வீதியில் போட்டவன்...துண்டு போட தடைபோட்ட தேசத்தில் துண்டு போட்டு அழகு பார்த்த அறிஞர்...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது நீ தந்த வாழ்வியல் கொள்கை அதை மறந்து சுயநல அரசியல் சில தற்குறிகள் செய்வதும்.. அதை உங்கள் சிந்தனை மாற்றுவதும் வியப்பு...!


அண்ணா அறிவுலக ஆசாசனே நீ கருத்து கருவூலம் உன்னை படிக்க படிக்க என் சமூகம் வளர்ச்சி விகிதம் கூடுமே..வாழ்வும் வளமாகுமே ..!உன்னை மறந்தா எங்கள் வாழ்வு ?? இல்லை அண்ணா நீங்கள் எங்கள் வாழ்வில் குறியீடு...என்றும் உனது பாதையில் பயணம்...
வாழ்க அண்ணா புகழ்...!!

வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்

 

005.

தலைப்பு
 அண்ணாவிற்கு ஓர்  மடல்

என்னுள் அடங்கிய அண்ணா உந்தன் வரலாறு எண்ணில் அடங்காதவை அண்ணா

வாய்மையே வெல்லும் உந்தன் வாய்மையில் இமயமே சிறு எள்ளும்

தமிழ் அன்னையின் தாய்ப்பாலில் நாம் ஒருவரானோம்

தாய்மொழியின் வழியாக என் சகோதரரான அண்ணா

தமிழனின் வீரத்தில் நாம் நண்பர்களானோம்

தமிழ் மீது பற்று கொண்ட உந்தன் அன்பணது அன்று தமிழ்நாடு என்றானது

பெண்ணியத்திற்கு பெருமையைப் புகட்டியவர் நீங்கள் அல்லவா

அரசியலின் ஆழத்தை அடிமுறையாக கற்றாயே அண்ணா

அறிஞருக்கு எல்லாம் பேரறிஞராக வலம்  வந்தாயே அண்ணா

வான் நின்ற ஓவியத்தை உந்தன் வாய்மையில் கண்டேனே

நீரடித்து நீர் விலகாது என்பதை போல

நீங்கள் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் பிரியாது என்றும் அண்ணா

உடல் விட்டு உயிர் பிரிந்தாலும் உடன் நிற்கும் தோழமையே என் அண்ணா

வான் பறவையாக சென்ற உமக்கு வான்கவி பட்டம் விட்டேனே அண்ணா

கவிஞர்
க.திருநீர் செல்வம்.

பொற்படாகுறிச்சி .
கள்ளக்குறிச்சி

 

006.

அண்ணாவிற்கு ஓர் மடல்
 

அகிலம் வியக்க
அன்னை பங்காரு அம்மாளின் கருவில்
அவதரித்தவரே!

பெரியாருடன் இணைந்து
பெருமைக்குரிய மானிடனாய் வாழ்ந்து
பெயர் பதித்துச் சென்றவரே!

மாற்றத்திற்காக ஓயாமல் ஓடி
மனங்களில் ஒளி பரப்பி
மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவரே!

தமிழைப் போற்றும்
தலைவனாய் தாய்நாட்டுக்கு
தமிழ்நாடு என நாமம் சூட்டியவரே!

பெண்ணியம் காக்கும்
புண்ணியவானாய்
புகழ் சுமந்தவரே!

நானிலம் வியக்கும்
நல்மனிதனாய் வாழ்ந்து
நன்மைகள் சேர்த்தவரே!

கடமை தவறா உம்
கண்ணியம் போற்றும் எம் கரங்கள்
கண்ணீரை மெல்லத் துடைத்துக் கொள்ளட்டுமே!

மண்ணுலகைப் பிரிந்து
விண்ணுலகில் விண்மீனாய்
மின்னிக் கொண்டிருக்கும் உம்
ஒளி தான் ஓயாதே!

-சஸ்னா லாபிர்
 ஓட்டமாவடி

 

007

தலைப்பு, அண்ணாவிற்கு ஓர் மடல்
****
காஞ்சி கண்டு எடுத்தே முத்தே
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயமே
மேடைப் பேச்சின் அலங்காரமும்  நீயே
அன்பும் அமைதியும் கொண்டவரும் நீயே

எழுத்தையும் சொல்லையும் கண் போல் காத்தவரே
தன்னம்பிக்கைக் கொண்ட அறிவுலக மேதையே
பன்முக பரிமாணம் கொண்ட தலைவரே
திருக்குறளுக்கு இலக்கணமாய் திகழ்ந்த ஒளி விளக்கே

இலக்கிய தமிழும் அடுக்கு நடையும்
எதுகை மோனை நயமும்
பேச்சில் ஆறாய் ஓடுமே
பேச்சாற்றல் நாற்றங்கால் என்றாலும்
எழுத்தாற்றல்
விளை நிலமாய்  விதைக்கப் பட்டதே

அண்ணா எழுதிய தம்பிக்கு ஒரு மடல்
கடிதங்கள் மூலம் இவரது எழுத்தாற்றல்
அருவி பாயும் நீரைப் போல
துள்ளி பாய்ந்து ஓடச் செய்ததே

வண்டு கண்டேன் இசைப் பாடல்
எல்லோரின் உள்ளத்திலும் தாலாட்டுப் பாடச் செய்ததே
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அடிக்கடி தட்டி எழுப்பும் முழக்கங்கள்

அடித்தட்டு மக்களையும் வாழ வைத்தவர்
புத்தகம் வாசித்து புத்துணர்வை தட்டி எழுப்பியவர்
இவரது மூச்சே பேச்சு தானே
தமிழையும் தமிழ் மக்களையும் வாழ வைத்தவர்

உழைத்துப் பெறு உரிய நேரத்தில் பெறு
முயற்சி செய்து முன்னேறு என்பன
இவரது உள் மூச்சில் ஓடின வரிகள்
தமிழகத்தின் தலை சிறந்த முதல்வர்

உம் போல் ஒப்பற்ற தலைவரை காண்பதறிது
உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும்
எழுதிய எழுத்துக்கள் எல்லாம் எங்களோடு
பேசிக் கொண்டே இருக்கும்
வாழ்க உம் புகழ் வளர்க தமிழ்

ம.செ.அ.பாமிலா பேகம் நாகர்கோவில்

008.

அண்ணாவிற்கு ஒரு மடல்

இருண்டு கிடந்த தமிழகத்தில்...

 மிரண்டு கிடந்த மாநிலத்தில்...

திரண்டு வந்த  காஞ்சிபுரத்து மேகமே

 நீ பார்த்த இடம் பல்கலைக்கழகம்
 நீ நடந்த இடம் நாகரிக பள்ளி
 நீ பேசிய தமிழில் தமிழ் தானே தலைவாரிக் கொண்டது...

நீ கற்றுணர்ந்த ஆங்கிலத்தில் செல்லியும் சேக்ஸ்பியரும்காதல் கொள்வான்..

உன்னை மூவேந்தர் நெய்தெடுத்த முத்தமிழன் என்பதா...

அரசியலில் என்றும்
அதிகாலை நட்சத்திர மே..

 என்றும் வாழும் வாழ்ந்து முடித்த திருமால் என்பதா....

எண்ணி எண்ணி ஏங்குகிறோம் உன் ஆட்சி காலத்தை....

தமிழென்றும் தமிழன் என்று சொல்லும் போதெல்லாம்


உலகம் ஒலிக்கும் உன் திருநாமத்தை

 மெரினாவில் தூங்குபவரே மீண்டும் பிறந்து வாரும்

 மனதால் மாண்ட மானிட தத்துவத்தை
 தரணியெங்கும் சொல்லி தாரும்....

அ. சிவக்குமார்

009.

அண்ணாவிற்கு ஓர் மடல்...

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த பிறப்பாய்
திகழ்ந்திட்ட அன்பு அண்ணாவே...
இதோ.. உனக்காய் ஓர் மடல்..
இலக்கியத் தமிழும் அடுக்கு நடையும்
எதுகை, மோனை, இயைபு நயங்களும்
துள்ளி விளையாடும் உமது பேச்சினை
இனி நாங்கள் கேட்பதுதான் எப்போது?..

தங்களின் பேச்சு நடையே
கவிதையென மாறிபோன பாங்கைதான்
என்னவென்று சொல்ல?..
கடமை ,கண்ணியம்,  கட்டுப்பாட்டை
 உடைமையென தந்திட்ட
உவமையில்லா உத்தமன்  ஐயா நீர்..

தமிழ்நாடெனப் பெயர்தனை
தந்திட்ட பெரியோரே
உந்தன் சீரான சொல்லாடலில்
ஆங்கிலமும் அதிருதய்யா..
ஆங்கிலமதை ஆட்சி செய்திட்டே
தமிழினை தலை நிமிர வைத்தவரே..

இனியொருநாள் நீ வந்தால்
மனிதகுலமும் மண்டியிட்டு வணங்குமய்யா..
உம்மொழி கேட்டிடவே
ஏங்கி நிற்கும் நெஞ்சமய்யா..
மறுமுறை உம்மை தரிசிக்கவே
ஆவலோடு காத்திருக்கிறோம் ஐயா..
என்றென்றும் உங்கள் நினைவில்
அன்பு சொந்தங்களாய் நாங்கள்..

கவிஞர் சசிகலா திருமால்
கீழப்பழுவூர்.

010.

"அண்ணாவின் வழி நடப்போம்,
அயராது உழைத்திடுவோம்"

பேரறிஞர்
அறிஞர்..அண்ணா
....அவர் பேர்...
அறிஞர் அண்ணா
...உலகறிந்த
..அறிஞர் அவர்..நம்
உள்ளம் நிறைந்த
...அறிஞர் அவர்

காஞ்சீபுர
..மைந்தனவர்...
கன்னித்தமிழின்
...முதல்வனவர்
காணக்கிடைக்கா
.....தங்கமவர்
தமிழ்த்தாயின்
தவப்புதல்வனவர்

கருமம்சிதையாம
...கண்ணோட
...வல்லவர்..நம்
உரிமம் மாறாமல்
உழைக்க
...நல்லவர்
தரணிபோற்ற
தமிழகமாண்ட
மனிதநேயமிக்க
மாண்புமிகு
முதல்வரவர்

அறிஞர் என்ற
சொல்லுக்கோர்
அற்புதமானவர்
அயல்நாட்டவரும்
...போற்றும்
சொற்பதம்
கொண்டவர்
தமிழோஇவரில்
விளையாடும்.பேச
தரணியேஇவர்
...புகழ்பாடும்

சென்னையை
தமிழ்நாடுஎன
பேர்மாற்றியவர்
செந்தமிழ் உலக
மாநாடு
நடத்தியவர்
படி..அரிசி திட்டம்
கொண்டுவந்தவர்
பாமர மக்களின்
வாழ்வுயர்த்தியவர்

நாட்டுநலப்பணி
திட்டங்கள்
கொண்டுவந்தவர்
நாடுவாழ
நாமும் வாழ்வோம்
..எனசொன்னவர்
ஏழைஎளியோர்
வாழ்வை
ஏற்றமுறச்செய்து
தோழமையா
தோள்கொடுத்தவர்

தேர்தல்கால
வாக்குறுதிகளை
மாறுதல் இன்றி
செய்தவர்..இவர்
கூறுதல் என்றும்
பொய்த்தில்லை
புறங்கூறுதலும்
இவரிடம்
ஜெயித்ததில்லை

நல்லாட்சி
நமக்கமைந்ததென
...நாடேநினைக்க
உள்ளாட்சி புரிந்து
...உண்மையோடு
...உழைத்தார்
எந்நாடும்போற்றும்
என்நாட்டவரின்
முதல்வராய்
பல்நோக்குத்
திட்டமிட்டு மக்கள்
பயனுறசெய்தார்
அறிஞர் அண்ணா
...வழிநடப்போம்
அயராது
உழைத்திடுவோம்
நாமும் வாழ்ந்து
..பிறரையும்
வாழ வைப்போம்
நாடுநமக்குஎன்ன
செய்ததுஎன்று
எண்ணாமல்
நாட்டுக்காக நாம்
என்னசெய்தோம்
என்று எண்ணி
வாழ்வோம்

என்றும்அன்புடன்
கவிஞர்..மீரா
(எ)
மீனாட்சிசுந்தரம்
18/250
சி.ஆர்.பிள்ளை
லே அவுட்
பி..டி.ஓ.காலனி
மங்கலம் பாதை
பல்லடம்..அஞ்சல்
திருப்பூர் மாவட்டம்
....641664

011.

அண்ணாவிற்கு ஒரு மடல்!!!
     
              கவிதை!!!
அண்ணா!
அழுகின்ற போதும்
மேகம் போல் அழுதவன் நீ !!!
விழுகின்ற போதும் விதையை போல் விழுந்தவன் நீ!!!
அண்ணா!!!
உன் பெயரிலேயே நீ உறவுகொண்டு வந்தாய்!!!
பெரியாரோ, காட்டுத்தீ நீயோ அந்தத் தீயிலே ஏற்றிய ஒரு திருவிளக்கு வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே இதயங்களை எண்ணியவன் நீ உன் எழுதுகோல் தலை குனியும் போதெல்லாம் தமிழ் தலை நிமிர்ந்தது
  தொண்டை புரிவதற்கு
தோன்றியவன் என்பதற்கோ தொண்டை நாடு உன்னுடைய தொட்டில் நாடு ஆக்கிவந்தாய்?
(அண்ணாவின் மரணம், அன்று இறந்ததோ நாம்; புதைத்ததோ உண்மை!
நம்மைப்போல் பைத்தியக்காரர்கள்  யார்?
உடல்களைப் புதைக்கும் உலகத்தில் அன்று நாம் ஓர் உயிரைப் புதைத்தோம் கடற்கரையில் பேசுவாய் கடலலையில் மீனாவோம்!!!
இங்கே புதைக்கப்பட்டது பெறும் மனித உடலல்ல
எங்கள் வரலாற்றுப் பேழை   நீ   மண்ணுக்குள்
சென்றாலும் வேராகத்தான் சென்றாய்!!!
அதனால் தான் எங்கள் கிளைகளில் இன்னும் பூக்கள் மலர்கின்றன!!!!!!!

 முனைவர்;
          எஸ்.கிரேசிராணி,
தமிழ்த்துறைத் தலைவர்,
விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கீழப்பழுவூர்.

012.

'அண்ணாவுக்கு ஓர் மடல் ''

கடமையினை கண்ணியத்தை கட்டுப் பாட்டைக்
கடுகளவும் எண்ணாமல் புனைந்து ரைத்த
மடமைவழி செல்லுகின்ற மனிதர் கூட்டம்
மறுபடியும் மறுபடியும் தவறி ழைத்துத்
திடமான நல்லுணர்வை இழந்து விட்டுத்
திசைமாறி நடக்கின்ற இழிநி லையை
அடலேறாய் வந்திங்கே உடனே மாற்று!
அறியாமை அகற்றிநிதம் அறிவைப் பாய்ச்சு!
செம்மொழியாய் செந்தமிழை அறிவித் திங்கே
சீர்படுத்தப் பன்னூறு முயற்சி செய்தும்
நம்மொழியைச் சிதைப்போரின் கால்பி டித்து
நாசமதைப் புரிகின்ற கயவர் கூட்டம்
வம்புவழக் காடிநிதம் தமிழ்ப்பண் பாட்டை
வல்லாண்மை செய்தேனும் ஒழித்துக் கட்ட த்
தெம்போட லைகின்றார்! இதனை மாற்றத்
தென்னகத்துக் காந்தியென வருக மீண்டும்!
காஞ்சியண்ணல் எனும்பெயரில் ஒளிகொ டுக்கும்
கவினார்ந்த பேரறிஞ! உரிமை காக்க
பூஞ்சிறகை விரித்ததிலே புயலைக்  காட்டிப்
பொங்கிவரும் எழுச்சியினை விரவச் செய்து
வாஞ்சையுடன் அரவணைத்து தமிழ்ந லத்தை
வளமாக்கி நாள்தோறும் செழிக்கச் செய்ய
தீஞ்சுடராய் வருக அண்ணா என்று  வேண்டி த்
தீட்டியுள்ளேன் அன்புமடல்! வருக இன்றே!
.....நன்றி......................
முகவரி:
கவிக்கோ முனைவர் அ அரவரசன் தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்

 

013.

அறிவுலக மேதையே! அண்ணா!


அண்ணன் தம்பி உறவுக்கு உரமானாய்
இலக்கிய இன்பத்தைத் துய்த்த - உம்
பேச்சின் இனிமைக்கு இனி யார் வரமுடியும்.
அரசியல் அறிவோடு தமிழக முதல்வரனீர்.
இந்தியை எதிர்த்தே தமிழைத் தழைக்க வைத்தீர்.
உம் வரவால் ஏழை எளிய மக்களும் தளைத்தோங்கினர்.
பாமரர் மக்களும் படித்துப் பட்டமும் பெற்றனர்.
தமிழிசை தமிழகத்தில் எழுச்சி பெற்றது
உம் காலக்கட்டத்தில், நிமிர்ந்து நடக்க
மனிதனுக்கு எழுச்சியூட்டினாய்க் காவியப் படைப்பால்
பல்கலைக் கழகமாய் மானிடர் மனதில் படிந்தே விட்டாய்.
கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டைப் போற்றினாய்
மூடப்பழக்கமெல்லாம் வேரோடு சாய்த்தாய்
பகுத்தறிவு கருத்துக்களால் சமூகச் சீர்திருத்தியானாய்!
நாட்டுப் பற்றால் நல்லத் தலைவனானாய்
பிடித்தமானவற்றைச் செய்து படைப்புலகின்
மிகப் பெரும் படைப்பாளியானாய்
அறிஞரும் ஆனாய்! பேரறிஞரும் ஆணாய்
அண்ணா என்றதோடு அண்ணாதுரையும் ஆனாய்!
இன்னும் எங்கள் மனதில் நிலைத்து நிற்கும்
உம் புகழ் இனியும் பரவட்டும் பாருலகில்.


சகோ. ஜா. அருள் சுனிலா,
பெரியகுளம்.

014.

அண்ணாவிற்கு ஒரு மடல்
__________________
இனியொருநாள் நீ வந்தால்
இதயநிறை பக்தி யினால்
மனித குலம் முழுவதுமே
மண்டியிடும் உன் முன்னால்
தனி மனித மானத்தைத்
தக்க வைத்துக் கொள்வதற்கு
முனிவன் என நீநின்று
முடிபான வழி சொன்னாய் !

மீண்டும் இங்கு நீ வந்தால்
மீண்டு வரும் நல்வாழ்வு ;
வேண்டுகின்ற நல மனைத்தும்
வேகமுறப் பல்கி விடும் ;
மூண்டு பெருகி நிற்கும்
மூடப் பழக்க மெலாம்
பூண்டோடு அழிந்து பின்னர்
பூத்து வரும் நல்லுலகு !

