மனிதருள் மகாத்மா...

காந்தி ஜெயந்தி கவிதை

மனிதருள் மகாத்மா...

மனிதருள் மகாத்மா

பாரதத்து நாட்டிலே
   பார்போற்ற வாழ்ந்தவர்
நம்மை தேசப்பிதே 
   என்றுரைக்க வைத்தவர்

அன்றாட வாழ்வில்
    அல்லும் பகலும்
மக்களுக்கு என்றே
     மகிமை செய்தார்

அகிம்சை நிலையில்
    ஆவதை அறிந்தே
அதையே வாழ்வின்
     கொள்கை ஆக்கினார்

அடுத்தவர் மனதை
     பாதிக்காத வகையில்
தனது செயலை
     மாற்றி அமைத்தார்

எதிரே இருந்தவர்
    கருத்தையும் கேட்டு
வாழ்ந்திடச் சொன்னார்
     வாழ்ந்து காட்டினார்

பெரியோருக்கு மரியாதை
     தந்தே தனது
சிறுவயது முதலாய்
   செயல்முறை செய்தார்

அரிச்சந்திரன் நாடகம்
     அவரது வாழ்வில்
உண்மையே பேசிட
      வைத்தது என்றார்

தனது வரலாறை
     சத்திய சோதனை
புத்தகமாக வெளியிட
      அனுமதி தந்தார்

வாழ்வின் அத்தனை
     நிகழ்வுகள் அனைத்தையும் 
மக்கள் அறிந்திட
     வெளிப்படையாகச் சொன்னார்

மகாத்மா என்றே
     தாகூர் கவிஞர்
மொழிய மக்கள்
     சொல்லும்படி ஆனார்.

கு.கதிரேசன்
திருச்சி.