கடமை ,கண்ணியம் மற்றும்
கட்டுப் பாடென்றி வற்றை
உடைமை கலாய்த் தந்திட்ட
உவமை இலா உத்தமனே !
உடைமை களாய் நீ தந்த
உயர் மந்திரச் சொற்கள்
உடைந்தின்று நொறுங்கிப் போய்
உருக் கூடத் தெரியவிலை!

மீட்டொரு கால் நீ வந்தால்
மிகையாகச் சொல்ல விலை ;
நாட்டிடுவாய் நீ தந்த
நலம் சான்ற முச்சொல்லை ;
பாட்டெழுதி சொல்லு கிறேன்
பன்முறையும் சொல்லு கிறேன் ;
மீட்டொருகால் வந்தே நீ
மிடிகளெலாம் போக்கி டுவாய்!

அண்ணனென நீ இருந்தாய்
அதற்கேற்ற உடன் பிறப்பாய்
வண்ணமுற வாழ்ந்தி ருந்தோம் ;
வாழ் வெல்லாம் போச்சுதையோ !
திண்ணம் நீ வருவதெனில்
தித்திக்கும் நம் வாழ்வு !
அண்ணன் கிடைத்த தனால்
ஆட் கொள்ளும் பேரின்பம் .

எழுதுகின்ற கொல தனை
எடுத்தே நீ பிடித்திட்டால்
அழுத பிள்ளை வாய்மூடும்
அப்படியே உருகி விடும்
பழுது மலி சமுதாயம்
பக்குவம் தான் பெற்றிடவே
எழுதுகின்ற கோல் கொண்டு
எழுந் தொருநாள் வந்திடுக !

சொல்லேர் உழவன் என்றே
சோதி மிகப் பெற்றவரே!
வில் கொண்டே விளையாடும்
வீரர் குலக் கொழுந்தே !
அல்ல லினை அறுக்கின்ற
அழகான சொற் பெருக்கால்
தொல்லை துடைத் தருளத்
துரித மாய் வந்திடுக !

பாராளு மன்றம் அதில்
பல்லறிஞர் முன்னி லையில்
சீரான சொல்லெ டுத்து
சிறப்பு றவே ஆங்கிலத்தில்
ஆரா தனை புரிந்தீர் ;
அது கேட்க மீண்டும் உமைப்
பாரோர் அழைக் கின்றார் ;
பரிந்து ஒருநாள் வந்திடுக !

தமிழ் நாடெனப் பெயரைத்
தந்திட்ட பெரி யீரே !
கமழ்கின்ற கலை மணத்தை
கைவழியும் வாய் வழியும்
உமிழ்கின்ற ஆற்ற லினை
உடைமை எனக் கொண்டவரே !
அமிழ்தே !எம் ஆருயிரே !
அழை கின்றோம் வந்திடுக !

இனியொரு நாள் நீவந்தால்
இன்பம் ,அன்பு ,வளமை
புனிதம் ,பெருமை பண்பின்
புகலிட மாகும் உலகு .
இனியொரு நாள் நீவந்தால்
இலக்கியம் பெருகும் உலகில்
இனியொரு நாள் நீ வந்தால்
இறைமை தங்கும் உலகில் !!!
             ஜெ . பாலாஜி,
இளங்கலை ( தகவல் தொழில்நுட்பம் )  - மூன்றாம் ஆண்டு,
தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,  வீரபாண்டி.
தேனி மாவட்டம்.

 

015.

தென்னாட்டு காந்திக்கு ஓர் மடல்.

தெவிட்டாத தெள்ளமுது,  தேன்தமிழ் சொல்லெடுத்து

அடுக்கடுக்காய், சொல்லடுக்கி,பேசும் அறிஞரே!

இருமொழி கொள்கை கொண்ட செம்மலே!

தமிழ்நாடென பெயரிட்ட முதல் முதல்வரே!

முக்கோட்பாட்டை மூச்சாக கொண்டு உழைத்து,

ஒன்றே குலம் ஓருவனே தேவன் -என்றுரைத்து,

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவரே!.


இலக்கணமில்லா இலக்கியம் எழுத பலருண்டு.

இலக்கணத்தோடு இலக்கியம் படைக்க நிகரில்லை-உமக்கு!

இலக்கியத்திற்கே இலக்கணமாகும் இலக்கணமே!

இலக்கியங்கள் தலைவணங்கும் மாபெரும் இலக்கியமே!

ஆங்கிலத்தில் ஆங்கிலத்துவம் பெற்ற வித்தகரே!

பெரியாரின் பேரன்பு பெற்ற சான்றோரே!

எழுத்துலகில் புலமை பெற்ற கவிஞரே!

மக்களின் பேரன்பை பெற்ற மித்ருஞ்சயரே!

உம்முடைய சிந்தனைகள்

உதவாத பழமைக்கும்  கொள்கைக்கும் சவக்குழியாகும்.

புதிதான புதுமைக்கு வழிக்காட்டும் சூரியணாகும்.

உலகமே ஓர்புத்த கமென என்றுரைக்கும்.

ஜாதிமதம்  இல்லாமல்  வாழ வழிகாட்டும்.

கதைகளால் சமுதாய புரட்சி கண்ட  அண்ணலே!

கதைகொண்டே கதையால் உடைத்த பெண்ணடிமை.

கதைகளே கணைகளாகி ஆரியத்துக்கு இலக்காகின.

கதைகளில் புரட்சி, மக்களிடையே எழுச்சி!

மீண்டும் ஓர்பிறப்பு எடுத்து வாரீர்!

தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்க வாரீர்!

அதிகார வர்கத்தை வேரறுக்க வாரீர்!

உடன்பிறப்பு என்றழைத்த அண்ணாவே வாரீர்!!

மீண்டும் ஓர்பிறப்பு எடுத்து வாரீர்! வாரீர்!

-வாலிதாசன்.
762/2 காமராஜர் நகர்,
அப்பம்மாசமுத்திரம்,
நரசிங்கபுரம்,(po)
ஆத்தூர் வட்டம்
சேலம் மாவட்டம்.636108.

 

016.

அண்ணாவுக்கு ஓர் மடல்

என்றும்
மரியாதைக்குரிய
பேறிgஞர் அவர்களுக்கு.

தம்பி
என்றே மனதிலுள்ளதை
மடலாக

மங்கியிருந்த தமிழகத்தை நிலை நிறுத்திட

பட்டி தொட்டிகளில்
எல்லாம்
தமிழுரையால்


தங்குதடையின்றி
சொல்லாற்றலால்
சொக்கவும்
வைத்து


மக்களுக்காகவே
கட்டுரைகளாக
கதைகளாக
நாடகங்களாக

பறைசாற்றிஉறங்கியவர்களுக்கு
வேகத்தையும்
விவேகத்தையும்

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
தாரகத்துடன்

பாராளுமன்றத்தில்
பாரதமே வியந்திடும்
புலமையுடனும்

ஆங்கிலேய
உரையால்
ஆங்கிலேயரையே
கவர்ந்திட்ட

தென்னாட்டு
அரசியல் மட்டுமன்றி
இந்தியாவின்

வரலாற்றில்
வரலாறான
காஞ்சியின்
நன்முத்து

தென்னாட்டுக்
காந்தி
திறமையான
கருத்துக்களுக்குச் சொந்தமானவர்

கலைநயத்துடன்
உவமைகளும்
சீராகக்
கலந்து

பொன்னும் பொருளும்
புகழும்
விரும்பாது

சுந்தரத்தமிழுடன்
பொடிவைத்து
பொல்லாரையும்
நல்லாராக்கிட

நிதானமாக மிகக்கலந்து
அரசியல் அரிச்சுவடி யில்

அனைவரையும்
வாழவைத்து
வங்கக்கடலோரம்
காற்றும்வாங்கியே

சிறைத்
தண்டனையினை
சுகமான
சுமைகளாகவும்

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்
காணவைத்த

எங்களின்
அண்ணா
இதயத்தின் மன்னவனே

என்றுமே
வாழ்த்திட
வயதில்லையெனக்கு
வணங்குகிறேன்..

தங்களால் தம்பி என்றழைக்கப்பட்ட

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான
மணிமொழியன்
அவர்களின் மூத்த மைந்தன்

கே.ஆர்.பி. மணிமொழிசெல்வன்
பெருங்குளம்தூத்துக்குடி மாவட்டம்

 

017.

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்                           

காஞ்சியில் பூத்த கருங்குவலை அறிஞர் அண்ணா//                                             

காரிருள் நீக்கிய பெரும்புலமை ஆனார்//                                                            

வஞ்சினம் விரட்டிய உயர்    லட்சியம்//                            

வசந்தத்தை காட்டிய பெரும் விடியல்//                                    

தமிழிலும் ஆங்கிலத்திலும் அடுக்குத்தொடராய்,  பலரையும்  ஈர்ப்பவர்//                                 

வண்ணம் பேசும் திறனோடு எழுத்தாற்றலும் பெற்றவர்//                                                                                           முதுகலை மூன்று முறையாக கற்று//                                  

முன்னேற்றப் பாதையில் முப்போக்கை சேர்த்து//                                   

முன்னேற்றகழகம் மூன்று தமிழ் விரும்ப!!//                             

முக்கனியில் சர்க்கரையாய்  முகவரி தந்தாய்//                                

புத்தகத்தை! வாசிப்பார் வாசிப்பார் என்பதைவிட சுவாசிப்பார்//                                        

சுவாசித்துக் கொண்டே இருப்பார் புத்தகத்தை//                                                          

வடக்கின் இடக்கை வடக்கே சென்று//                                                        

தெற்கின் தேடலைத் தெளிவாய் சொல்லும்//                                                           

தென்னவன் நீயே மன்னவன் ஆனாய், தென்னாட்டு காந்தி தேன் தமிழேந்தி//                                             நம்நாடு போற்றும் தம்பிக்கு மடலை தவறாமல்//                                       

எழுதி தாய் தமிழ்நாட்டிற்கு பெயரை வைத்த  பெருமை சீலனே//                                                       

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்//                      

அனைவருக்கும் சமமாய் மேடை அமைத்தவர்//                                   

அகிலம் போற்ற, சமூகநீதி கொடுத்தவர்//                              

பகுத்துப் பார்க்கும் பண்பினை தந்தவர்//                                           

பைந்தமிழ் நாட்டின் தாயானவர், எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய்//                                        

அழகு தமிழ் மேடையேற, அன்னை மனம் மகிழ்ந்து போக//               

உயர்ந்த மொழி, உலகம் வணங்க, மாற்றம் பல தந்தவரே!!!!//                                                    

மனக்குகையில் வாழ்பவரே!!! மானுடவிடியலும், மதிப்புமாண்பின் உயர்ந்தவரே//                             

வி.கணேஷ் பாபு , ஆரணி

018.

அண்ணாவிற்கு ஒரு மடல்

காஞ்சிபுரத்திலே பிறந்தவரே முத்தமிழுக்கு வித்தகரே

பெரியாரை சந்தித்தாரே பெருமையாக போற்றினாரே

கலைத்துறையிலே எண்ணற்ற நாடகங்களே
எழுதியவரே

அரசியலிலே மிகுந்த                  ஈடுபாடு நிறைந்தவரே

நீதிகட்சியிலே அரசியல்              கற்றுக் கொண்டவரே

நாளடைவிலே திராவிட முன்னேற்றக் கழகம்

தன்னம்பிக்கையிலே மக்களுக்காக தனிக்கட்சி தொடங்கியவரே

எளிமையோடு மதிக்கும் மனிதநேயமே கொண்டவரே

இந்தி மொழிக்கு கடிவாளமே போட்டவரே

இரு மொழி கொள்கையே உருவாக்கிவரே

தனியார் போக்குவரத்து  அரசுடைமை செய்தவரே

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு

புலவர்களுக்கு கடற்கரையிலே சிலை வைத்தவரே

பேருந்துகளிலே திருக்குறள் நிலையாக எழுதியவரே

உலகத்தமிழ் மாநாடு நடக்க உறுதுணையே

அடுக்குமொழியில் பேசும் வல்லமை கொண்டவரே

ஆங்கில பேச்சாற்றல்                அபாரமாக பேசுபவரே

இந்தி எதிர்ப்புக்கு                      போராட்டம் செய்தவரே

வாழும்போதே சரித்திர நாயகனாக வாழ்ந்தவரே

அண்ணாவின் இறப்பில் கண்ணீர்அஞ்சலி கூட்டமே

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதே

தற்காலத்தில் எண்ணற்ற அரசியல்வாதிகளுக்கு ஆசானே

அரசுத் துறை அதிகாரிகளுக்கும் வழிகாட்டியாக திட்டமே

என்றும் நினைப்போம் மறவாமல் இருப்போம்

போற்றுவோம் அண்ணாவின் புகழை எப்பொழுதுமே


கவிஞர் சுஜி மாதேஸ்              பெரிய புளியம்பட்டி

 

019.

அண்ணாவிற்கு ஒரு மடல்
*****************************
உலகத் தமிழ் மக்கள் அனைவரையும்/
உடன்பிறவா அன்புத் தம்பிகளாய் ஏற்றுக்கொண்ட/
உயர்ந்த உள்ளம் படைத்த அண்ணாவிற்கு/
உள்ளன்புடன் தம்பி எழுதும் மடல்.../

திராவிட சூரியனை ஒளிர வைத்து/
தமிழின் பெருமையை பேணி காத்தவனே/
தரணியெங்கும் தமிழின் புகழைப் பரப்பிய/
தன்னிகரற்ற தமிழ்த் தொண்டன் நீயே.../

பெரியாரின் வழிவந்த பெருமை கொண்டவனே/
பெரும் புகழடைந்தாலும் கர்வம் இல்லாதவனே/
பகுத்தறிவுப் பாடத்தை பாகுபாடு இல்லாமல்/
பாமரனுக்கும் கொண்டு சேர்ந்தவன் நீயே.‌‌../

அடுப்படி மட்டுமேஉலகமென வாழ்ந்த/
அடிமைப்பட்ட பெண்களுக்கு சமஉரிமை தந்து/
அடிமை விலங்கை உடைத்து எரிந்து/
அரசவையிலும் அமரச் செய்த உத்தமனே.../

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்/
என உரக்க தமிழ் முழக்கமிட்டாய்/
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்/
என்னும் ஒருவரியில் வியக்கவும் வைத்தாய்.../

ஆயிரம் தலைவர்கள் உன் வழியில்/
அனுதினமும் தோன்றினாலும் உமக்கு நிகரில்லை/
அழியாப் புகழ்பெற்ற அற்புதத் தலைவனே/
அன்னைத் தமிழாய் உன்னை வணங்குகிறேன்/

இப்படிக்கு,
அன்புத் தம்பி,

மை.சத்திய பாரதி,
தூத்துக்குடி.

020.

அண்ணாவெனும் அற்புதம்...

அண்ணாவெனும் அற்புதம்...
அடுக்கு மொழிதனில் நம்மை
அசத்திடும் சிங்கம்
ஆங்கிலத்தில் புலமைப் பெற்ற
அறிவு தங்கம்..
வில்லென பாயும் சொல்லம்பு
விண்ணைத் தாக்கும்
வியக்கின்ற அறிவுதனை
அகிலமும் போற்றும்...

கட்டுப்பாடும் கண்ணியமும்
கடமையென்றே வாழ்ந்தவர்
தமிழுணர்வை தட்டியெழுப்பி
விழிக்கச் செய்தார்..
தமிழ்நாடென்றே பெயர் சூட்டி
தமிழுக்கு பெருமை சேர்த்தார்.
பண்பாட்டு பெட்டகமாய் பவனி வந்தவர்...

தமிழகத்தின் பெர்னாட்ஷாவாய்
தரணியை ஆண்டவர்...
பார்ப்போற்ற பண்பாணவர்
யாரிடமும் அன்பானவர்..
முத்தமிழில் முத்தெடுத்தவர்
அரசியலை மூச்சு போல் சுவாசித்தவர்..
காஞ்சியில் ஊற்றெடுத்த சமுத்திரம்
சாவிலும் சாதனைக் கண்ட
தமிழரின் சரித்திரம்..

கோ.ஶ்ரீஆதேஷ்
கீழப்பழுவூர்

021.

அண்ணாவெனும் ஒளிவிளக்கு.

அறிவுலக மேதை,அரசியல் விடிவெள்ளி,
நயம்பட நவில்வதில் நாவலர்
காட்சிக்கு எளியவர்
பிறரைப் போற்றும் பண்பாளர்..
தன்னம்பிக்கை மிக்க தனி தலைவன்
அறிவெனும் உளிக் கொண்டு
அழகிய சிற்பமாய்
வாழ்க்கை பாதையை
செதுக்கிட செப்பியவரே..

அற்புதமாய் உரையாடும்
ஆற்றல் மிகு பேச்சாளர்..
அடுக்கு மொழியில்
அசத்திடும் வல்லவர்....
தமிழ்நாடு என்று உருக்கொடுத்தவர்
தமிழைத் தலைநிமிரச் செய்திட்ட தலைவர்...

மும்மொழி அகற்றி
இருமொழி மொழிந்தவர்
அறிவின் ஆலயமாய் திகழ்ந்தவர்..
தமிழுக்கு கிடைத்திட்ட
ஆகச்சிறந்த இலக்கியவாதி..
தரணியாலும் திறமையாலே
தனக்கென தனி முத்திரை பதித்தவர்..

மக்களின் மனதினில்
நீங்காமல் நிறைந்திருக்கும் ஒளிவிளக்கு
அண்ணாவெனும் திருவிளக்கு...

கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கீழப்பழுவூர்

 

022.

அண்ணாவைப்
        போற்றுவோம்????

பண்ணாளும்
       தமிழணிந்த     
                  மூன்றெழுத்தே!

எண்ணாலும்
          எழுத்தாலும்
                    எழுந்தமுத்தே!

பண்டாளும்
        பழைமைதனை
                பழித்தசித்தே!

அண்ணாவாய்த்   
        தம்பியரைத்  
                தளைத்த மத்தே!
       
 அடுக்கு மொழி     
          அடுக்கலையில்     
                 சமைத்தவேலே !

எடுத்துரைக்கும்.
      மிடுக்குதமிழ்     
            துடிப்பு  வாளே!

படுத்துதுயில்
       தமிழர் மதி
                மணக்கச்    
                      செய்தாய்

நெடுந்துறையில்  
        உழைப்பவரை    
                ஊக்கச்     
                         செய்தாய்

நிலனுழுது      
           உண்பவரை    
       ஊக்கம்  செய்தாய்

திரைத்தமிழால்   
    சிறைப்பட்ட     
       வரியவரும்  சிரிக்கச்
               செய்தாய்


புலனுழுது
       பிழைப்பவரை    
          வலுக்கச்
                         செய்தாய்

பலதுறையும்  
      பழந் தமிழைப்  
              பழகச் செய்தாய்

படைதமிழில்     
        நடைப்புதுமை
             நடிக்கச் செய்தாய்

பலதாரம் மணம்   
         புரிந்தால்
               மறுத்தல்
                     செய்தாய்

பண்டுதமிழ்     
      பெருமைகளைப்
                படைதமிழால்  
                             தந்தாய்

அரசியலில்   
       ஆண்மையெனும்  
               ஆற்றல்  
                     கொண்டாய்

அறமெழுதும்   
          ஆட்சியியல்     
                     ஆக்கம்  
                             தந்தாய்.

மூன்றெழுத்தில்   
           மன்றுதமிழ்        
                   மடைகள்
                       வைத்தாய்

மாணவராய்ப்   
       மண்மக்கள்  
                 வழக்கம்  
                   கொண்டே

மாண்புறு மேல்
             தமிழரினத்
                   தேற்றம் கண்டு

வானவர்பால்  
       போனபின்னும்      
          வாழ்த்துகின்றோம்.

ஆபா.
ஆவுடையார்கோயில்

023.

அண்ணாவிற்கு ஒரு மடல்

அண்ணாத்துரை உன் அருமை பெற்றோர்க்கு

அறிவுச் சுடரான அண்ணா எங்களுக்கு

ஆற்றலின் சிகரமாய் திகழ்ந்த  தமிழறிஞரே

காஞ்சி தந்த புத்தன் என்றும்

தென்னாட்டு காந்தி என போற்றும்

தமிழ்த் தாயின் தவப் புதல்வன்

கலைஞரின் தனிப் பெரும் ஆசான்

சொல்லாற்றலும் எழுத்தாற்றலும்  அனைத்தும் இணைந்த

சுவைமிக்க படைப்பாளர் என்றால் மிகையாகாது

தமிழின் மேன்மைக்கும் தமிழரின் வாழ்வுக்கும்

அயராது உழைத்த உன்னத மனிதர்

மனிதன் எப்படி இருந்தாலும் மனிதன்தான்

பேரறிஞரே உனது உரைக்கு மயங்காதவர் உண்டா ?

துறைதோறும் தமிழ் செழிக்க பாடுபட்டாயே

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்றாக்கினவரே

நாடும் ஏடும், தீ  பரவட்டும், உனது கைவண்ணங்களே

சமூக நலன் சமுதாய முன்னேற்றம்

தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி

அனைத்திற்கும் பாடுபட்ட அற்புத அண்ணா

விதையிலேயே விருட்சமாய் எழுந்த எழுச்சியாளர்

உலகில் உனக்கு இங்கு ஈடில்லை

உன் மொழிப் புலமைக்கு நிகரேது ?

தமிழக முதல்வனாகி தரணியின் சாதனையாளராக

சரித்திரம் படைத்திட்ட தங்கத் தமிழன்!

வாழ்க உன் புகழ் வளர்கவே=

தி.மீரா
ஈரோடு

 

024.

"ஆற்றலின் தோற்றம் அண்ணா"

"அன்பால் எங்களுக்கு பண்பூட்டியவரே,
அறிவால்  ஆற்றல் மிகுந்தவரே,
தங்களால் தீட்டப்பட்ட திட்டங்கள்,
தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும்,
தென்படும், மக்களால் பேசப்படும்.

நீங்கள் உலகை விட்டு
சென்றாலும் உங்கள் சிந்தனையும், உங்கள் ஆளுமையும் மறையவில்லை,
எங்கள் நெஞ்சங்களில் நீங்கள்,
என்றும் அணையா விளக்கு.

காலம் உள்ளவரை அண்ணா,
என்ற சொல்லுக்கு அறிஞரே,
உங்களின் நினைவு தான்,
அனைத்து மக்களின் எண்ணங்களிலும்
உதிக்கும், இதுவே உண்மை.

எண்ணங்கள் உயரும் பொழுது,
சிந்தனை தெளிவாகும் பொழுது,
திட்டங்கள் தானாக தோன்றும்,
அதன் விளைவாய் காலம்,
நம் புகழ் பாடும்,
இது உங்கள் வாழ்க்கை,
மற்றவர்களுக்கு கற்றுத் தந்தவை.

தமிழனை பெற்றெடுத்த பொக்கிஷம்
நமது அண்ணல் அண்ணா"

ரா.வஞ்சித்குமார்,
திருப்பூர்.

 

025.

அண்ணாவிற்கு ஒரு மடல்
**************************

காஞ்சியில் பிறந்து காவியம் படைத்த தலைவர்.
அண்ணா!!!

தமிழுக்கு தனிப் பெருமை அன்றே சேர்த்த தலைவர்!!

சிப்பியில் இருந்து சிதையாமல் எடுத்த விலை இல்லா முத்து அவர் !!

சித்திர திராவியத்தை சிதையாமல் வரைந்து காட்டிய ஓவியன் அவர்!!

 பெரியாரின் வழி நின்று புதுமைகளை நடைமுறைப்
படுத்தியவர் !!

உன் புதுமைகள் எல்லாம் பொன் போல் மின்னின இந்த  நானிலத்தில்!!

 புகழென்னும் மகுடம் உன் தலை மீது ஏறியும் தலைகனம் சிறிதும் இல்லாதவர்!!

 எளிமையின் வடிவம் என்றுமே நீ எங்கள் இதயத்தின் தெய்வம்!!

 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழ்ந்தவர்!!

 நாம் ஒவ்வொருவரும் அதன்படி நிற்க வழிகாட்டியவர்!!

அறிவில் மேதையவர்!! அரசியலில் ஆற்றல் மிகுந்தவர் அவர்!!

 அன்பால் அனைவரையும் கவர்ந்தவர் !!

தன் அறிவால் அகிலத்தை வென்றவர்!!

 பேச்சாற்றல் மிக்கவர் பெண்ணிய பெருமை போற்றியவர்!!

 நல்விதையாய் விழுந்து இப்பூமியிலே நானிலும் போற்றும் நல் மரமாய் வளர்ந்தவர்!!

அம்மரம் நிழலை இளைப்பாற எங்களுக்கு தந்தவர்!!

 மண்ணுலகில் நீ பதித்துச் சென்ற மகிமை மணக்குதே நாடெங்கும்!!

 விண்ணுலகில் மீண்டும் விதையாய் சென்றாயோ!!
 மீண்டும் விருட்சமாக!!

 உன் புகழ் ஓங்கி ஒலிக்கிறதே இன்றும்.
அண்ணா!!

 என்றுமே எங்கள் உறவு அண்ணா தான் நீ!!

கவிஞர்.க.எப்சிபா.
எம்.ஏ.பி.எட்.டி.டி.எட்
காவேரிப்பாக்கம்.

026.

தென்னாட்டு பெர்னாட்ஷாவுக்கு ஒரு மடல்....

தமிழகத்தின் சீர்திருத்த திறவுகோலாய் திகழ்ந்தவரே...!

சாதிகளால் சிக்குண்ட மக்களைத் திரட்டிய புரட்சியாளரே....!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் நக்கீரனே...!

பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச்சிற்பியே...!

தலைவர் தொண்டர் நிலையை மாற்றி....

அண்ணன் தம்பி உறவுநிலையை நிலைநாட்டியவரே...!

கடமை கண்ணியம் கட்டுப்பாடென்ற வீரனே....!

கண்ணியம் மிக்க அரசியல் தலைவரே...!

அரசியல் பண்பினை போதித்த துரையே...!

படியரிசி அளித்து கஞ்சிக்கு
வழிவகுத்தவரே....!

முத்தாய்ப்பாய் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவரே...!

இலக்கிய தமிழும் அடுக்குநடையுடன் எதுகையும் ...

மோனை இயைபும் துள்ளி விளையாடும் வீனஸே...!

அறம் பலபேசி மக்கள் மனதிலுன்றிய சமதர்மனே...!

வாய்மையே வெல்லும்
பெயரைத்தந்திட்ட சௌமியனே...!

தமிழன்னைக்கு தமிழ் நாடென பெயரிட்ட பரதனே...!

தமிழ் மொழிக்கு அரியணைத் தந்து உயர்த்தியவரே....!

முக்கனியும் தோற்றுவிடும் உம் வாய்த்தமிழால்...!

பார்முற்றும் புகழ் பெற்றுத் திகழ்ந்தவரே...!

காஞ்சிபுரம் வந்த தங்கதமிழன் பேரறிஞரே...!

இன்ப நாள்...! இனிய நாள்...!

நீ மீண்டும் அவதரிக்கும் நாள்...!!!

திருமதி.க.பிரியா,
உதவிப் பேராசிரியர்,
நிர்மலா மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.

027.

அறிஞர் அண்ணாதுரை :

இவர் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் ஈடுபாடு
கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அண்ணாவைத் தெரியாத
ஆட்கள் இல்லை.
சிந்தனையாளர்களும் கூட
எழுதுவதில் வல்லமை கொண்டவர்.
அனைவரையும் ஈர்க்கக் கூடிய
பேச்சாளர் ஆவார்.
இந்தச் சிந்தனைகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியவர்.
என்ற பெருமையை போற்றும்
வகையில், சிறப்புக்கிறார்
அறிஞர் அண்ணா.
உலகம் எங்கிலும், அவர் ஆற்றிய பணி ,அவர் செய்த உதவி அனைத்து இடத்திலும்,
அறிமுகமாகி சிறப்புக்கிறார்.
இவர் முதலில் திராவிடம் மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சர் ஆக இருந்தவர்.
அண்ணாதுரை அரசியலில்
ஈடுபடுவதற்கு, முன்பு ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார்.
பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர்.
இவர் ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் நடராஜன் பங்காரு அம்மாள் ஆவார். இவர் பிறந்தவுடன் அவரை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாயாரின் இளைய சகோதரியான ராஜாமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளமையிலேயே அன்பும் அமைதியும் நிரம்ப பெற்றவராவர்.
மிகுந்த நினைவாற்றலை கொண்ட அண்ணா.
காஞ்சி பச்சையப்பன் உயர் பள்ளியில் கல்வி கற்றார்.
தந்தை பெரியாருடன் இணைந்து பகுத்தறிவு கொள்கையைப் பரப்பினார்.
சமூக சீர்திருத்த பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
பள்ளி இறுதி வகுப்பை முடித்தவுடன், குடும்ப சூழ்நிலை காரணமாக காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக ஆறு மாதம் பணியாற்றிய அண்ணாதுரை.
1928 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி ஏ படித்த இவர்.

தி.திவ்யா
நீலகிரி மாவட்டம்.

 

028.

அண்ணாவிற்கு ஒரு மடல்!
அன்பு மிகுந்த அறிஞர் அண்ணாவிற்கு!
தம்பி எழுதும் தங்க மடல்!
காஞ்சிபுரத்தில் உதித்த காவியச்சூரியன் நீ!
கலைஞரைச் செதுக்கிய கலைத்தமிழன் நீ!
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையுள்ளவன் நீ
தமிழ்ப் பேச்சால் தரணியைக் கட்டிப்போட்டவன் நீ
ஆங்கிலப் பேச்சால் ஆங்கிலேயனை அசத்தியவன் நீ
வியக்க வைக்கும் படைப்பாற்றலில் வித்தகன் நீ
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவன் நீ
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை வலியுறுத்திவன் நீ
முதல்வர் பணியில் முத்திரை பதித்தவன் நீ!
இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்தவன் நீ
திராவிட ஆட்சியை அரியணையேற்றியவன் நீ
சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்கியவன் நீ
இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தியவன் நீ
நாடகங்களில் நடித்து நடிப்பால் அசத்தியவன் நீ
திரைத்துறையில் திரைக்கதைகள் தீட்டியவன் நீ
இலக்கியத்துறையில் இமயமாய் சாதித்தவன் நீ
பத்திரிகைத்துறைக்குப் பெரும்புகழ் சேர்த்தவன் நீ
தமிழ்நாடு என்னும் தனிநிகர் பெயர் தந்தவன் நீ
இறுதியாய் ஒன்றைச் சொல்லி மடலை முடிக்கிறேன்
இறந்த பிறகு நடந்த உன் இறுதியாத்திரையிலும்
கின்னஸ் சாதனை படைத்தாயே, அதற்காக நாங்கள்
அழுவதா? சிரிப்பதா? சொல் அண்ணா, சொல்!
-    டி.என்.இமாஜான், சிங்கப்பூர்

029.

அண்ணாவை போற்றுவோம்

 அறிவாற்றல் மிக்கவர் அறிஞர் அண்ணா//

 ஆற்றல்மிகு பேச்சில் மக்கள்மனம் கவர்ந்தவர்//

 காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு//

 அவதரித்த முத்து அகிலம் போற்றும் நாயகன்//

 அண்ணாவின் பெருமையை இன்நாவால் கூற இயலாது//

 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது//

 இவரின் வாழ்வியல் கொள்கையின் தாரக மந்திரம்//

 தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவர்//

 தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பணியாற்றியவர்//

 தமிழையும் தமிழ் மக்களையும் வாழ வைத்தவர்//

மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்தவர்

 கதைகள்கட்டுரைகள் நாடகங்கள் கடிதம்என

 பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர்//

 இலக்கியதமிழில் அடுக்கு மொழியில் பேசுபவர்//


 எதுகையும் மோனையும் இவர்பேச்சில் ஆறாய் ஓடும் //

 மாதமோ சித்திரை மணியோ பத்தரை//

 எமக்கு மறவாது  இடுவீர் முத்திரைஎன//

 தேர்தல் கூட்டத்தில் தூங்கிக்கிடந்தோரை/

பேச்சாற்றலால் எழச்செய்த பெரும் தலைவர்//

 திராவிட சிந்தனை கோரிக்கையை வலியுறுத்தியவர்//

 அறிஞருக்கு எல்லாம் பேரறிஞராக வலம் வந்தவர்//

 பெண்ணியம் காக்கும் பெரும் தலைவர்//

 நானிலம் வியக்கும் நல்மனிதனாய் வாழ்ந்தவர்//

 கடமை தவறா காரியவாதியாக திகழ்ந்தவர் //

அண்ணாவின் வழியை அனைவரும் பின்பற்றுவோம்!!

 - தலைமை ஆசிரியர் ந.மலர்க்கொடி பெரம்பலூர்

 

030.

அறிஞர் அண்ணாவுக்கு கவிமடல்

காலாட்டும் காஞ்சியில்
நூலாட்டும் தொழில்
தாலாட்டும் தங்கதமிழ்
பாலூட்டும் சோறூட்
டும் பைந்தமிழ் நாடு
பாராட்டும் பகுத்தறிவு
சீராட்டும் நுன்னறிவு
பூச்சூட்டும் பொது
அறிவு தேர் ஓட்டும்
ஏர்ஓட்டும் கல்வியறிவு
பட்டறிவு பாதையில்
மேதை ஆனார்
அறிஞர் அண்ணா துரை கவிஞர் ‌கலைஞ்கர் நட்புறவு

எழுத்துரு நாடகங்கள்
மேடையில் சோடை
போகாமல் நறுமண
வாடை வீசி வெற்றி
கண்டது எதார்த்ததின்
அறிவாளி இவரின்
கருத்து எழுத்தில்
பெண் சுதகமானால்
கங்கையில் குளிக்க
போகும் ஆனால் அந்த
கங்கையே சுதகமானால் எங்கே
போய் குளிக்க ரங்கூன் ராதா நாடகம்
புகழ் பெற்றது

உருவத்தில் கரும்
பலகை நிறம் குள்ளம்
உயரம் நல்லுள்ளம்
அவரது இல்லம் இன்று காஞ்சியில்
அருங்காட்சியகம்

சாட்சி பல சொல்லும்
சத்திய வாணி மனைவி அமைச்சர்
பலநாடுசென்றுவந்தவர் மூக்கு பொடி‌ வைத்து வென்று நின்றவர்

எம் ஜி ஆரின் இதய
கனியானவர் எதையும்
தாங்கும் இதயம் கொண்டவர் அண்ணா
மேம்பாலம் சான்று
காற்று வீசும் கடற்கரை
அணையா விளக்கு
எரிய சந்தனபெட்டி
யில் சமாதியில் உறங்குகிறார்

சாதி மதம் ஒழிக்க
சமதர்மம் நிலைக்க
கடமை கண்ணியம் கட்டுப்பாடு தலைவர்
நீதி நேர்மை நியாயம்
காக்க அறிஞர் அண்ணா துரை
அமைச்சர் ஆனார்

சொல்லரசிவீணைதேவி பெங்களூர்.

031.

காஞ்சி ஈன்றெடுத்த அறிவுச்சுடரே!
கரும்பாய் இனித்திட்ட கனியமுதே!
திராவிடம் போற்றிய கவிச்செம்மலே!
திமுக்காவின் அரசியல் ஆசானே!

பகுத்தறிவு பாசறையின் சிற்பியே!
பாமரரின் இதயத்தை வென்றவரே!
பாட்டாளிகளின் துயரத்தை போக்கியவரே!
பாராளும் மன்றத்தின் புரட்சியாளரே!

கழகத்தை காத்திட்ட போராளியே!
கனவுகளை மெய்யாக்கிய ஞான ஒளியே!
சமூகநீதி பெற்றுதந்த சுடரொளியே!
சமமான உரிமைகளை கொடுத்தவரே!

பச்சையப்பன் கல்லூரியின் திலகமே!
பச்சை தமிழரின் நண்பரே!
பெரியாரின் கொள்கைகளை ஏற்றவரே!
சுயமரியாதை மாநாட்டை
நடத்தியவரே!

ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றவரே!
அரசியலில் மாமனிதராக உயர்ந்தவரே!
தம்பிகளை உடன்பிறப்பாக ஏற்றவரே!
தமிழ்மொழியை அரியணையில் அமர்த்தியவரே!

ஏற்றங்களை வாழ்வினில் தந்தவரே!
ஏமாற்றங்களை பாதையாக மாற்றியவரே!
ஏளனங்களை முடமாக்கி உயர்ந்தவரே!
தமிழினத்தை தலைநிமிர வைத்த எங்கள் அண்ணாவே!வாழ்க!

         கவிஞர் இனியன் பாலா.
          சென்னை-600 056.

032.

"அண்ணாவிற்கு ஓர்மடல்"

அறிஞர் அண்ணா காஞ்சியிலே அவதரித்தார்...!

ஆற்றலால் அடுக்கு மொழியில் முக்குளித்தார்...!

இதயத்தில்  எதையும் தாங்கிட சம்மதித்தார்...!

ஈடில்லா தமிழில் நாடகங்களை இயற்றிவித்தார்...!

உண்மைக்கும் உரிமைக்கும் குரல் கொடுத்தார்...!

ஊக்கத்தோடு ஊழ்வினைகளை களைந்து முடித்தார்...!
எண்ணத்தில் உயர்வினையே என்றும் சிந்தித்தார்...!
ஏழ்மையை அகற்றிட சட்டங்களை வகுத்தார்...!

ஐயமின்றி முதல்வர் பதவியை அலங்கரித்தார்...!

ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை கண்டெடுத்தார்..!

ஓய்வின்றி இரவுபகலும் மக்களுக்காய் உழைத்தார்...!

ஔடதமாய் அரசியலுக்கு அண்ணா விளங்கினார்...!

அடக்குமுறை ஆதிக்கத்திற்கு அறிவுக்கையை ஓங்கினார்...!

ஆளுமையால் மக்களின் மனங்களில் தங்கினார்...!

இன்னலையும்,  இகழ்ச்சியையும் இதமாக தாங்கினார்...!

ஈகையை பறைசாற்ற இரக்கமோடு துவங்கினார்...!

உண்மையான சமத்துவத்தை காணவே ஏங்கினார்...!

ஊன்றுகோலாய் தமிழை சிந்தையில் தாங்கினார்...!

எப்போதும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை போற்றினார்...!

ஏழ்மையில் பிறந்தும்
சாதனைகளில் தடம்பதித்தார்...!

ஐயா தமிழ்நாட்டின் பெர்னாட்சா என்ற பெயரெடுத்தார்...!

ஒற்றுமையை உள்ளங்களில் விதைத்திடவே துடித்தார்...!

ஓயாமல் தமிழ்நூல்களை
நித்தமும் படித்தார்...!

நிரந்தர நித்திரை நெருங்கியதை மூடியே மறைத்தார்...!

புற்றுநோயின் பிடியில் சிக்கி தவித்தார்...!

தமிழர்கள் புத்திசாலிகள் என்பதை உலகிற்கு நிரூபித்தார்...!

சகா வரம்பெற்ற சரித்திரம் ஆனவர்...!

சந்தனப் பேழையில் வங்ககடலோரம் உறங்குகிறார்...!

அணையா விளக்கின் அடையாளத்தோடு அடக்கமாகிருக்கிரார்...!

அண்ணாவின்  அறிவுப்புலமையும் அரசியல் ஆளுமையும்...!

"இனிஎவர்க்கும் வாய்க்காது,எதையும் தாங்கும் இதயத்திற்கு மட்டுமே என்பதும் பொய்க்காது"

அண்ணாவிற்கு மடல் எழுதிய அண்ணாமலையின் மகன்

"கவிஞர் & பாடலாசிரியர்"
அ.தமிழ்குமார்
கடுகனூர்.

033.

அண்ணாவிற்கு ஓர் மடல்.

1.தமிழ் தாயின் தலை மகனே எங்கள் ஆருயிர் அண்ணா.!

2.நடராசன் பங்காரு தம்பதிக்கு பிறந்த எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.!

3. காஞ்சியிலே தவப்புதல்வ
புத்தனாக,
அவதறித்த அறிஞர் அண்ணா.!

4.தென்னகத்து காந்தியானவர், எங்கள் பேரறிஞர் அண்ணா.!

5.தென்னாட்டு பெர்னாட்சாவாக, போற்றுதலுக்குரிய எங்களண்ணா.!

6.கவிதைக் கட்டுரை,
சிறுகதைகள்,
நாவலென,
இலக்கியப் படைப்பை படைத்தண்ணா.!

7.அன்றோ நீதிக்கட்சியின் அருள் மொழிக் காவலரான காக்கும் கடவுள்.!

8.நாடக வேந்தர்,மொழிக் காவலர்,நல்ல மனிதரென்பர்,
தத்துவ மேதையென்பர்.!

9.காஞ்சியிலே பட்டு நெசவு தொழில் புகழுக்கு,சொந்தக்காரர்.!

10.அரசியலில் அன்னையாகவும்,வானுதித்த செங்கதிர் போல் விளங்கியவர்.!

11.கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடென,
தாரக மந்திரத்தை வழங்கியவர்.!

12.தமிழ் நாடென பெயர் சூட்டி, மக்களின் இதயத்தில் குடி
புகுந்தண்ணா.!

13.ஒரு படியரிசி, ஒரு ரூபாயிக்கு போட்டு,
ஏழை,எளியவர்கள்,வாழ வழி செய்தண்ணா.!

14.தமிழகத்தின் வாழ்வாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்களித்தண்ணா.!

15.இருளைப் போக்கும் வழி காட்டியாக இப்புவிதனில் எழுந்தருளிய பேரறிஞர்
அண்ணா.!

16.மேகங்களில் ஊடுரிவி உருளும் இடியென சொல்லாற்றலை முழங்கியவர்.!

17.வாக்களித்த மக்களுக்கு நாடு, சொந்தமென மக்கள் மன்றத்தில் அறிவித்த அறிஞர்.!

18.கத்தியை தீட்டாதே,உந்தன்
புத்தியை"தீட்டு,
என்றுரைத்தண்ணா!

19.வன்முறைகள்,
இருபக்கமுள்ள கத்தியென உணர்த்தியவரு.!

20.எதையும் தாங்கும் நல் இதயம் கொண்டு,தன்னை எதிர்ப்போர் மீதும்,நல்ல கனிவை தந்தண்ணா.!

21.பல்கலைக் கழகத்தால்,உலகம் வியக்கும் வண்ணம்,அயல் நாட்டவரால் போற்றப்பட்டவர்.!

22.சுயமரியாதை திருமணத்தையும்,
நில உச்சரம்பையும்,
சட்டமாக இயற்றியவர்.!

23.மூட நம்பிக்கை,
சமயச்சுரண்டல்கள்,பலமாக சாடியவரு.!

24.மக்கள் நெஞ்சங்களில் வாழும் நினைவான,  பிறந்த நாளில்,
அண்ணா ஓர் மடல்,காவியத்தை,
அனுப்பி வணங்கி மகிழ்கிறேன்.!!!


கவிஞர் யோகி.
க.வெங்கடேசன்,

ராகாவெ தியான யோகம் மையம்,
நந்திவரம் கூடுவாஞ்சேரி.

 

034.

அண்ணாவிற்கோர் மடல் !

அனுப்புநர்; ஊ, முத்துமாணிக்கம், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் ஒன்றியம்,


 பெறுநர் ,சி ,என், அண்ணாதுரை அவர்கள் ,(தமிழக முன்னால்முதல்வர்)

 காஞ்சியில் அவதரித்தவரே !
  காணக் கிடைக்காத அண்ணா நீரே,!!
   காஞ்சி ,பட்டால் சிறந்ததா!!
   காஞ்சியில் உம்
 கால் தடம் பட்டதால் சிறந்ததா!!
 நடராஜன் பங்காருக்கு மகனாக பிறந்தீரே! நாடேபோற்ற உயர்ந்திரே!

உடல் உருவ, உயரமோ சிறியதாம்!!
   உள்ளத்தால் தமிழருக்கு ஆற்றிய தொண்டோ !பெரியதாம்!

 ஈரோடு, காஞ்சியை கருத்தால் ஈர்த்ததாம்! ஈடில்லா சமூகநல கோட்பாடுகளை வலியுறுத்தியதாம்!

  மூடநம்பிக்கைகளை ஒழிக்க !மூலை முடுக்கெல்லாம் இவர்கள் குரல் ஒலிக்க!

   நீதிக்கட்சியை கைவிட்டு !திராவிடக் கட்சியில் இணைந்து! நீடு துயில் கொண்டோரை விழித்தெழ வைத்துவிட்டு!

 தீவிர தமிழ் பற்றால்! திறமை மிக்க அடுக்குமொழிதமிழ் பேச்சால்!
  திராவிட கழகத்தின் போர்வாளாக !
   தேசிய கட்சிகளே ஆண்ட தேசத்தில்! தேசமே வியந்து பார்க்க சமூக நீதி கோட்பாடுகளின் சீர்திருத்தத்தில்!!

  ஜவஹர்லால் நேரோடும்!
  டாக்டர் அம்பேத்கா ரோடும், நேரில் பேசும் தகுதி பெற்றவர்!

   ராஜாஜியின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பானவர்! மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுய ஆட்சி! இரு மொழிக் கொள்கையே, நிலைநிறுத்தியவர்!

 தமிழ்நாட்டில் உயிர்நீச்சி! உயிர் மூச்சுஉள்ளவரை!தமிழ்இலக்கிய கவிதைகட்டுரை எழுதியவர்!

 அருமை மிக்க தமிழ் பேச்சாலும்! அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பாலும்! பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்ற தெம்பாலும்!!
   பல மாணவர்களிடையே தலைவராய் இருந்த பண்பாலும்!!

    பெரியாரோடு கருத்தியல் பிரிவினையாலும்! கருப்பு சட்டை அணிந்த கொள்கை எதிர்ப்பாலும்!
   வெள்ளை உள்ளம் கொண்ட அண்ணா! வெண்ணிற ஆடையோடும்! துண்டோடும் பல மேடைகளில் பெரியாரோடு கலந்ததாலும்! எதிர்ப்பானது!

   அண்ணாவின் நடவடிக்கை பெரியாருக்கு!
   அதனால் உருவானது திராவிடக் கட்சிகு !!

  திமுக ஆக துண்டானது!
   கலைஞர் கருணாநிதி எம் ஜி ராமச்சந்திரன் நெடுஞ்செழியன் இன்னும் பல தொண்டர்களோடு! தேர்தல் களம் கண்டது!

 தமிழகத்தில் ஆட்சியை கைக்கொண்டது!
  அண்ணாவின் தலைமை முதல்வரானது!இன்றுவரைத மிழகத்தில்அண்ணா,, திராவிடர்களே என்றானது!

   இந்தி எதிர்ப்பு வலுவானது !இரு மொழிக் கொள்கையே நிலையானது !

 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தோடு தமிழக மக்களைஅன்பால் கட்டிப்போட்டது!

 மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பொது நலம்கொண்டாடுது!

 சேர சோழ பாண்டிய பெயர்கொண்ட போக்குவரத்து பேருந்துகளை  !
தமிழக அரசு என மாற்றியது !
சிறப்பு மிக்கது !

  ரூபாய்க்கு, ஒரு படி அரிசி! ஏழைகளுக்கு ஏழை மாணவர்களுக்கு கல்வி!சிறப்புற்று!

   திராவிட நாடுதனிநாடு கொள்கையை கைவிட்டு !
  மதராஸ் மாகாணத்தை, தமிழ்நாடு என! இந்திய நாட்டுக்குள்ளே! இன்னும் ஓர் தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ் நாடு! என்று உருவாக்கியவரே!!

   தமிழால்மற்றும் சிறந்த பேச்சாளர் அல்ல!
   ஆங்கிலேயரோடு ஆங்கிலத்திலே! இணைப்புச் சொல்லை பயன்படுத்தி இதிகாசம் படைத்தவர்!

  கம்பருக்கும் வள்ளுவருக்கும் சிலைதந்தவர்
மெரினாகடற்கரையில்அமைதியில்மூச்சை அடக்கியவர்!

  கடல்கரையிலே ஓர்,கலங்கரைவிளக்கு!
என்றென்றும் தமிழக தம்பிகளுக்கெல்லாம் அறிஞர் அண்ணாநீரே ஒளிவிளக்கு!

   காற்றை அஞ்சல்தூதாக்கி!கட்டுரையைசிக்கன கவிதையாக்கி
சிறகடித்துவருகிறது விண்ணைநோக்கி!

   அங்கேமுகவரி தெரிந்தால் கொடுக்கட்டும்
 அல்லாதுபோனால்  என்னிடமேதிரும்பட்டும்!

- கவிதைமாணிக்கம்,

சங்குபட்டி,
திருவேங்கடம்வட்டம்,
தென்காசிமாவட்டம்.

 

035.

அண்ணாவிற்கு ஒரு மடல்

நிலைமண்டில ஆசிரியப்பா

அறிஞர் அண்ணா ஆட்சி சொல்லுமே
நெறியால் நின்ற நேர்மை வெல்லுமே
பெரியார் சொல்லினைப் பெரிதாய் வாழ்விலே
சரியாய்ப் பற்றிச் சாதனை செய்தார்

நூல்கள் யாவும் நுட்பமாய்ப் படைத்து
வாழ்வினில் சிறப்பாய் வாகை சூடினார்
திராவிடக் கடலைத் தீயாய் மாற்றியே
கிராமம் தோறும் கீழ்மையை அழித்தார்

சாதியின் இழிவினைச் சடங்கை வென்று
நீதி நம்மிலே நிலைத்திட முழங்கினார்
நாத்திகச் சுடராய் நாளும் வாழ்ந்து
சாத்திரம் ஒழிந்திட சமத்துவம் படைத்தார்

பேச்சும் மூச்சுமே தமிழென உலகில்
வீச்சுடன் உரைகளும் வியந்திட அளித்தார்
நாடகம் புதினம் நல்வழி புகட்டிப்
பாடமாய் நமக்கும் பாங்குற அமையுமே

கடமைக் கண்ணியம் கலங்கா ஆற்றலும்
உடமை என்றே உம்வழி உரைக்கும்
புத்தி தீட்டிடப் புகட்டிய மொழியும்
கத்தியை அகற்றிடக் கருத்தினில் நடந்திடும்

தமிழ்நா டென்னும் தத்துவம் முழங்கிடும்
திமிலுடன் பகைவர் தீவினை விரட்டும்
எண்ணம் எல்லாம் ஏற்றம் செய்யும்
அண்ணா என்றோர் ஆழித் தேனே ...

சு.சோலைராஜா
முதுகுளத்தூர்.

036.

அண்ணா துரைக்கு ஓர் மடல்


என் தமிழ்நாட்டை ஆண்ட முன்றெழுத்து பொக்கிஷம்..!
காஞ்சிபுரம் நெய்த அழகான வரலாற்று
வெள்ளை வஸ்திரம்..!
தாய் தமிழ் கண்டெடுத்த ஆழமான ஆழி..!
இலக்கிய துறையில் பெரும் சாதனை படைத்த..!
எங்கள் அண்ணாவே உங்களை வணங்குவோம்..!
எங்கள் மக்களின் மனமே இவர்க்கு..!
சிம்மாசனமாகி விட்டது வாழ்வில் எளிமையின்..!
அடையாளமாகி போனது வெள்ளை உடையை..!
இவரின் வஸ்திரமாகி போனது வாழும்..!
காலத்தில் தென்னகத்து காந்தி என..!
போற்றிப்பட்டார் கவிதை கதை நாவல் அனைத்தும்..!
எங்கள் அண்ணாவின் பேனாவிற்க்கு அடி..!
பணிந்தது காஞ்சிபுரம் நெசவு தொழில் இவரை..!
நேசிக்க தொடங்கியது இவரும் சில..!
காலங்கள் நெசவு செய்தார் காலங்கள்..!
உருண்டோடியது இவரை மக்களின் தெய்வமாக..!
புகழப்பட்டார் அரசியலில் பெரும் அன்னையை போலவும்..!
மக்களிடத்தில் அன்பாய் பழகும் தந்தையை..!
போலவும் தோன்றினார் வாழ்வில் என்றும் மக்களுக்காக..!
கடமை, கண்ணியம் இவரின் சுவாசக்காற்றிற்கு..! சமம்  இருளை போக்கும் ஒற்றையாளியனை..!
போல் ஒய்வில்லாமல் உழைத்து கொண்டிருந்த..!
எங்கள் அன்னையை போன்றவரே போற்றி..!
வணங்குவோம் இந்த நல்ல நாளில்..!


கவிஞர். ஜெ. உ . தரணி ஜெகதீசன்
கொடுவாய் ( திருப்பூர் மாவட்டம் )

 

037.

அண்ணா விற்கு ஓர் கடிதம்
பங்காரு அம்மா
ஈன்றெடுத்த முத்து-சித்தி
இராஜாமணி அம்மையாருக்கு
இவர்தானே சொத்து!
பெரியாரின் தொண்டன்
எனப் பேர் எடுத்தார்

பெரிய பெரிய செயல்களையும்
செவ்வனே செய்து முடித்தார்!
சாதிமத பேதங்களை
சாகடித்தார் வாழும்
தமிழ் மொழியே
முதன்மை என்றார!

மக்கள் கவிஞரென
வலம் வந்தார்
மனம் கவரும் -நாயகனா
நிலைத்து நின்றார்!

அண்ணாவின் மேடைப்பேச்சு
அறிஞர்களுக்கு முழுமூச்சு
இளம் பேச்சாளருக்கு
இவரே உரை வீச்சு!
அண்ணாவின் கடிதங்கள்
தம்பிக்குச் சொல்லும்
அனுபவம் அனைத்தும்
வரலாறு வெல்லும்!

சிறையில் நிலவைக்
கண்டு இரசித்தார்
சிந்தை முழுவதும்
நாட்டையே நினைத்தார்!

மாற்றான் தோட்டத்தில்
மல்லிகை உண்டு
நித்திரையும் சித்திரையும்
நினைவில் நின்று!
ஒன்றே குலம்
ஒருவனே தேவன்-என்ற
உன்னத வாக்கை
உலகிற்கு உணர்த்தியவர்!
தமிழக அரசியலில்
புரட்சி செய்தவர்
சாகா வரம் பெற்ற
இலக்கியம் படைத்தவர்!
தாயகம் காத்தவர்
தமிழ் அமுதர்
தமிழ்நாடு என்று
பெயர்சூட்டி மகிழ்ந்தவர்!

வாழ்வு மட்டுமா
இவருக்குச் சாதனை
இறப்பும் அல்லவா
உலகச் சாதனை!

முனைவர் கரு கலையரசி

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை ஜமால் முகமது கல்லூரி

திருச்சி.

038.

அண்ணாவிற்கு ஓர் மடல்
***************************
காஞ்சிபுரத்தின் தங்க மகனே_ நீ,
நெசவாளர் குடும்பத்தின் வீரசிங்கம்.

பச்சையப்பன் கல்லூரியின் பச்சை தமிழனே_ நீ
பட்டம் பெற்றாய் வரலாற்றில்.

தொடர்மொழியில் அடுக்கி விடுகிறவனே_ நீ
ஆங்கில புலமை கொண்டவர்.

இருமொழி கொள்கைக்காரனே_ நீ
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்றாய்.

பன்முகத் தன்மை கொண்டவனே_ நீ
பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தாய்.

தமிழ் மீது பற்றுக் கொண்டவனே_ நீ
தமிழ்நாடாக்கினாய் மதராஸ் மாநிலத்தை.

முக்கோட்பாடுகளில் முதல்வன்_ நீ
முன்னேற்ற பாதையை வகுத்து விட்டாய்.

வாசிப்பதில் காதல் கொண்ட_ நீ
வரலாற்று கட்டிடமாக உயர்ந்து நிற்கிறாய்.

பெரியாரின் பாசமிகு சீடனே_ நீ
திராவிட த்தின் உயர்வுக்கு உரமிட்டாய்.

முற்போக்கு சிந்தனை உடையவனே_ நீ
மூடநம்பிக்கை ஒழிய காரணமானாய்.

பகுத்தறிவு கருத்துகளால் நிறைந்தவனே_ நீ
பார் போற்றும் நாடக கலைஞனானாய்.

சரித்திர நாயகனாக வாழ்ந்தவனே_ நீ
சாதனை மன்னனாக நிலைத்திருக்கிறாய்.

சு. உஷா சுந்தர பாய்
சென்னை.

039.

அண்ணாவிற்கு ஓர் அன்பு மடல்
-------------------------------------------------------- நடராஜன் பங்காரு அம்மாளுக்கு மகனாக காஞ்சிபுரத்தில் பிறந்தவரே

 இரண்டு வருடம் தமிழக முதல்வராக பணியாற்றியவரே

 தந்தை பெரியாருடன் இணைந்து கொள்கைகளை பரப்பினவரே

 ஹிந்தி  எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரே

 தமிழ்நாட்டிற்கு திட்டவட்டமான வடிவத்தை கொடுத்தவரே

 கடும் வார்த்தைகளை யாரிடமும் பேசாத பண்புள்ளவரே

 பிறரை மதிக்கும் பண்பாளராக இருந்தவரே

 எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது இருந்தவரே   

 சிரிக்கும் சிரிப்பதனிலே சிற்பமாய் ஆனவரே

 அண்ணா நீங்கள் அரசியல் தலைவர் மட்டுமல்ல

 உலக வரலாற்றில் ஓர் அறிவுள்ள மேதையானவரே

 ஆற்றல் மிக்க பேச்சாளர் வலிமைமிக்க எழுத்தாளரே

 உங்கள் பேச்சில்இனிமையும் எளிமையும் இருக்கும்

 தெய்வ நெறியை தமிழகத்தில் பரப்பும் மெய்ஞானி ஆனவரே

 உங்களது குரலால் உழைக்கும் மக்களுக்கு ஊக்கம் ஊட்டியவரே

 வண்டு கண்டேன் என்ற இசை பாடலால் சிறப்படைந்தவரே

 இந்துவும் முஸ்லிமும் ஒன்று என்று உலகிற்கு எடுத்து கூறியவரே

 ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றவரே

 மீண்டும் நீங்கள் இங்கு
 வந்தால் மீண்டும் வரும் நல்வாழ்வு

 கடமை கண்ணியம் கட்டுப்பாடு இன்றி தந்திட்ட உத்தமனே

 கடற்கரையில் பேசுவாய் கடலலையில் மீனானோம்

 கடற்கரையில் தூங்கி விட்டாய் கடற்கரையில் மீனானோம்

 தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் பேச்சாற்றல் பெற்றவர் நீரே

 அண்ணா நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டீர் ஐயா

 அண்ணா உங்கள் நினைவுகள் என்றும் தமிழ்நாட்டில் அழியாதவை

 டாக்டர் ப்ரீ டா தூத்துக்குடி

040.

ஆளுமைத்தலைவர் அறிஞர் அண்ணா     

தமிழனின் சிறப்பை உரைத்த வித்தகர்///        

காஞ்சியில் பிறந்த எளிய நெசவாளர்///     

சமுதாயம்,மொழி, மாநிலயுரிமை சிந்தனையாளர்///           

பேச்சாற்றல் திறனை  நாட்டில் நிகழ்த்தியவர்///          

பத்திரிக்கை,நாடகம்,திரைப்படமென பன்முகவாளர்///               

தமிழ்நாடு என பெயர் சூட்டியவர்///                        

சமூகபாகுபாட்டை அகற்றிய மாபெரும் போதகர்///                           

மொழி,பண்பாடு, கலாச்சாரம் களம்கண்டவர்///          

திராவிடநாடென முழக்கம் எண்திசையும் பரப்பியவர்///                        

இறை நம்பிக்கை அனுதினமும் கொண்டவர்///                   

வாழ்வின் திருப்பம் பச்சையப்பன்கல்லூரி என்றார்///                       

குருவின் வழிகாட்டலை ஆராய்ந்து பின்பற்றியவர்///          

தீவிரமான படிப்பை கற்று நேசித்தவர்///       

நீண்டநேரம்  நூலகத்தில் சிந்தித்து பயணித்தவர்///                     

நம்தலைவரை வியந்த பெரியாரை வசமாக்கியவர்///           

வசனக்கர்த்தாவாக  வியக்கும் வகையில் செய்தவர்///                    

வேலைக்காரி மூலம் தேசத்தின் புரட்சியாளர்///                  

தனித்தமிழ் இயக்கம் செந்தமிழுக்காக தோற்றுவித்தவர்///                   

தமிழ்,ஆங்கிலம் பேச்சாற்றலால் கவர்ந்தவர்///                                  

புரட்சித்தலைவரை மனம் நெகிழும்படி பாராட்டியவர்///                    

கலைஞருக்கு அரசியல் வழிக்காட்டிய தவப்புதல்வர்///                     

தமிழரும் தமிழையும் வாழ்வில் காத்தவர்///          

மக்களின் மாசற்ற இலட்சிய நினைவாளர்///                      

வையகம் போற்றும் அண்ணாயென்ற உயிர்மூச்சாளர்///        

முனைவர் எ.செந்தில்வெங்கடாசலம் ஆசிரியர், நாமக்கல் மாவட்டம்.

 

041.

பறவையின் உதிர்ந்த சிறகு

பார்த்தாலே இதயம் கனமாகுமே நமக்கு

தொட்டால் அதன் மென்மையை உணரலாமே

சிறகால் அது வானில் பறக்கிறது

விண் வரை சென்று வருகிறது

சிந்தனையால் மனிதன் ஆகாயத்தில் பறக்கலாம்

தன்னம்பிக்கையை இழந்தால் உதிர்ந்த சிறகே

ஒவ்வொரு நேர்மறை எண்ணங்களும் சிறகுகள்

அவற்றைக் கொண்டே சிகரத்தை அடையளாம்

வாழ்வில் வரும் துன்பங்களால் முடங்கலாம்

விடாமுயற்சியும் பயிற்சியும் இரு சிறகுகளாக

இலட்சியப் பாதையை நினைத்து பறக்கலாம்

நல்எண்ணங்கள் உதித்தால் நல்ல வாழ்க்கை

உதிர்க்காமல் உயிர்ப்புடன் இருக்க நலமே

உதிர்ந்த சிறகு உணர்த்தும் உண்மை

சோதனைகளையும் சாதனையாக்க நம்மால் முடியுமே

மனது இலகுவானால் வானம் எட்டிடுமே


தி.மீரா
ஈரோடு

042.

அடுக்கு மொழிகளை எடுப்பாக பேசும் மிடுக்கான அண்ணா அவர்களுக்கு ஓர் மடல்...

தரணிக்கோர் தவப்புதல்வன்
தமிழை வளர்த்தெடுத்த தலைப்புதல்வன்
தாய் தமிழ் நாட்டை தமிழ்நாடென்று மீட்டெடுத்த காஞ்சியின் புதல்வன்...

அன்பு தம்பிகள் எப்போதும்
அண்ணா என்று அழைத்திட‌ நல்லதொரு
சமூகத்தை நாட்டிற்குத் தந்த நல்லவரே...

புத்தக வாசிப்பில் ஒருபோதும் மெத்தனம் காட்டியறியாத
உத்தம அறிஞரே..

உம் எழுதுகோளில் உதிர்ந்த எழுத்துகள் ஒவ்வொன்றும் கல்லில் வடித்த சிலையாய் நின்று கதைகள் பல பேசுகின்றன பேரறிஞரே...

நூலாசிரியர்!
நாடகாசிரியர்!
சிறுகதையாசிரியர்!
உரைநடையாசிரியர்!
வசனகர்த்தா!
பாடலாசிரியர்!
என்ற
பன்முகப் புலவரே...

கைத்தறி நெசவாளர்கள் கஞ்சிக்கு வழியற்று இருக்கையிலே அவர்கள் பசியாற்ற வந்த
கருணை வள்ளலே...

 ஈ.வே.ராவின் சிந்தனையே..
மறுமணம் எனும் திருமணத்தை
விளங்க வைக்க பலருக்கு விளக்கி வைத்த பேரொளியே...

அரசியலின் ஆனந்த சோதியே..
காலம் உள்ளவரை வாழும் உமது புகழ் சோதியே...

 பேராசிரியர் ம.அருளாம்பிகை
காஞ்சிபுரம்.

043.

அண்ணாவிற்கு ( ஓர் ) ஒரு மடல்

1. தமிழ் என்னும்                   
             பேரண்டத்தின்       
             இலக்கணமே !

2. தமிழ்நாடு என்று
            பெயர் வைத்த  முதல்வரே !

3. பெரியாரின்  பேச்சுப் போர்வாளே !

4. கடமை கண்ணியம் கட்டுப்பாடு நெறியின் நாயகனே !

5. முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் ஆசானே !

6. தமிழரின் தமிழ்  
              மனக்கும்                       
         தைப்பாவையே !

7. மகளிர்  கல்வியைப்  பார்வதி பி.ஏ.  வழியே வெளிச்சம் காட்டிய சுடர் விளக்கே !

8. நிலையும் நினைப்புமான கதம்பமே !  

9. பல்கலைத் தேர்வின் விடைத்தாளைக் காட்சிக்கு வைத்த அகழாய்வுக்கூடமே !

10. பொறுமை கடலிலும் பெரிது  என்பதை உறுதியாக எடுத்துக் கூறிய கலங்கரை விளக்கமே !

11. உலகத்தையே  பேச்சு மூலம் ஈர்த்தவரே !

12. அடுக்கு மொழியால் பாமர மக்களை ஈர்க்கும் பேச்சாளரே !

13. மென்மைக்கும் மென்மையானவரே !

14. வன்மைக்கும் வன்மையானவரே  !

15.கலிங்கத்துப் பரணியை வட்டார மக்களிடம் அடுக்குமொழி நடையினைப் பேசிய சிறப்பாளரே !  

16. பேச்சினிலே உவமைகளைக் கையாண்ட வல்லவரே !

17. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட பித்தனே  !

18.  கொங்குதேர் வாழ்க்கையின் மணிமகுடமே !

19. திராவிடக் கழகத்தின் துவக்க கால இதழாளனே !

20. தொடர் வண்டி நிலையங்களில் இந்தியை அடித்துக்காட்டிய தொண்டனே !

21. அனைத்து மதங்களையும் மதித்த சிகரமே  !

22. தென்னாட்டுச் சிங்கமென புகழ்ந்துரை பாடியவரே !

23. பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்த கவினே  !

24. மனித சமுதாயத்தின் வெளிச்சத்திற்கான விடிவெள்ளியே !
நாளைய விடியலுக்காக !

      --- மா.சுரேஷ்.
முதுகலைத் தமிழாசிரியர்,  
திருவி. லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளி,  
திருவில்லிபுத்தூர் - 626 125.

044.

அண்ணாவிற்கு  ஓர் மடல்

காஞ்சிபுரம்  தந்த
காஞ்சித் தலைவனே

வாஞ்சையோடு உன்னை
நெஞ்சினில்  நேசிக்கின்றோம்

தொண்டு செய்தே
பழுத்த பழம்

பெரியாரின்  சீடனே
பெருமைமிகு வேந்தனே

கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு, என்றுமே

தமிழுக்கு   இல்லையே     உன்னிடம் தட்டுப்பாடு

உனது
அடுக்கு மொழியின்
வார்த்தை ஜாலம்

ஞாலமே புகழுமே
அற்புத ஞானம்

உனது ஆட்சிக்காலமோ
தமிழரின் பொற்காலம்

தமிழ்நாடு என்றென்றும்  
உனது புகழேயேபேசும்

ஆங்கிலமும் உன்
நாவில் சரளமாய்

நடனமும் ஆடும்
பன்மொழிபேசியே கவிதைம்பாடும்

உன் உயரமோ
சற்றுகுறைவு

மக்கள் மனதில் நீர்பெற்ற உயரமோ மிகவும்நிறைவு

திராவிடச் சூரியனை உதிக்கச் செய்த
உத்தமரே

பேரறிஞர் அண்ணா என்றே அழைக்கப்பட்டவரே

பெண்அடிமை விலங்கை
உடைத்து சமநீதி

தந்த உயர்ந்த உள்ளம் படைத்தவரே

மாபெரும்  சரித்திர
நாயகர்களின் வழிகாட்டி


அண்ணா உனது
மாசில்லா அரசாட்சி

உனது தம்பிகளே
அதற்கு மாபெரும்சாட்சி

வாசிப்பை நேசித்து
சுவாசிப்பையே தள்ளிவைத்தாய்

வரைகிறேன்  உமக்கே  ஒரு
வாழ்த்து மடல்

மனமகிழ்வுடனே மகிழ்ச்சி fm யில்
கவிச்சிறகில் வரைந்தே

கோவைக்கவி  புவனா
கோவை

045.

அண்ணாவிற்கு ஓர் மடல் .......
காஞ்சியில் பிறந்த மைந்தனே  அறிஞராயினும் பாசத்தில் அண்ணாவே பகுத்தறிவு பகலவனின் சீடனே
ஆள்பாதி ஆடைபாதியாம் மனிதன் நீரோ ஆள்பாதியாயினும் புகழோ எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியே !  வாசிப்பால் சீர்திருத்த திட்டங்களை
தீட்டிய செம்மலே - பேச்சாற்றலால் செந்தமிழை வளர்த்தெடுத்த செம்மொழியானே! பத்திரிக்கை சிறுகதை மேடைபேச்சென்று அனைத்திலும் தடம்பதித்த நாயகனே  நுண்ணறிவால் மக்களைக் கவர்ந்து அரசியலில் புதுமைப்புகுத்திய புதியவனே
செயல்கள் மணிமகுடமாய் ஜொலித்தாலும்  பழக்கத்தில் எளிமையாய் காட்சியளித்து  பொதுஜனத்தை முன்னேற்றிய அறிவொளியே!
 மானம் காக்கும் நெசவாள
 குடியாயினும்  சீரிய சிந்தனைகளுக்கு  வண்ணமூட்டி தமிழனின் தன்மானம்
காத்த தலைமையாளரே! இனவெறியொழித்து தீண்டத்தகாதவரையும் தீண்டிய தீரரே! தென்னகத்தின் காந்தியாகவும் தென்னாட்டின்  பெர்னாட்ஷாவாகவும் வலம் வந்த ஆளுமையே!அகிலம் போற்றும் அறிவாலும்
ஆற்றல் நிறைந்த பேச்சாலும்
 ஏழைகளின் இருளகற்றிய பேரறிஞரே!
மண்ணை விடுத்து விண்ணை அடைந்தாலும் உந்தன் கொள்கைகளை
 என்றும் பொன்னைப்போல் போற்றுவோம்.................

திருமதி ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ்

இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி.

046.

அறிவுலக மாமேதை அறிஞர் அண்ணாவுக்கு ஓர்கடிதம்

கடற்கரையில் துயில்கின்றக் காவியத் திருமகனே/

படைகாண விழித்தெழுவாய் பாமரரின் நலங்காக்க/

எழுந்துவா தலைவா! ஏமாற்றுப் பேர்வழியைப்/

பழுதின்றிப் பக்குவப் படுத்த பறந்துவா!/

திராவிடக் கொள்கையினை வேரறுக்கும் கயவர்களை

இந்தியைத் திணிக்க இங்கொரு கூட்டமாய்

வந்தேரி வந்தவர்கள் வாய்ப்புத் தேடுகிறார்

வாலாட்ட வேண்டாமென வன்சொல் கூறாயோ!

தாலாட்டும் நம்தமிழைச் சீராட்ட வேண்டாமா?

மொழிப்போரில் உயிர்நீத்த உத்தமர்கள் கல்லறையை

இகழ்வாக நினைக்கினற வெரியர்களை அடக்கிடுவோம்

காவியத் திருமகனே! கலகக் காரர்களை

களையெ டுக்கும்
 வழிதனை அருள்வீரா?

திராவிடம் கற்பித்தத் தீந்தமிழ் நாயகரே!

ஆருடம் பார்ப்போரின் அடாத செயலை

விடாது துறத்திட விழித்தெழுவீர் தூயவரே!

தமிழ்மொழியே தன்னுயிரெனத் தரணிக்கு உணர்த்திய

 உத்தமத் திருவிளக்கே! தத்துவத்தின் வித்தகரே!

காஞ்சியிலே பிறந்து கழகத்தைத் தோற்றுவித்து

வள்ளுவரின் அடிச்சுவட்டில் அரசை ஏற்றவரே!

ஏற்றத் தாழ்வுஇலா சமுதாயம் உருவாக

ஒருமாற்றம் கொணர்ந்த ஓங்குபுகழ் பாவலரே!

பாசமழை பொழிந்த பாரதத்தின் பைந்தமிழே!

நாதஇசை முழங்கி நின்பாதமலர் வணங்குகிறேன்..

அண்ணாவின் புகழ்.ஓங்குக

        கவிஞர்
   சைதை பாலு.

047.

அண்ணாவிற்கு ஒர் மடல்


தமிழ்தாயின் தத்துபிள்ளையாய்
காஞ்சியில் பிறந்தாய்

முத்தமிழில் படைத்தாய் பலவாய்
படைப்புகள்

உன்இன் பேச்சால்
தானே ஆட்சி மாற்றம்

தமிழ்உணர்வை நாட்டில் ஊட்டியது
நீயன்றோ

பார்முழுதும் நற்றமிழைப் பேச
வைத்தாய்  .

உலகாளும் மொழியாக தமிழை
 ஆக்க நினைத்தாய்

 தமிழரின் மேன்மையை
உலகறிய வைத்தாய்

பத்திரிக்கை ஆசிரியனாய் பாரில்
 பாராட்டப் பட்டாய்

பல்கதைகள் ஏழுதி
புகழின் உச்சி எட்டினாய்

மனிதம் மிக்க
மாமனிதன் நியன்றோ

பெரியாரின்
தீவிர சீடன்
நீயன்றோ

பகுத்தறிவு  கொள்கையில்
காட்டினாய் ஈடுபாடு

மூடநம்பிக்கைக்கு
முற்றுபுள்ளி வைக்க
முனைத்தாயே

அடுக்கு மொழிப்
பேசி அனைவரையும்
கவர்ந்தாயே

அண்ணா நாட்டின்
இருளகற்றிய ஒளிவிளக்கு நீயே

பட்டுக்கு பெயர்பெற்றது
காஞ்சிபுரம் அறிவோம்

காஞ்சிக்கு பெருமை
சேர்த்தாயே

 அண்ணா
எண்ணம் ஆயிரம்
உண்டு நாட்டை உயர்த்த

திண்ணமாக
முயன்றார்
எமன் விடவில்லை

உருவமோ குள்ளம்
 உள்ளமோ வெள்ளை

நாட்டு மக்களை
உயர்த்த அல்லும் பகலும் உழைப்பை
நல்கினாயே


ஏழ்மையை அகற்ற
திட்டங்கள் பலவும்
தந்தாயே

இந்தி திணிப்பு
தீவிரமாய் எதிர்த்தாயே

சென்னையை தமிழ்நாடு என்று
பெயர்மாற்றம் செய்தாயே

தென்னாட்டு காந்தி
காமராசர் என்பர்

அண்ணாவை தென்னாட்டு
பெர்னாட்ஷா
என்போம்

என்றும் எங்கள் மனதில்  நிலைத்து
நிற்பாய் அண்ணா
நீயே

அரங்கநாயகி கண்ணன்
தருமபுரி.

048.

அறிஞர் அண்ணாவுக்கு ஒரு மடல்

பட்டுக்கு பெயர் சொல்லும் காஞ்சிபுரம்
நடராசர் அய்யாவின் பேர் சொன்ன பிள்ளை அண்ணாதுரை.

மதராஸ் என்ற பெயர் இருந்த போது கடைசி முதல்வர் இவரே
தமிழகம் என்ற பெயரானதும்
முதல் முதல்வரும் இவரே.

காங்கிரஸ் அல்லாத திராவிடக் கட்சியின்
தன்னிகரற்ற தலைவர்

செப்டம்பர் மாதத்திற்கு
பல பெருமைகள் உண்டு
இவரது பிறப்பால் செப்டம்பர் 15 பெருமைபட்டது.

பங்காரு அம்மா பெற்றெடுத்த இவரை இராசமணி அம்மாள் வளர்க்க
ராணி அம்மையாரை மணந்தார்.

இல்லறம் நல்லறமாக
சென்ற போதும்
மழலைச்செல்வம் மலராத போது
தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து தந்தையானார்.

பச்சையப்பன் பள்ளி அண்ணாவின் பள்ளி
நகராட்சி அலுவலகம் அண்ணாவின் டணியிடம்.

தமிழும் ஆங்கிலமும் இவரது பேச்சால் பெருமிதமடைந்தன.
ஆங்கில இணைப்புக்குப்
"பிகாஸ்" இவரின் மகுடம்.

நாடக சீர்திருத்தம் இவரது இயக்கம் நடிப்பால் நலமாக இருந்தன.

திரைப்படங்கள் இவரது எழுத்தை முழங்கின
பத்திரிக்கை பதிவுகளை பகிர்ந்தது.

அண்ணா என்றதும் நினைவுக்கு வருவது
"கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு"
"வேலைக்காரி" திரைப்பட உலகின் பொக்கிஷம்.

புகையிலைப் பழக்கம்
கொடியது..
புற்றுநோய் இறவாத புகழ் பெற்ற இவரின் இறப்பை நிர்ணயித்தது.

கின்னஸ் புத்தகத்தில் அண்ணாவுக்கு இறுதி மரியாதை செலுத்தியோருக்கு இடம் உண்டு.

அண்ணா சதுக்கம் அஞ்சலி செலுத்த மட்டுமல்ல..
அவரின் செயல்திறனை ஒவ்வொருவரும் நம் வாழ்நாளின் வழியாக்கி முயலவும் தான்..

நா. ஜானகி,
ஆசிரியர்,
சென்னை.

049.

அண்ணாவிற்கு ஓர் மடல்

சமூகநீதி பெற்றதந்த ஒளிச்சுடரே

அறிவின் உருவம் கொண்டவரே

மேடைப் பேச்சில் அன்பின் சின்னமே

உண்மைக்கு குரல் கொடுக்க உயர்ந்த எழுத்தாளரே

ஆளுமையால் மக்களின் மனங்களில் புகுந்தவரே

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்டமைத்தவனே

தமிழ் தாயின் தலைமகனே

காஞ்சியை நெய்த நிலை மன்னனே

நீதிக்காக நீங்காத எண்ணம் படைத்தவனே

மூடநம்பிக்கைகளை ஒழிக்க முயன்றவனே

தமிழ்நாட்டின் நிலை அமைத்தவனே

நூல்கள் பல நுண்ணறிந்தவனே

உன் வரலாற்றுப் பாதையில் நானும் ஒருவன்

திராவிடக் கடலை தீயாய் மாற்றியவனே

சாதி மத பேதமின்றிவாழச் சொல்லியவனே

இலக்கிய துறையில் சாதனை படைத்தவனே

காலத்தில் ஓர் தென்னகத்து காந்தி நீரே

தமிழக அரசின் புரட்சி நாயகனே

பன்முகத் தன்மை கொண்டவன் நீ

பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவன் நீ

மொழி பண்பாடு கலாச்சாரம் கலை எடுத்தவனே.

பாசமழை பொழிந்த பாரதத்தின் பைந்தமிழே

ம.பூவரசன்,
திருவள்ளூர்.

050.

ஆளுமை வேந்தன் அண்ணாவிற்கு ஒர் மடல்

தமிழகத்தை ஆண்ட
 முதல் ஆளுமையே

நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட
ஒற்றை திராவிடனே

அரசியலில் மறுமலர்ச்சிக்கு
 வித்திட்ட  வேந்தனே

நினைவாற்றலும் சாதுர்யமும்
 உனது படைப்பு

நீர் மறைந்தாலும்
மறைவதில்லை  உம்சிறப்பு

அரசியல் பணிகளில்
தன்னையே அர்ப்பணித்து

பெரியாரின் கொள்கையால்
 ஈர்க்கப்பட்ட சிந்தனைவாதி

மனசாட்சிக்கு மதிப்பளித்து
 மக்களுக்காய் வாழ்ந்து

 கடமை கண்ணியம்
 கட்டுப்பாடு எனும்

  கோட்பாட்டை தனக்கே
உரித்தாக்கி பின்பற்றிய

தங்களின் கோட்பாடு
இன்றும் போற்றுதலுக்குரியது

காட்சிக்கு எளியவராய்
 கடுஞ்சொல் பேசாதவராய்

சிறிதும் ஆணவமில்லாத
பேராற்றல் மிக்கவரே

ஏழைகளின் சிரிப்பில்
இறைவனை காணமுயன்று

எதிரிகளிடம்கூட அன்பு
 செலுத்தும் பண்பாளரே

தமிழரறிஞர்களுக்கு  சிலைவைத்த
சீர்த்திருத்த சிற்பி

தாய்மண்ணிற்கு பெயர்சூட்டி
மகிழ்ந்திட்ட பேரறிவாளன்

வாய்மையே வெல்லுமென்பதே
உமது தாரகமந்திரம்

தமிழிலும் ஆங்கிலத்திலும்
சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்

திராவிட இயக்கத்தின்
தனித்துவமான பாரம்பரியம்

அண்ணா என்கின்ற
மாமேதையாலே சாத்தியமானது

தமிழ்மீது நீர்செலுத்திய
தாக்கம் அளப்பரியது

சாமானிய பிறப்புக்கும், சாதனை இறப்புக்கும்
இடைப்பட்டதே உமதுபிறப்பாகிட

வாழும்போது…… நீ
படைத்த  சாதனைகளை

முறியடித்து உமது
இறுதி ஊர்வலத்தில்

அலைகடலென திரண்ட
ஒன்றரை கோடி

மக்களின் கண்ணீர்த்துளிகள்
கின்னஸ் படைத்தது

இத்தகு  பெருமைக்குரிய
மக்கள் செம்மல்

தென்னாட்டின் பெர்னாட்ஷா
உமை போற்றி

உயிர்பெறவே இவ்வரிகளனைத்தையும்
உமக்காய்  சமர்ப்பிக்கிறேன்

  மதிப்புறு முனைவர். நா. பாரதி
      ( கள்ளக்குறிச்சி )

051.

அண்ணாவிற்கு ஓர் மடல்

தென்நாட்டின் பெர்னாட்ஷாவே!

காஞ்சியின் ஒளிச்சுடரே!

நடராஜன்-பங்காரு அம்மாள் தவப்புதல்வரே!

ராஜாமணி
வளர்த்தெடுத்த
மாமணியே!

இராணியை
கரம்பிடித்த
இராஜாவே!

பச்சையப்பன்
கல்லூரி
விதைத்த வித்து
இவரை
அரசியல்
தலைவராக்கியது!

பிள்ளைப் பிராயத்தில்
பிள்ளையார் பக்தன்
பின்னாளில்
நாத்திகத் தலைவரே!

அடுக்குமொழிக்கு
அண்ணாவே

சொல்லடுக்கு வேந்தரே!

நூல்களை
வாசித்தவர் அல்ல
சுவாசித்த பேரறிஞரே!

களங்கமில்லா நாயகரே!

அரசியலில் ஞானகுருவே!

கலைஞரைக்
கண்டெடுத்த
கலங்கரை விளக்கே!

எளிமையின்
நாயகன்
எம்.ஜி.ஆரை
ஏற்றிவிட்ட ஏணியே!

மேடையில்
கர்ஜிக்கும்
சிங்கமே!

தமிழ்நாடென
பெயர் சூட்டிய
பெருந்தகையே!

அண்ணா
பெயரல்ல
பண்பாட்டின்
குறியீடே!

பிரிக்க முடியாதது
அண்ணாவும் தமிழுமே!

புற்றுநோயால்
செல்லரித்துப்போன
புண்ணியரே!


முனைவர் ச.தனலெட்சுமி, சிவகாசி.

052.

அண்ணாவிற்கு ஓர் மடல்

மடல் வரைந்தே மாற்றாரையும்

மனம் திருந்த வைத்தவருக்கு

மடல் வரைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

அண்ணா உம் நா
ஒரு பால் கோடாத
செந்நா

வாளை விட கூர்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தி

கயமைகளின் வேரறுத்த காஞ்சித் தலைவன் நீ

இந்தி திணிப்பிற்கு எரி மலையாய் ஆனவரே

சென்னை என்ற சொல்லை செந்தமிழாய் மாற்றி

தமிழ்நாடு என்று பெயரிட்ட தனிப் பெரும் தலைவன் நீர்

நீர் தீ என்று சொன்னால்

திசையெட்டும் தீப்பிடிக்கும்

நீரென்று சொன்னாலோ நிலமெல்லாம் குளிர்ந்து போகும்

வார்த்தை வாளெடுத்து வஞ்சகரின் தலையறுப்பாய்

பெண் மானமும் மண் மானமும் காத்த பெரியாரின் போர்வாளே

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

கேளாரும் வேட்ப மொழிந்த வேந்தனே

செம்மொழியின் சீர்குலைத்து ஆங்கிலம்

அரியணையில் அமருகின்ற நாள்வருமோ?

புலியின் முன் எலியெல்லாம் போட்டிடுமோ ஆட்டத்தை

எண்ணிப் பார்க்கையிலே எழுதுவது சிறு அச்சம்

அண்ணாவே மீண்டும்
அழகு தமிழ் மடல் வரைய

வாருங்கள் மீண்டும் வளமாகும் தமிழகம்

- நல்லாசிரியர் தி கீதா முசிரி.

053.

அண்ணாவிற்கு  ஓர் மடல்.

அண்ணா..பேரறிஞர் பெரும் தலைவா..வணக்கம்.!

கடலில் எழும்  தென்றல்
                         இசைபாட
கடலலைகள் தாலாட்ட
   அணையா விளக்காய்
கடற்கரையில்
உறங்குகிறாய் அண்ணா..

வடக்கு வாழ்கிறது தெற்குதேய்கிறது .-நீ
கண்டகனவெல்லாம் நிறைவேற்ற எழுந்துவா..அண்ணா..

பெரியாரின் பகுத்தறிவுப்பாசறையில்
பேரறிஞர் பெருந்தகையே..நீ
களங்கரைவிளக்கமானாய்.!

கயவர்கள் மக்களிடம்புகுத்திய
மடமைதனை
சுயமரியாதைக்கொள்கையினால் தவிடு பொடியாக்கினாய்!

ஆட்சியிலமர்ந்தால் கொண்ட
இலட்சியமடையலாமெ
                                      ன
அடிமை ஆட்சியை அகற்றி
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாய்.!

தமிழனின் தன்மானம்
காக்க தமிழ் மண்னை
தமிழ்நாடாக்கி மதராசு
            மாகாணத்தை
     விரட்டியடித்தாய்.!

வாய்மையே வெல்லுமென்று
   தமிழ்மொழிகாத்த
தாய் உள்ளம் கொண்ட
தென்னாட்டு காந்தி.!

இருமொழிக்கொள்கை
இந்தி எதிர்ப்பு
ஒன்றிய அரசில் கூட்டாட்சி
தமிழ் நாட்டில் சுயாட்சி என்று
ஓர்விரல் காட்டி ஆணையிட்டாய் அண்ணா..
ஓராண்டே நல்லாட்சிதந்து
ஏன்பறந்து சென்றாய்?..நீ
ஏற்றுநடத்தியபொற்கால
ஆட்சி இன்று
புறையோடிக்கிடக்குது
அண்ணா..!

உன்உருவம் பொறித்த
      மோதிரக்கைவிரல்க
                                   ளால்
மண்சோறு சாப்பிடும்
                  அவலம்.
உன்உருவப் பதாகை
ஏந்தி பால்காவடி
பன்னீர்காவடியெடுத்து
அலகு குத்தும் அவலம்.!

படி அரிசிபோட்டகாலம்
         உன்காலம்
பிடி வாய்க்கரிசி போடும்
      இக் காலம்.
ஏழையின் சிரிப்பில்
இறைவன் சிரிக்கின்றான்
ஏழையின் வயிற்று
எரிச்சல் கண்டு
இறைவன் ரசிக்கின்றான்.!
எழுந்து வா..அண்ணா..!

முனைவர்  கவிஞர்
அ.சை.தஸ்தகீர்.
திருச்சி.

054.

அண்ணாவிற்கு ஓர் கடிதம்.                                    

அண்ணா அறிவுக்கு ஆலயம் ஆவாரே!!!!                 

ஏழைகளுக்கு குரல் கொடுத்த உத்தமரே!!!           

மடை திறந்த வெள்ளமென பேச்சாற்றல் கொண்டவரே!!!                     

கடமை கண்ணியம் கட்டுப்பாடை போதித்தவரே!!!                   

திராவிடத்தின் உயர்வுக்கு பாடு பட்டவரே!!!                                       

அறிஞர் அண்ணாவென ஆசையோடு அழைப்போமே!!!                    

எம்.ஜி.யாரின் இதயக்கனியாக இருந்தவரே!!!                         

பெரியாரின் முற்போக்கினை ஏற்று நடந்தவரே!!!                        

உன்னையே நீஅறிவாய் என்று சொன்னவரே!!!!        

காஞ்சிமா நகரம் தந்த தங்கமே!!!!                               

பகட்டு வேசம் போடாத நல்லவரே!!!                             

வெற்றிலைப் பாக்கை ரசித்து உண்டவரே!!!           

வேலைக்காரி எனும் புரட்சிநாடகம் தந்தவரே!!!     

வடநாட்டாரின் இந்தி திணிப்பை எதிர்த்தவரே!!!                       

மற்றவருக்கு கலங்கரை விளக்காக நின்றவரே!!!      

அரசியலில் கரை படியாத கையரே!!!               

பகுத்தறிவுப் பாதையில் அயராமல் சென்றவரே!!! 

தமிழ்நாடு என்ற பெயரைத் தந்தவரே!!!       

உண்மை உரைப்பதில் வல்லவர் நீரே!!!                   

சொல்லாற்றலால் எல்லோரையும் மயங்க வைத்தவரே!!!!                   

தென்னாட்டு காந்தியென வடநாட்டாரையே புகழ வைத்தவரே!!!                      

கன்னல் தமிழுக்கு படைப்புகளைத் தந்தவரே!!!                             

உமக்கு ஓர் கடிதம் எழுதிடவே!!!                             

என்ன தவம் நான் செய்திட்டேன்!!!!         

      

- சித்திரக்கவி முனைவர் பீ.ரகமத் பீபி,திருவையாறு.

055.

அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு

 விருது போட்டி

கவிதை தலைப்பு

அண்ணாவிற்கு ஓர் மடல்

அண்ணா அண்ணா
அறிஞர் அண்ணா

அன்புள்ளம் கொண்ட அறிவு அண்ணா

எங்களுக்காக
          பிறந்தீரோ

எங்களுக்காக
          வளர்ந்தீரோ

எங்களை வாழ
      வைத்த பிறப்போ

எங்களுக்கு வழி
     காட்ட வந்தவரோ

காலங்கள் மாறினும்
     கோலங்கள்
                     மாறினும்

காட்சிகள் மாறினும்
         காவியங்கள்
                படைப்பினும்

காந்த அலையாய்
 காத்ததுமே உம் கண்

 

எத்தனை முறை
எத்தனை பேர்

வந்தாலும் நீ
வருவதை போல்

ஆகுமா உன்
ஆளுகை அரசாட்சி

ஆணவம் இல்லா
         உன் தனி திறன்

ஆட்சி செய்த வீரமும்
                  தைரியமும்

ஆராய்ந்த  அமைதி
 அளவிலான பற்று

சொல்லொண்ணா
     உன் துயரமும்

சொல்லியும் புரியுமா
        நம் மட்கட்கு

வேகமும் விவேகமும்
வேடனுக்கு தான்


புரியுமா இப்
புவி உலகில்

புன்னகை மன்னா
புரிதலின் பண்பா

நாளை நமதென்பாய்
நற்பலன்கள் பல

செய்தாய் செயல்கள்
செயற்கரிய நாயகன்
 
செந்தமிழ் செல்வன்
செவி சாய்த்து

மக்கள் குரல்
             கொடுத்து நல்

மனிதனாக வாழ
           கற்று தந்த

மா தலைவனே
   மாணிக்கம் ஆனாய்

மாசற்ற இதயத்துக்கு
மாண்புமிகு தலைவா

மனித குலத்தின்
மகத்தான ஆசான்

உன்னுடைய பிறந்த     
        நாள் நன்நாள்

உன் புகழ் வாழ்க
                     என்றும்
உன் பெயர்
      ஓங்கி வளற

வாழ்த்துகிறேன் உன்
  வான் தமிழ் உயர

   என்றும் அன்புடன்
-ஜா வசந்தி சோமரசன்பேட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

056.

அண்ணாவிற்கு ஒரு மடல்

 ஆசிரியப்பா

காஞ்சியில் பிறந்த காவிய தலைவன்
அஞ்சாது வாழ்ந்த அறநெறி கலைஞன்
கல்வியின் பயனை கருத்தாய் வைத்தார்
தோல்வி நீக்கிட தொண்டினை தைத்தார்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு மூச்சு
 மடமை நீக்கிடும் அண்ணாவின் பேச்சு
தமிழ் உணர்வினை தனக்குள் உணர்ந்தார்
அமிழ்தினும் இனிய தமிழை புணர்ந்தார்

எளியவரின் வாழ்வில் வழியாய் வந்தார்
ஒளியாய் இருக்க வெளிச்சம் தந்தார்
சாதி சடங்கினை முற்றிலும் வெறுத்தார்
நீதி வென்றிட பொய்மை மறுத்தார்

நேர்மை பாதையில் நித்தம் நடந்தார்
பார் புகழும் படைப்புகள் தந்தார்
பெண்ணடிமை நீக்கிட பாடுகள் பட்டார்
மண்ணினம் காத்திட உரிமைகள் கேட்டார்

பெரியார் வழியில் திட்டம் வகுத்தார்
அரிதான செயல்களை அவணியில் பகுத்தார்
அரசியலில் சாதித்த ஆளுமை நெஞ்சம்
அரணாய் தமிழுக்கு அமைந்திட்ட மஞ்சம்

படைப்புகள் அண்ணா புகழினை சொல்லும்
தடைகள் கண்ட மனம் வெல்லும்
அண்ணா வழியில் அறம் செய்
கண்ணாக நாட்டை காப்பதே மெய்

திருமதி அ கனகவள்ளி
காரைக்கால்.

057.

அண்ணாவிற்கு ஓர் மடல்

தமிழகத்தின் முதலாவது முதல்வரே!
திராவிடக் கட்சியின் தலைவரே!

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவரே!
மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரே!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவரே!
இராணி அம்மையாரை மணம் புரிந்தவரே!

பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவரே!
தமிழிலும் , ஆங்கிலத்திலும் சொற்பொழிவு ஆற்றுபவரே!

பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களை எழுதியவரே!
கடமை,கண்ணியம், கட்டுப்பாட்டை முன்மொழிந்தவரே!

நீதிக்கட்சி பத்திரிக்கையின் உதவி ஆசிரியரே !
53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவரே!

தமிழ் நாடு  என்று பெயர் சூட்டிய அண்ணலே !
மக்கள் அனைவராலும் பாராட்டுபெற்ற பேச்சாளரே!

சுபப் பெல்லோஷிப் விருது பெற்ற மன்னனே !
நல்ல தம்பி திரைப்படத்தை அரங்கேற்றிய அண்ணாவே !

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நாயகனே !
பெரியாருடன் சேர்ந்து பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவரே!

எதிரிகளிடம் கூட அன்பும் , மரியாதையும் செலுத்துபவரே!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் ....!என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்....
என்றும் .....   என்றென்றும் .... அண்ணாவைப் போற்றுவோம்.

பெ. ராஜலட்சுமி M.A;B.Ed;
இராஜபாளையம்,
விருதுநகர்.

058.

அண்ணாவிற்கு ஓர் மடல்


சமூகத்திற்கு  பாடுபட்ட காஞ்சி அண்ணா!

நேர்மை உள்ளத்தோடு இறைவனிடம் வாதடுபவர்!

தமிழ்நாடு என்று முத்திரை பதித்தவரே!

ஆடம்பரம் இல்லா
கடும் வார்த்தையும் பேசா!

மனிதநேயமும்  நூல்ஓதும் பெரிதும் மிக்கவரே!

கலப்பு திருமணமும்
தங்க விருதும் அளித்தவரே!

சீரணி அமைப்பு
ஒருங்கிணைத்த அண்ணா!

விதவை திருமணமும்
வேலை வாய்ப்பும்!

கடற்கரைச் சாலையில் தமிழரின் சிலை!

புற்றுநோய் அரக்கனால்
வாடிய அண்ணா

கின்னஸ் உலக சாதனை படைத்த உள்ளம்!

இவ்வுலகை விட்டு நீங்கினாலும்

நினைவுகளும் தொண்டுகளும் என்றும் அழியா !


  மா.ராதா ஆசிரியர்
 ஊ.ஒ.தொ.பள்ளி
நாகர்கூடல்
தருமபுரி மாவட்டம்.

059.

அண்ணாவிற்கு ஒரு மடல்...


பேரறிஞர் அண்ணா
உமக்கு என் அன்பு வணக்கம்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என
நாட்டிற்கு உழைத்த நீ அமைதியாக
கடற்கரையில்
கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறாய்

அனைவரையும்
அண்ணன் தம்பி என்ற உறவுநிலையை நிலைநாட்டினாய்

உமது அறிவாற்றல் பன்முகம் கொண்டது

உன்பேச்சாற்றலுக்கு அனைவரும் அடிமை.

உனது பேச்சிநடையே ஒரு கவிதை.

தமிழ்நாடு வாய்மையேவெல்லும்
வானொலி இவையெல்லாம்
உன்னால் மாற்றம்
பெற்றவை..

திராவிடத்தில் மூழ்கி முத்தாய்ப்பாய்த்
திகழ்ந்தாய்

இந்த உலகம் உள்ளவரை
உன் பேரும் புகழும்
என்றும் நிலைத்திருக்கும்...

 

முனைவர் கி.ஏழுமலை

 

அணுக்குமலை கிராமம்
திருவண்ணாமலை மாவட்டம்

060.

அண்ணாவிற்கு ஓர் மடல்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவரே

 பச்சைத் தமிழனாய் வலம் வந்தவரே.

தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும்

தணியாத காதல் என்றும் கொண்டவரே.

உனக்காய் நான் இத்தினத்தில் எழுதுகிறேனே.

வாழ்த்துக் கவிதை மடல் இதோ:

அண்ணா என்று அன்போடு அழைக்கப்படுபவரே

தமிழகத்தின் தன்னிகரில்லாத தமிழ்ப் பெருந்தகையே‌.

நற்றமிழால் நல் வணக்கம் நல்கிறேனே

 நா மகிழ்கின்றேனே அகம் மகிழ்கின்றேனே.

நானிலமே போற்றும் தென்னாட்டின் பெர்னாட்ஷாவே.

நீர் அறிவித்த முத்தான மூன்று திட்டங்களே.

நம் தமிழகத்தின் தித்திப்பான திட்டங்களே.

முதல் திட்டமே மாநிலம் பெயர் மாற்றமே.

சென்னை மாகாணம் தமிழ்நாடென்னும் பெயர் பெற்றதே.

தமிழ் மக்களுக்குப் பெருமையைத் தந்ததே.

இரண்டாவது இந்தியற்ற இருமொழிக் கொள்கையே.

அன்னைத் தமிழைக் காத்த திட்டமே.

மூன்றாவது சுயமரியாதை திருமணத் திட்டமே.

தமிழர்களின் வாழ்விலே சுயமரியாதையைக் காத்ததே.

இரண்டாண்டு ஆட்சியாம்  உம் ஆட்சியே.

இன்றளவும் பேசப்படுதே உமது ஆட்சியே.

தமிழ்த் தரணியிலாண்ட தமிழனின் ஆட்சியே.

தன்னிகரில்லாத் தமிழ்த் தலைவராய்த் திகழ்ந்தவரே.

காஞ்சிபுரத்திலிருந்து வந்த தமிழ்ப் பெருமகனாரே

மீண்டுமோர் பிறப்பெடுத்து மீண்டு வாரீர்.

தமிழ் ஆட்சியை நல்கிட வாரீர்.

உம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

க.ஹெலன்,
ஊர்: காயல்பட்டணம்.

061.

அண்ணாவிற்கு ஓர் மடல்!

நாடாளும் தலைவன் ஆன போதும்!
 நின் வாழ்வில் என்றும் எளிமையாய்! பதவியில் நீரோ உயர்வு ஆனாலும்! பழக்கத்தில் நீரோ என்றும் தன்மையாய்!
 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என! கட்டுக்கோப்பான வாழ்வியலுக்கு எடுத்துக்காட்டு ஆனீரே!..

 நாடகக் கலை நெசவுக் கலையென! கல்வி அறிவோடு  கலைகளையும் பயின்றீரே!
 பட்டப்படிப்போடு டாக்டர் பட்டமும் வென்றீரே!
 வேலைக்காரி, ஓர் இரவு
 நாடகங்களில் தனி முத்திரை பதித்தீரே!
 மக்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டீரே!..

 அன்னம் என்னும் அமுதோடு நல்லறிவையும்!
 ஊட்டி வளர்த்த தொத்தா வழிகாட்டுதலால்!
 நானிலம் போற்றும் கவிஞன் ஆனீர்!
 நானிலத்தை கட்டி ஆளும் அரசனுமானீர்!
 கதை, கவிதை கட்டுரை என!
 ஏடுகள் எல்லாம் உம் புகழ்பாடுதே!..

 பேனா முனையிலே புதுபாரதம் படைத்தீர்!
 மடமை இருளகற்றி மெய்யான ஒளிதந்தீர்!
 பெரியார் கொள்கைகளை போற்றி வளர்த்தவரே!
 கறைப்படியாத நின் அரசியல் வாழ்வை! பயிலாத  அரசியல் தொடக்கமுண்டோ இதுவரை!
 அண்ணா அண்ணா எங்கள் அண்ணா!

பத்திரிக்கை நிருபர்
ச.கலைச்செல்வி
திருப்பூர்.

062.

பேரறிஞர் அண்ணாவிற்கு அன்பு மடல்.

காஞ்சிபுரத்தில் வந்துதித்த காவிய நாயகனே!.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்த முத்தமிழே!.

கல்லூரிப் படிப்பை பச்சையப்பனில் படித்தவரே!.

கடமை,கண்ணியம், கட்டுப்பாட்டோடு பயணித்தவரே!.

சிறந்த நூல்களைப் படிப்பதில் வல்லவரே!.

சொற்பொழிவாற்றி சொற்களால் மக்களை ஈர்த்தவரே!.

தத்துவங்களை அள்ளித் தெளித்த வித்தகரே!.

திராவிடநாடு வார இதழின் ஆசிரியரே!.

நீதிக்கட்சியில் சேர்ந்து தொண்டு புரிந்தவரே!.

அன்னைக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவரே!.

அன்பும்,அரவணைப்பும் கொண்ட பேரறிஞரே!.

அரசியலில் பெரியாரின் துடிப்பாய் வளர்ந்தவரே!.

ஆசிரியர் பணியை
அறப்பணியாய் செய்தவரே!.

ஆன்ற பெருமை நிறைந்த ஆட்சியாளரே!.

இயல், இசை,நாடகத்தின் தனிச்சிறப்பே!.

இந்தி எதிர்த்து போராடி
முறியடித்தவரே!.

ஈத்துவக்கும் புன்னகையை தன்னுள் விதைத்திட்டவரே!.

உலகம் போற்றும் உன்னதப் பேச்சாளரே!.

உருவம் குள்ளமாயினும் உயரத்தைத் தொட்டவரே!.

எழுச்சிமிகு எண்ணங்களை நற்சிந்தனையாய் செதுக்கியவரே!.

எழுத்துப் பணியில் நகராட்சியில் பணிபுரிந்தவரே!.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்,
ஏற்றத்தாழ்வுகளை நீக்கி
வையம் உய்வுற உழைத்தவரே!.

ஐம்பொறிகளையும் சீராக இயக்கிய இமயமே!.

ஒன்றுபட்டு வாழ வழி வகுத்தவரே!.

ஓரினமாய் மக்கள் சிறப்புற சிந்தித்தவரே!.

ஔவியம் இல்லா வெற்றிநடை போட்டவரே!.

அன்றும் இன்றும் என்றும் புன்சிரிப்போடு
அகிலத்தை ஆள்பவரே!.

தங்களது பிறந்தநாளில்
கவிமடல் வரைய வாய்ப்பு கிடைத்தமைக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

கவிஞர். முனைவர்.
ச.மீனாட்சி,ப.ஆ (ஆ),
தாரமங்கலம், சேலம்,
636502.

063.

அண்ணாவிற்கு ஒரு மடல்...

முத்தமிழ் அறிஞனே தமிழகத்தின் முதல்வனே

சொத்தெனவே இலக்கியத்தை ஏந்திட்ட பெருமகனே
தத்தாக தமிழன்னை தத்தெடுத்த தலைமகனே

முத்தான கவிதைகளை சொத்தாகத் தந்தவரே!

பகுத்தறிவு கிழவனுடன் பழகிய பைந்தமிழே

வகுத்த பெரியாரின்வழி வலிவுடனே நடந்தவரே

தொகுத்த பலசட்டமதை திட்டமென அளித்தவரே

உகுத்த எளியோரின் கண்ணீர்துடைத்த பெருந்தமிழ்மகனே!

அரசியலில் ஆளுமையாய் இன்றும் நிலைநிற்பவரே

முரசுகொட்டி உனதுபெயர் முழங்குதய்யா அனைத்துக்கட்சி

உரசலில்லா அரசியலை உன்னதமாய்த் தந்தவரே

அரசேட்டில் தாய்நாட்டின் பெயர்தனையே மாற்றியவரே!

இருமொழியில் அரிதான மொழிப்புலமை பெற்றவரே

வருமொழியை வந்தேறாது முளையினிலே தடுத்தவரே

உருவகத்தில் உனக்கெவரும் ஈடில்லை உத்தமரே

திருவுளத்தால் மக்கள்நெஞ்சில் நீங்காத மன்னவரே!

சந்தங்களை சொல்நடையாய்க் கொண்ட மொழிவித்தகரே

விந்தையிலும் விந்தையய்யா உமதறிவு ஆளுமையே

எந்தையரின் தலைவனென இருந்திட்ட செழுந்தமிழே

நுந்தை மடல்களுமே செப்புதய்யா உம்புலமை!

பேரறிஞர் என்றுபெயர் கொண்டவரே எங்கள்அண்ணா

யாரறிவும் துணையின்றி தனித்தாண்ட பெருந்தகையே

வேரறுத்தே இந்தியினை விலக்கிவைக்க வீரத்துடன்

சாரதியாய் களமதிலே எதிர்நின்ற கோமகனே!

த.தமிழ்ப்பூங்குன்றன்
குமரலிங்கம்.

064.

கவி சிறகு விருது போட்டி

கவிதை தலைப்பு
அண்ணாவிற்கு ஓர் மடல்

அண்ணா போல்       
      தமிழகத்தில்
            யார் உண்டு

அகிலமே புகழ்ந்தது
        அவரைக் கண்டு

மன்னராக வந்ததை
    நாடே கண்டது

மகிழாதோர்
                 யாருண்டு
        சொல்க இன்று

கன்னத்தில்
               குறுஞ்சிரிப்பு
       திகழும் அன்று

கருத்துக்கள்
          அடுக்குமொழி
      பேச்சு கற்கண்டு

எண்ணம் எல்லாம் தமிழே நாடே என்று

ஏராள நன்மைகள் செய்தார் என்று

விண்நதிரும் கைதட்டல் உண்டு அவருக்கு

விவரங்கள் தருவாரே உவகை கொண்டு

தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணா என்று

திசைகளும் போற்றிய வரலாறு உண்டு

இந்நாட்டு இங்கர்சால் என்றே புகழ்ந்த

புதுமொழிகள்  புகழ்மொழிகள்
அவருக்கு உண்டு

எந்நாளும் எளிமையாய் வாழ்ந்து அன்று

தென்னாட்டு காந்தியாய்
திகழ்ந்தார் வென்று

இந்நாட்டை தமிழ்நாடு என்று ஆக்கி

தமிழத்தாயைகுளிர வைத்தார் தீங்குநீக்கி

மண்ணாலும் மன்னனாய் இருந்த போதும்

மக்களே மகேசன் என்றே வாழ்ந்தார்

கண்ணாலும் கருத்தாலும் ஊழல் இன்றி

கண்ணியமே புண்ணியமே என்றே மொழிந்தார்

அன்புள்ள ராணி அண்ணி போதுமென்றே

அளவுடனே தன் வாழ்வை அலங்கரித்தார்

திண்ணியராய் சத்தியத்தை தனது வாழ்வில்

எண்ணியவராய் இரும்பாக இருந்து மறைந்தார்

எண்ணிலா புத்தகத்தை எழுதி வைத்தார்

ஏற்றமிகு பகுத்தறிவு இருத்தி வைத்தார்

தன்வாழ்வில் ஈவேரா வணங்கி நின்றார்

தலைவணங்கும் தலைவராய் சிறந்த நின்றார்

மண்பூமி  காணாத
நாடகம் எல்லாம்

மக்களுக்காய் நடத்தியே விடியல் தந்தார்

பொன்னாசை மன்னாசை புறம்பே தள்ளி

பொதுநலமே தன் நலமாய் புகுத்தி வாழ்ந்தார்

இந்நாளில் நாம் கொள்வோம்
ஒரு சபதம்

அண்ணாவின் பொற்காலம் கொணர்வோம் என்று

என்றும்  உம் நினைவில்
    கி ஜான் வில்லியம்
      திருச்சிராப்பள்ளி.

065.

அண்ணாவிற்கு ஒரு மடல்

ஆடை உலகில் அற்புதமாம் காஞ்சிபுரம்.

 காஞ்சிபுர அற்புதராம் அண்ணாதுரை.

 தமிழரின் உடன்பிறவா சகோதரர் .

சமூக நீதிக்காக அரும்பாடுபட்டவர்.

பெண்களும் குடும்பச் சூழலில் இருந்து,
 
எழுத்து உலகிலும் அறிவுலகிலும் பெயர் பெற,

 வாய்ப்பினை ஏற்படுத்திய புரட்சியாளர்.

 பச்சையப்பன் கல்லூரியின் முதுகலைப் பயனாளி .

மக்கள் மனதில் நீங்கா இடம்பெறும்

அடுக்கு நடைக்குச் சொந்தக்காரர்.

நாவல் , நாடகம், சிறுகதை, கட்டுரை என்னும்

நவீன எழுத்துலகின் சொந்தக்காரர்.

 பகுத்தறிவை நோக்கிய பயணத்திற்கும்

 கைத்தடியாகியது புராண மதங்களே.,

 புராணங்களில் தேவர்களாக நடமாடுபவர்களின்

 லீலைகளை, எடுத்துரைப்பதற்கே தேவலீலைகள் .

மனித வாழ்வில் குடும்பம், காதல்,

 விருப்பு, வெறுப்பு, திருப்பம் என்ற உணர்வுகளை

 ஒழுங்காக்கவே குமரிக்கோட்டம்.

 மக்களின் பகுத்தறிவைக் கூர்மைப்படுத்தி,

 சிந்தனை சிறக்கவே நீதிதேவன் மயக்கம்.

 எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவிலும்

 தடம்பதித்தச் செம்மலே நின்புகழ்,

பாரெங்கும் ஓங்கட்டும். நீடூழி வாழ்வாயாக!

- முனைவர் .சு .ஏஞ்சல் லதா ,

வாவு வஜீஹா வனிதையர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

காயல்பட்டினம்.

066.

அறிஞர் அண்ணா இனி ஒரு நாள் நீ வந்தால்.......


மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ் ஆண்டதே!

கடவுள் பெயரால் பதவியேற்ற இறையே

தமிழ்நாடு பெயர் தந்த தங்கமே

அண்ணாயெனும் தாரகமே மக்களின் உயிர்மூச்சே

பெரியார் போற்றிட்ட அன்பு சீடரே!

உதவாத பழமை உடைந்த பானை

மூட நம்பிக்கை   திசையறியா  பாதை

ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கிய அன்னபூரணியே

நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்த அரசனே

கலப்புத் திருமணத்திற்கு ஊக்கமளித்த ஊன்றுகோலே

இலவச கல்வி அளித்த படைப்பாளியே படிப்பாளியே

 பேருந்துகளை அரசுடைமையாக்கிய அனைவரின் அன்பரே

 அழகு தமிழ் மயிலை ஆட வைத்தவரே

 கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக் குடித்தவரே

 அறுவை சிகிச்சையிலும் புத்தகம் படித்தவரே

 எளிமையின் உருவம் ஏழைகளின் பங்காளனே

இப்படி  புனிதரான ஒரு முதல்வர்

யாரும் கண்டதில்லை இனிமேலும் காண்பதற்கில்லை

 இனி ஒரு நாள் நீ வந்தால் ......

மனித குலம் முழுவதும் உன்னிடம் மண்டியிடும்

 மூடப்பழக்கமெல்லாம் பூண்டோடு அழிந்து விடும்

 உடைமைகளாய் நீ தந்த மந்திர சொற்கள் வந்துவிடும்

 அண்ணனென உடன்பிறப்பானாய் ஆட்கொள்ளும் பேரின்பமானாய்

 அமுதே என் ஆருயிரே அழைக்கின்றோம் வந்திடுக

எழுதுகின்ற கோல் கொண்டு அழைக்கின்றோம்

எழுந்து ஒரு நாள் வந்திடுக

 இனி ஒரு நாள் நீ வந்தால் .....

இலக்கியம் பெருகிடும் உலகில்

 இறைமை தங்கிடும் உலகில் ...

இனி ஒரு நாள்  வந்தருள்க  .....வாழ்வு தந்தருள்க.......

ஆ ரொசாரியோ ராணி உசிலம்பட்டி.

 

067.

அறிஞர் அண்ணா அவர்களுக்கு ஒரு கடிதம் ஒரு
 
அறிஞர் என்னும் சொற்பொருளுக்கு உரியவராய். அண்ணா என்னும் உறவுக்கு பெருமை தந்தவராய் வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.
 
பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1909ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் 15 ஆம் நான் பிறந்தார்
.
 இவரது தந்தை நடராஜன். தாயார் பங்காரு அம்மாள் ஆவார்.

அண்ணா தனது 21 ஆம் வயதில் இராணி அம்மையாரை மனம் புரிந்தார்
 
காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று எம்.ஏ
. பட்டம் பெற்றார்.
 
தந்தை பெரியாருடன் இணைந்து பகுத்தறிவுக்கு கொள்கையை பரப்பினார். சாதி எதிர்ப்பு.
 மூடநம்பிக்கை ஒழிப்பு. மொழி பாதுகாப்பு ஆகிய பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். கடமை. கண்ணியம். கட்டுப்பாடு என்னும் கோட்பாடுகளை வலியுறுத்தினார்.
 
1967-ல் நடைபெற்ற பொது  தேர்தலில் வெற்றி பெற்று. அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார்.
 
மதராஸ் மாநிலம் என்றறிந்த சென்னை மாகாணத்தை. தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
 
புற்று நோய்க்கு ஆளான அவர். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார்.


-அமுதா நாகராஜன் கோவை.

068.

அறிஞர் அண்ணா
மண்ணில் பிறந்தவர்கள் தன்னலமற்றறவர்கள் சிலர்

பிறர்கென வாழ்க்கை போற்றுதலுக்கும் சிலரே

மக்கள் மனதில் வாழ்பவரும் சிலரே

நாட்டுக்காக தியாக செம்மலும் சிலரே

நட்பின் அன்புடனும் நன்பனும் சிலரே

உயிர்மூச்சின் தாரக மந்திரமும் சிலரே

அண்ணா எற்றறொரு அற்புதமும் நீரே

நாட்டுக்காக வாந்த தூய மாமனிதரே

பகுத்தறிந்த அறிஞர் அன்பிற்குறியவரே

பாசத்தால் அகிலத்தை கட்டிபோட்டோரே

தூய மா மனித தூயவரே

மீண்டும் எழுந்து வாருங்கள் உலகில்

நல்லதொரு சட்டங்கள் விதைத்திடுங்கள்

நெறியாளர் இல்லாத கரம்பு நிலம்போல

மாறும் நிவையை மாற்றிடவே வாருங்கள்.

அண்ணா உம் புகழ் வாழ்க.

-பா.வெண்ணிலா பாலாஜி நெய்வேலி.

069.

அறிஞர் அண்ணாவுக்கு
வணக்கம் ????

கடிதம் எழுதிடக் காத்திருக்கும் கரங்களே

கருத்துகளை வாசித்திட தவமிருக்கும் பலவிழிகளே

செவ்வாழையடி வாழையாக செந்தமிழ் தழைத்திட

செங்கரும்பின் தீஞ்சுவையாய் தமிழமுதம் தந்தவரே!

கவிமழையாய் பெருவெள்ளமாய்
படைப்புகள் பலதந்திட்ட

புன்னகை தவழ்ந்திடும் பிரம்மநாயகமே!

வெள்ளை மாளிகையும் விரும்பிடும் நல்உளமாய்

சொர்க்கத்தின் நகரமாய்
தமிழகம் அமைத்திட்ட

ராஜாதி ராஜாவே
ராஜனுக்கும் அதிபதியே!

கலிநிறை அரசியலின் ஓர் இரவில்

இன்ப ஒளியாய் உதித்த அண்ணலே!

சொர்க்கத்தின் வாசலுக்கு முகவரி தந்தவரே!

கண்ணீர்த்துளிகளோடு
தொடர்கிறேன் எனது கடிதத்தை..

மருகிவரும் அரசியலின்
புனிதம் காத்திட

மடைதிறந்த வெள்ளமாய்
தமிழருவி பாய்ந்திட

மருகிவரும் அரசியலின்
புனிதம் காத்திட

மீண்டும் வருவாயோ?
மீண்டு நீ வருவாயோ?

காத்திருக்கின்றேன் ஆவலுடன் நான்...

செவிலியசகோதரி
இர.பாக்யலட்சுமிசுந்தரம்
கோவை.

070.

அண்ணாவிற்கு ஓர் மடல்..!

நலம் நலமறிய ஆவல்..!
எப்படி அழைப்பது..?
அண்ணா என்றழைப்பில்
மூத்தோனாய் யாவருக்கும்..!

காஞ்சியில் பிறந்தாய்
கைத்தறியில் வளர்ந்தாய்
களையெடுக்க ப(ர)றந்தாய்
கலைத்தமிழில் சிறந்தாய்..!

அடுக்கு மொழியின் பிறப்பிடம் நீ..!
முத்தமிழின் மூத்த சிறப்பிடம் நீ..!
தமிழ் மறவா இருப்பிடம் நீ..!
திராவிடத்தின் குரு பீடம் நீ..!

"ஏனென்றால்" சொல்லுக்கு
இலக்கணம் படைத்தவன் நீ..!
திராவிடம் துண்டுகட்டி
தலைக்கனம் உடைத்தவன் நீ..!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
தமிழுக்கும்,திராவிடத்திற்க்கும் நீ தட்டுப்பாடு..!

பெரியார் வழி வந்தாய்
பெரும் ஆறாய் நின்றாய்
மதராசு வேறாய்த் தந்தாய்
மகராசனாய் மனம் வென்றாய்..!

தமிழ்நாடு உன்னாலே சாத்தியம்
எவருண்டு உன்னிகர் சத்தியம்
சிறைகள் பேசும் உன் வரவை
இந்த சிறகுகளும் பேசும்
பறந்தே உயர்வாய் என்றும்..!

- கவிஞர்.வினோ,
திருச்செங்கோடு.

071.

அறிஞர் அண்ணாவைப் போற்றுவோம்.

காஞ்சி ஈன்ற காவிய நாயகனே
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட சூரியனே
தமிழ்நாடென பேர்வைத்த பேரறிஞரே
சுட்டெரிக்கும் விழிகளால் சாதி சழக்குகளை எரித்தவரே!  சமுதாய சடங்குகளை எதிர்த்தவரே !
பட்டெனத் தெறிக்கும்  சொற்களாய் வாய்ப் பேச்சில் வாள் சுழற்றிய  வார்த்தை வீரனே
அடித்தட்டு மக்களின் அடிவயிற்றுப் பசி போக்க படியளந்த பெருமாளே!
தமிழ்நாடு என தனிப்பெயர் சூட்டிய திருமாலே!
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த  ஏகலைவனே
எப்போதும் தப்பாமல்  பேசும் பேச்சாளரே
அடுக்கு மொழியில்  நீர் அள்ளியெறிந்த சொற்கள்  மக்களின் உணர்வில் ஒளி பாய்ச்சும் வைரக் கற்கள்
கடமை கண்ணியம் காத்த புண்ணியவான் நீர்
பெண்ணியம் போற்றிய கண்ணியவான் !
முத்தமிழறிஞரை தமிழக சொத்தாக்கிய வித்தகரே
தலைவரை அண்ணா என அழைக்க வைத்த முத்தமிழே...
பாகு வெல்லப் பேச்சுக்காரா பாங்கான தீந்தமிழ் மூச்சுக்காரா .
வேலைக்காரியை உலகம் படிக்க வைத்த பண்பாளரே
ஓர் இரவில் மக்களை திருத்திய மாண்பாளரே...உமதிந்த பிறந்த நாளில் ..வாயார வாழ்த்துகிறோம்...வானளவு வணங்குகிறோம்

திருமதி.இள.செல்வமணி
தலைமைஆசிரியை
ஊ.ஒ.தொ.பள்ளி,சித்தமல்லி.
திருவாரூர் - மாவட்டம்.

 

072.

அறிஞர் அண்ணா

சமூக நீதியை உயர்த்திய அண்ணா

மாநில உரிமைக்கு போராடிய அண்ணா


 மொழி உரிமைக்காக பாடுபட்ட அண்ணா

 பன்முக திறமையாளரான பேரறிஞர் அண்ணா

 தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்தியவரே

 சமூக நீதிக் கொள்கைகளை மாணவருக்கு புகுத்தியவரே


 சாதி ஏற்றத்தாழ்வு களைய உழைத்தவரே

 பெரியார் வழியில் வாழ்வை வாழ்ந்தவரே


 தமிழை அழிக்க நினைத்தவரை அதிர வைத்தவரே


 மக்கள் செல்வாக்கு மிகவும் பெற்றவரே

 அழகிய தமிழகத்தில் முதலமைச்சர் ஆனவரே


 தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவரே

முன்மொழி கொள்கைக்கு முற்றிலும் எதிரானவரே


 இறுதி சடங்கில் லட்சக்கணக்கான மக்களை பெற்றவரே


 தங்களது கொள்கைகளை அழகாய் வெளிப்படுத்தியவரே


 சமத்துவத்தை காக்க உதவிய அண்ணாவே


 இசைப்பேரரசி
லதா சங்கரன் சென்னை.

 

073.

அண்ணாவிற்கு  ஓர்  மடல்


எங்கள் அண்ணாவிற்கு ஓர் மடல்

எழுதுகிறோம் அவரின் அன்புக்கு காணிக்கையாக்கிறோம்

தமிழ் தாயின் தவ புதல்வன்

தன்னிகரற்ற தமிழன் அறிஞர் அண்ணா

தமிழின் எழுச்சி சுடர் அண்ணா

தமிழின் எழுச்சி காவியம் அண்ணா

தமிழ்மக்களின் அசையா சொத்து அண்ணா

பாசமிகு எங்கள் அறிஞர் அண்ணா

தமிழ் அமுதே  எங்கள் அண்ணா

அறிவின் களஞ்சியமே அறிஞர் அண்ணா

ஏழைகளின் தலைவர் அறிஞர் அண்ணா

தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்

தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா

பேச்சாற்றல் மிக்க அறிஞர் அண்ணா

தமிழகத்தின் எழுச்சிமிக்க தலைவர் அண்ணா

வெற்றியின் அடையாளம் அறிஞர் அண்ணா

அண்ணாவின் ஆட்சியே தமிழகத்தின் வரலாறு

காலத்தால் அழியாத புகழ் பெற்ற

காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணா

தமிழகத்தின் இதயத்தின் தூண் அண்ணா

எங்கள் டாக்டர் அறிஞர் அண்ணா

அண்ணா காட்டிய வழியில் நடப்போம்

தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக உருவாக்குவோம்

அறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்கவே

கவிஞர் கணுவாய் கிருஷ்ணமூர்த்தி
கோயம்புத்தூர் மாவட்டம்.

074.

 அண்ணாவிற்கு ஒரு மடல்.

பேரறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்.

பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல

அவர் பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர் .

பெயருக்கு முதல்வர் அல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்.

பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்.

பெரியோரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்.

கருத்து சொல்வதில் மேல் நாட்டவரை வென்றவர்.

கருத்து வேறுபட்ட போதிலும் பெரியாரைப் போற்றியவர்.

அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.

அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்.

குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்.

குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிந்தவர்.

கட்டுரை கவிதை கதை திரைக்கதை வசனம் தந்தவர்

கட்டுக்கடங்காத கற்கண்டு இலக்கியம் படைத்தவர்.

அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர் .

ஓய்வின்றி உழைத்து அழியாப் புகழை சேர்த்தவர்.

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா.

உலகின் முதலாவது பெரிய பேரறிஞர் அண்ணா.

பகுத்தறிவு சிந்தனையை மென்மையாக விதைத்தவர்.

பத்தரை நித்திரை முத்திரை என உழைத்தவர் .

தேர்ச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர். த

மிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்.

வாழ்க அண்ணா புகழ்.


 முனைவர்
ஜோ. ஜெயா
முதல்வர்.
விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்.

75.

அறிஞர் அண்ணாவைப் போற்றுவோம்...

 நடராஜன் பங்காரு அம்மாளுக்கு மகனாகப் பிறந்து/
நாடு போற்றும்  திருமகனாக விளங்கி/
நயம் பட கல்வியினைக் கற்று/
பயமறியா சிங்கமாய் வாழ்வினை வென்றாய்/

தந்தை பெரியாருடன் பகுத்தறிவு கொள்கையை/
தரணியிலே தங்குதடை இன்றி பரப்பி/
மிகுந்த நினைவாற்றல் கொண்டவராய் நாளும்/
மிளிர்கின்றாய் மக்கள் மனதிலே இன்றும்/

தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும்/
தனித்துவ  பேச்சாற்றல் கொண்டே சிறந்தாய்/
சமூக நீதி மாநில உரிமையென/
சமூதாய  மொழியுரிமைக்காக பாடு பட்டாய்/

அன்பும் அறிவும் நிறைந்த புனிதனாக/
ஆற்றலோடு சமூக பணி செய்யுது/
மூடநம்பிக்கையை அகற்ற முழுமூச்சாயிருந்து/
முத்தான சீர்திருத்தவாதியை வணங்குகின்றேன்/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.

076.

அறிஞர் அண்ணாவுக்கு ஒரு மடல்!

இனிய தமிழினத்தின்      
     இளஞ்   சூரியனே!
கனிவோடு அண்ணா வென
      காலமெல்லாம் அழைத்திடுவோம்! (2)

தனிப்பெரும் மேதையே!
     தமிழரின் காவலனே!
நனிநல் ஆட்சியும்
      நல்கிட்ட நாயகனே! (4)

உனக்கு ஒரு மடல்!

போராடும் தமிழினத்தின்
      போர்வாளாய்த் திகழ்ந்திட்டாய்!
போராடும் மக்களெல்லாம்
      போராடியே இன்னமும் (6)

கூராடும் சாதிகளால்
     குழிக்குள்ளே இருக்கின்றார்.
வேரோடிய சாதிநச்சை
      வேரறுப்பார் யாருமில்லையே! (8)

உன்போல் மேடையேறி
     உன்னதமாய்ப்  பேசிட
மண்மீதினில் எவருமிலையே!
      மடமைத்தனையும் மாய்ப்பாரிலையே!(10)

பேதமிகு நாட்டினிலே
    பேரறிவாய்ப்  பேசினீர்!
நாதமென முழக்கியப்
     நாயகராம் பெரியாரின் (12)

வழிதனையே பின்பற்றி
   வாழ்ந்திட்டப்  பேரறிஞர்!
விழிகளிலே நம்பிக்கை
   ஒளியேற்றியச் சீரறிஞர் (14)

மேடைகளில் முழங்கிய
     மேன்மைமிகு தமிழறிஞர்!
பீடுநடை  போட்டுபல
     சொற்பொழிவை ஆற்றியவர் (16)

பகுத்தறிவுப் பெட்டகமாய்
     பெரியாரைப் பின் தொடர்ந்தார்!
தொகுத்தாய்ந்த கடமையும்
      கண்ணியமும் கொள்கையாக (18)

கட்டுப்பாட்டு மரியாதையைக்
     கடைபிடித்த மூதறிஞர்.
எட்டுக்கோடி தமிழரின்
     எழுச்சிக்கு விதையானார்!(20)

அன்னைத்தமிழ் பெருமையை
    அகிலமெங்கும் எடுத்துரைத்தார்.
கன்னல்மொழி பேச்சாலே
    கவர்ந்திழுத்தார் மக்களை! (22)

கத்துகடற்   கரையினிலே
    முத்தமிழ் அறிஞர்களின்
முத்திரையாய்ச் சிலைகளை
      முனைந்தே நிறுவிட்டார் (24)

தத்துவ மேதையை
     தகைசான்ற அண்ணாவை
சொத்தாகக் கொண்டோமே!
     சோர்விலாது போற்றிடுவோம்!(26)

முனைவர் கிருட்டிணதிலகா
போரூர்.
சென்னை.